திங்கள், 22 ஜனவரி, 2018

ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டிதானே வைரமுத்துப் பேசி இருக்கிறார் - இதில் என்ன குற்றம்?

ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டிதானே

வைரமுத்துப் பேசி இருக்கிறார் - இதில் என்ன குற்றம்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  கேள்வி

விசாரணைக்கு இடைக்காலத் தடை

 

சென்னை, ஜன.20 கவிஞர் வைரமுத்து ஆண்டாள்பற்றிக் குறிப்பிடும்பொழுது, மேற்கோள் காட்டியது எப்படித் தவ றாகும்? என்று வினா தொடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மேலும் விசா ரணைக்கு இடைக்காலத் தடையும் விதித் துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஒரு தமிழ் பத்திரிகையில் கடந்த 8-ஆம் தேதி நான் எழுதிய கட்டுரை வெளியானது. அதில், இந்து மக்களால் பெண் தெய்வம் என்று அழைக்கப்படும் ஆண்டாளை அமெரிக்காவை சேர்ந்த ஒரு அறிஞர், தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளார் என்று மேற்கோள் காட்டியிருந்தேன்.

இதையடுத்து நான் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகவும், ஆண் டாளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும், சட்டம்-- - ஒழுங்கு பிரச் சினை ஏற்பட்டதாகவும் கூறி என் மீது சென்னை கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசுவ இந்து பரிசத் அமைப்பின் ஒரு அங்கமான சமுதாய நல்லியக்கப் பேரவையின் நிர் வாகி முருகானந்தம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவறாக சித்தரிப்பு

புகாரில், அமெரிக்க அறிஞரின் ஆய்வு அறிக்கையை குறிப்பிட்டு, ஆண்டாளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக எனக்கு எதிராக அவர் குற்றம்சாட்டியுள் ளார். ஆனால், அந்த கட்டுரையில் ஆண்டாளை பற்றி நான் நல்லவிதமான கருத்துக்களை தான் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால், நான் மேற்கோள்காட்டிய ஆய்வு கட்டுரையை, ஒரு அரசியல் கட்சி யின் நிர்வாகி தவறாக சித்தரித்து பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் கூறும் அந்த கருத்துகள் கட்டுரையில் எந்த ஒரு இடத்திலும் இல்லை. ஆனால், இதன் பின்னர் ஆண்டாள் குறித்த ஆய்வுக் கட்டுரை தவறாக மக்களுக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் என் மீது புகார் செய்யப்பட்டு சட்டத்துக்கு புறம் பாக என் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ரத்துசெய்ய வேண்டும்

நான் ஏற்கெனவே, அப்பர், கம்பன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திரு வள்ளுவர் உள்ளிட்டோர் குறித்து ஆய்வு அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். தற் போது, கடைசியாக ஆண்டாள் குறித்த கட்டுரையை எழுதியுள்ளேன். என்னு டைய கட்டுரையை தவறாக புரிந்து கொண்டு என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டி தானே கட்டுரையை மனுதாரர் எழுதியுள்ளார்? இதை ஏன் பெரிய பிரச்சினையாக உருவாக்க வேண் டும்? என்று கருத்து தெரிவித்தார்.

ஏற்க மறுப்பு

அப்போது வழக்குரைஞர் ஒருவர் ஆஜராகி, வைரமுத்து மீதான வழக்கை ரத்துசெய்ய கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளேன். அதனால், இந்த வழக்கில் என் தரப்பு கருத்தையும் கேட்கவேண்டும் என்றார். அதேபோல தேவராஜன் என்பவர் ஆஜராகி, நான் ஒரு இந்து. வைரமுத்து என் மத உணர்வை புண்படுத்திவிட்டார். அதனால், என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இவர்களது கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இடைக்கால தடை

பின்னர் அரசு தரப்பு வழக்குரைஞர், மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் ஆகியோர் வாதம் செய்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, வைரமுத்து மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசா ரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

==================

- விடுதலை நாளேடு, 20.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...