புதன், 23 அக்டோபர், 2019

கீழடி அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு

மதுரை, அக்.23  கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை, அய்ந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை, மத்திய தொல் லியல் துறையும், அடுத்த, இரண்டு கட்ட அகழாய்வுகளை,தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண் டன. அய்ந்தாம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த வாரத்தில் முடிந்தன. அதனால், அகழாய்வுக் குழிகளை, தார்ப்பாய்களால் மூடி, மண் கொட்டும் பணிகள் நடந்தன.

அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52 செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதி யுடன் கூடிய, 60 செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப் பட்டது.

அது, இரண்டு குழாய் களால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன. குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண் ணீரை வழங்கும் வகையில் அமைக் கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன. இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள் இடப்பட் டுள்ளன.

இந்த குழாய்களின் கீழ்ப்பகுதி யிலும், அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது.

அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி பொருத்தப்பட்டிருந்தது. வடி கட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப் பகுதி, இரண் டடுக்கு பானைக்குள் செல்கிறது.

இவ்வாறு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், வெவ் வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும், வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும். இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப் பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி காணப்பட்டது.

இது, தண்ணீரை எளிதாக வடிய வைக்கும் திறந்தவெளி அமைப்பாக இருக்கலாம்.தமிழக அகழாய்வு களில், இதுவரை கிடைக்காத வகையிலான, இந்த வடிகால் அமைப்பு களின் பயன்கள் குறித்து, அடுத்த கட்ட அகழாய்வுகளில் தான் தெரிய வரும். மேலும், அந்த பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்த போது, கூரை ஓடுகள் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றின் தொடர்ச்சியில், செங்கல் கட்டடப் பகுதி இருந்தது.அது, இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட, கட்டடப் பகுதி யின் தொடர்ச்சி.

அதன் தொடர்ச்சி யை, அடுத்த கட்ட அகழாய்வில் தான் கண்டறிய முடியும்.

'கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய் வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ள, இந்த சுடுமண் குழாய்கள் மற்றும் கட்டடப் பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.'சங்க காலத்தில், வைகை நதிக்கரையில் வாழ்ந்த தமிழர்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த, பல்வேறு தகவல்கள் வெளிப் படும்' என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது, தமிழக வரலாற்றின், புதிய திருப்பங்களுக்கு மிகப்பெரிய சான்றுகளாக இருக்கும் என்பதால், அடுத்தகட்ட அகழாய்வக்காக, வர லாற்று ஆய்வாளர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.

மதுரை தமிழ் சங்கத்தில்கீழடி தொல்பொருட்கள்

கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த, தமிழக தொல்லியல் துறை முடிவு செய் துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில், அய்ந்தாம் கட்ட அகழாய்வுப் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது; அக ழாய்வுக் குழிகள் மூடப்பட்டு விட் டன.

ஆறாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம், தமிழக அரசு கோரியுள்ளது.

இந்நிலையில், கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, அங்கேயே காட்சிப்படுத்த வேண் டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

அதையேற்ற தமிழக தொல்லியல் துறை, கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை, பலரும் பார்க்கும் வகையில், மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.

பார்வையாளர்களின் வருகை யை பொறுத்து, கண்காட்சி நடத்தும் நாட்களை முடிவு செய்ய, அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.

- விடுதலை நாளேடு 23 10 19

சனி, 19 அக்டோபர், 2019

வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு

இராமேசுவரம்,அக்.13, இராமநாத புரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப் பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த ஆங்கில ஆசிரியர் சுல்தான் ஜமீர் அலி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் மேற்பரப்பாய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு, "இவ்வூரின் தெற்கில் இரண்டு பிரிவாக பிரிந்து ஓடும் நாயாறு, வைகையின் ஒரு கிளை ஆறு திருப்பாலைக்குடியில் கடலில் கலக் கிறது. இவ்வாற்றின் கரையில் உள்ள ஓடுகள் சிதறிக் கிடக்கும் மேடான பகுதியை திடல் என அழைக்கிறார்கள்.

குளங்களை தூர்வாரிய போது சுடுமண் உறைகிணற்றின் ஓடுகள், தடித்த, மெல்லிய கருப்பு சிவப்பு பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. ஒரு சுடுமண் உறையின் உயரம் 16.5 செ.மீ., அகலம் 4.5 செ.மீ. ஆகும். உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, செருகுவது என உறைகிணறுகளில் இருவகைகள் உண்டு. ஒரே அளவுள்ள இரு வட்டமான சுடுமண் உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய அமைப்பு கொண்ட கிணறு இங்கு இருந்துள்ளது.

திடல் பகுதியில் கருப்பு சிவப்பு பானை ஓடுகளுடன், வெள்ளைக் களி மண்ணால் உருவாக்கப்படும் சீன நாட்டு போர்சலைன் ஓடுகளும் காணப் படுகின்றன.

இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கிருந்து அரை கி.மீ. தூரத்தில் முதுமக்கள் தாழியின் ஓடுகளும் உள்ளன.

இதற்கு இடைப்பட்ட பகுதி யில் சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்ட டத்தின் அடிப்பக்கம் மட்டும் உள்ளது. இதில் உள்ள உடைந்த ஒரு செங்கலின் அகலம் 15 செ.மீ. உயரம் 6 செ.மீ. ஆகும். இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம். இதன் அருகில் கருங் கல்லால் ஆன முழுமையடையாத 5 அடி உயரமுள்ள அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பம் உள்ளது.

இவ்வூரில் சங்க கால கருப்பு சிவப்பு பானை ஓடுகளுடன் இடைக்காலத்தைச் சேர்ந்த தடயங்களும் காணப்படு கின்றன. இவ்வூரின் பெயர் சோழர்களை நினைவுபடுத்துகிறது.

சங்க காலம் முதல் இடைக்காலம் வரை பல நூற் றாண்டுகளாக இவ்வூர் சிறப்புற்று இருந்துள்ளது. சங்க காலத்தைச் சேர்ந்த பன்னாட்டு வணிக நகரமான அழகன்குளத்தின் சமகால ஊரான இவ்வூர் அங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இராமநாதபுரத்திலிருந்து சோழந் தூர் செல்லும் வழியில் சக்கரவாள நல்லூர் சங்ககால, இடைக்கால வாழ் விடப் பகுதியாகவும், தேவிபட்டினம், சிங்கனேந்தல், முத்துசாமிபுரம் ஆகிய ஊர்கள் இடைக்கால வாழ்விடப் பகுதிகளாகவும் உள்ளன.

மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை இப் பகுதிகளில் அகழாய்வு செய்து இவ் வூரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர வேண்டும்" என்றார்.

 - விடுதலை நாளேடு 13 10 19

சனி, 12 அக்டோபர், 2019

கி.பி. 12ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர், அக்.12  அம்பலூர் பாலாற்றில், கி.பி., 12ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லுரி பேராசிரியர் பிரபு கூறியதாவது:
வாணியம்பாடி அடுத்த, அம்பலூர் அருகே, தேங்காய் தோப்பு வட்டத்தில், பாலாற்றங் கரையில் பாதி உடைந்த நிலையில், ஒரு நடுகல் கண்டு பிடிக்கப்பட்டது.
இயந்திரத்தில், இப்பகுதியில் தூர் வாரிய போது, நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. இந்த நடுகல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 12ஆம் நுற்றாண்டை சேர்ந்த, பிற்கால சோழர்கள் ஆட்சியைச் சேர்ந்தது என, தெரிய வந்தது.
நடுகல்லில், ஒரு வீரனின் வலது கையில், போர் வாள் உள்ளது. இடது கையில், கேடயம் உள்ளது. போரில் எதிரி விட்ட அம்பு, வீரனின் மார்பில் பாய்ந்து இறந்து கிடக்கிறார். கல்லின் இடது பக்க மேல்புறத்தில், இரு பெண்கள், வீரனை  அழைத்து செல்வது போல உள்ளது.
உடைந்த நிலையில், நடுகல்லின் மேற்புறம் மட்டும் கிடைத்துள்ளது. அதை, இப்பகுதி மக்கள், சலவை கல்லாக பயன்படுத்துகின்றனர். கல்லின் கீழ்புறம் காணவில்லை. இது போன்ற நடுகல், இப்பகுதியில் நிறைய உள்ளது.தொல்பொருள் ஆய்வுத்துறையினர், ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு,12.10.19

வியாழன், 10 அக்டோபர், 2019

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுக்கை கண்டுபிடிப்பு



நாமக்கல்,அக்.10, இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன், சமணர்கள் உறங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கை, நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே அமைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே, சென்னால்கல் புதூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதன் கீழ்ப்புறம், 2,000 ஆண்டுகளுக்கு முன், தமிழ் சமணர்கள் உறங்குவதற்காக பாறைகளை அடுக்கடுக்காக செதுக்கி, கற்படுக்கை அமைத்துள்ளனர்.

பாறையில் செதுக்கப்பட்டுள்ள படுக்கை, சமண முனிவர்கள், இங்கு நீண்ட காலம் தங்கி தவமிருந்து வாழ்ந்தனர் என்பதை உணர்த்து கிறது. இப்பகுதியில் உள்ளவர்கள், இதை பஞ்ச பாண்டவர்கள் படுக்கை என்றும் கூறுகின்றனர். சமணர்கள் வாழ்ந்த காலத்தில், தாங்கள் செல்லும் பாதையில், எறும்பு உள்ளிட்ட சிறிய உயிர்கள் மிதிபட்டு துன்புறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பாதையை மயில் இறகால் சுத்தம் செய்து கொண்டே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும், தங்களது கொள்கைகளை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சமணப் படுக்கைகள், 2,000 ஆண்டுகளுக்கு முன் உரு வாக்கப்பட்டிருந்தாலும், தற்போது செதுக்கியது போல், வழவழப்பு தன்மை மாறாமல் காணப் படுகிறது.

'சமணர்கள் இப்பகுதியில், சமணப் பள்ளிகள் அமைத்து கல்வி, மருத்துவம், மதம் ஆகியவற்றை பரப்பி உள்ளனர். இந்த சமணப் படுக்கையை, பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர லாற்று ஆர்வலர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்' என்றனர்.
- விடுதலை நாளேடு, 10 .10 .19
 

செவ்வாய், 8 அக்டோபர், 2019

500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்றூண் கண்டெடுப்பு

கொடைக்கானல், அக்.8- கொடைக்கானல் மலைப்பகுதி யில் காலப்போக்கில் புதைந்து போனதாகக் கூறப்படும் அரை யப்பட்டி கிராமத்தில் கண் டெடுக்கப்பட்ட நுழைவுவா யில் தூணும் அடுக்கம் கிரா மத்திலுள்ள கல்தூணும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலகட்டத்தில் உருவாக்கப் பட்டவை என்பதை தொல்லி யல்துறையினர் உறுதி செய் துள்ளனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, அடுக்கம், பேத் துப்பாறை, பூம்பாறை, செண் பகனூர் பைரவர் கோயில் பகுதிகளில் ஆதிமனிதர்கள், பூர்வ குடிமக்கள் வாழ்ந்ததற் கான ஆதாரங்கள் கண்டறியப் பட்டன. அடுக்கம் கிராம வனப்பகுதிக்குள், காலப்போக் கில் புதையுண்ட அரையபட்டி கிராமம் சமீபத்தில் தொல்லி யல் ஆய்வாளர்கள் குழுவால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
அந்த கிராமம் தங்கள் மூதாதையர் வாழ்ந்த கிராமம் என்று கூறி அங்கிருந்த நடு கல்லை எடுத்து வந்து அடுக்கம் கிராம மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படும் அந்த தூணை ஆய்வு செய்த தொல் லியல்துறை அதிகாரிகள், அரையப்பட்டி கிராமத்தின் கல்தூணும், அடுக்கம் கிராமத் தின் தூணும் ஒரே காலகட் டத்தில் உருவாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
 - விடுதலை நாளேடு, 8.10.19

வியாழன், 3 அக்டோபர், 2019

இந்தியா உண்மையில் யாருடையது? விரைவான வரலாறு.

(இந்திய வரலாறு)
இறுதி வரை வாசிப்பது மதிப்பு.

கோரி பேரரசு முதல் தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரை.

* கோரி இராச்சியம்: *

  1 = 1193 முகமது கோரி
  2 = 1206 குத்புதீன் ஐபக்
  3 = 1210 ஓய்வு ஷா
  4 = 1211
  5 = 1236 ராகினுதீன் ஃபெரோஸ் ஷா
  6 = 1236 ராசா சுல்தான்
  7 = 1240 மொசாதீன் பஹ்ராம் ஷா
  8 = 1242 அல்-தின் மசூத் ஷா
  9 = 1246 நசிருதீன் மஹ்மூத்
  10 = 1266 கியாசுதீன் பால்பின்
  11 = 1286 வண்ண மங்கல்
  மசூதியின் 12 = 1287 கபடான்
  13 = 1290 சம்சுதீன் காமர்ஸ்
  பெரும் பேரரசின் முடிவு
  (மொத்தம் 97 ஆண்டுகள் தோராயமாக.)

  * பேரரசின் பேரரசு *

  1 = 1290 ஜலாலுதீன் ஃபெரோஸ் கில்ஜி
  2 = 1292 தெய்வீக மதம்
  4 = 1316 ஷாஹாபுதீன் உமர் ஷா
  5 = 1316 குத்புதீன் முபாரக் ஷா
  6 = 1320 நசிருதீன் குஸ்ரோ ஷா
  கல்ஜி பேரரசின் முடிவு
  (மொத்தம் 30 ஆண்டுகள் தோராயமாக.)

  * துக்ளக் பேரரசு *

  1 = 1320 கியாசுதீன் துக்ளக் (முதல்)
  2 = 1325 முகமது இப்னு துக்ளக் (II)
  3 = 1351 ஃபெரோஸ் ஷா துக்ளக்
  4 = 1388 கியாசுதீன் துக்ளக் (II)
  5 = 1389 அபூபக்கர் ஷா
  6 = 1389 முகமது துக்ளக் (சோம்)
  7 = 1394 அலெக்சாண்டர் கிங் (நான்)
  8 = 1394 நசிருதீன் ஷா (II)
  9 = 1395 நுஸ்ரத் ஷா
  10 = 1399 நசிருதீன் முகமது ஷா (II)
  11 = 1413 அரசு
  துக்ளக் பேரரசின் முடிவு
  (மொத்தம் 94 ஆண்டுகள் தோராயமாக.)

  * சயீத் வம்சம் *

  1 = 1414 பனை கான்
  2 = 1421 முய்சுதீன் முபாரக் ஷா (II)
  3 = 1434 முஹம்மது ஷா (IV)
  4 = 1445 அல்லாஹ் ஆலம் ஷா
  சையத் இராச்சியத்தின் முடிவு
  (மொத்தம் 37 ஆண்டுகள் தோராயமாக.)

  * லோதி பேரரசு *

  1 = 1451 பஹ்லோல் லோதி
  2 = 1489 அலெக்சாண்டர் லோதி (II)
  3 = 1517 ஆபிரகாம் லோதி
  லோதி பேரரசின் முடிவு
  (மொத்தம் 75 ஆண்டுகள் தோராயமாக)

  * முகலாய பேரரசு *

  1 = 1526 ஜாஹிருதீன் பாபர்
  2 = 1530 ஹுமாயூன்
  முகலாய பேரரசின் முடிவு
  (மொத்தம் 4 ஆண்டுகள் தோராயமாக)

  * சூரியன் பேரரசு *

  1 = 1539 ஷேர் ஷா சூரி
  2 = 1545 இஸ்லாம் ஷா சூரி
  3 = 1552 மஹ்மூத் ஷா சூரி
  4 = 1553 ஆபிரகாம் சூரி
  5 = 1554 பெர்வைஸ் ஷா சூரி
  6 = 1554 முபாரக் கான் சூரி
  7 = 1555 அலெக்சாண்டர் சர்ரே
  சிரிய பேரரசின் முடிவு
  (மொத்தம் 16 ஆண்டுகள் தோராயமாக)

  * மீண்டும் முகலாய பேரரசு *

  1 = 1555 ஹுமாயூன் (மீண்டும்)
  2 = 1556 ஜலாலுதீன் அக்பர்
  3 = 1605 ஜஹாங்கிர் ஸ்லாம்
  4 = 1628 ஷாஜகான்
  5 = 1659 அவுரங்கசீப்
  6 = 1707 ஷா ஆலம் (முதல்)
  7 = 1712 பகதூர் ஷா
  8 = 1713 ஃபர்குவார்ஷயர்
  9 = 1719 ரிபாத் ராஜத்
  10 = 1719 ரேபிட்ஸ்
  11 = 1719 நேஷனல்
  12 = 1719 மஹ்மூத் ஷா
  13 = 1748 அகமது ஷா
  14 = 1754 உலகளாவியது
  15 = 1759 ஷா ஆலம்
  16 = 1806 அக்பர் ஷா
  17 = 1837 துணிச்சலான மன்னர் ஜாபர்
  முகலாய பேரரசின் முடிவு
  (மொத்தம் 315 ஆண்டுகள் தோராயமாக.)

  * பிரிட்டிஷ் ராஜ் *

  1 = 1858 லார்ட் கிங்
  2 = 1862 லார்ட் ஜேம்ஸ் புரூஸ் எல்ஜின்
  3 = 1864 லார்ட் ஜே. லாரன்ஸ்
  4 = 1869 லார்ட் ரிச்சர்ட் மாயோ
  5 = 1872 லார்ட் நார்தாப்க்
  6 = 1876 லார்ட் எட்வர்ட் லத்தீன்
  7 = 1880 லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
  8 = 1884 லார்ட் டஃபெரின்
  9 = 1888 லார்ட் ஹனி லெஸ்டன்
  10 = 1894 லார்ட் விக்டர் புரூஸ் எல்ஜின்
  11 = 1899 லார்ட் ஜார்ஜ் கோர்ஜியன்
  12 = 1905 லார்ட் கில்பர்ட் மிண்டோ
  13 = 1910 லார்ட் சார்லஸ் ஹார்ட்ஜ்
  14 = 1916 லார்ட் ஃபிரடெரிக் முதல் கருவூலம் வரை
  15 = 1921 லார்ட் ருக்ஸ் அஜாக் ரிடிக்
  16 = 1926 லார்ட் எட்வர்ட் இர்வின்
  17 = 1931 லார்ட் ஃபெர்மன் வெல்டன்
  18 = 1936 லார்ட் அலெஜாண்ட்ரா லின்லித்கோ
  19 = 1943 லார்ட் ஆர்க்கிபால்ட் வீல்
  20 = 1947 லார்ட் மவுண்ட் பேடன்
  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முடிவு
  (மொத்தம் 89 ஆண்டுகள் தோராயமாக)

  * இந்தியா (சுதந்திரம் பெற்றதிலிருந்து) *

  1 = 1947 ஜவஹர்லால் நேரு
  2 = 1964 கோல்சரிலால் நந்தா
  3 = 1964 லால் பகதூர் சாஸ்திரி
  4 = 1966 கோல்சரிலால் நந்தா
  5 = 1966 இந்திரா காந்தி
  6 = 1977 மொரார்ஜி தேசாய்
  7 = 1979 சரண் சிங்
  8 = 1980 இந்திரா காந்தி
  9 = 1984 ராஜீவ் காந்தி
  10 = 1989 வி.பி.சிங்
  11 = 1990 சந்திரசேகர்
  12 = 1991 பி.வி.  நரசிமா ராவ்
  13 = 1992 அடல் பிஹாரி வாஜ்பாய்
  14 = 1996 தேவேகவுடா
  15=1997ஐ.கே.குஜ்ரால்
  16 = 1998 அடல்    பிஹாரி வாஜ்பாய்
  17 = 2004 மன்மோகன் சிங்
  18 = 2014 நரேந்திர மோடி

இந்தியா 764 ஆண்டுகளாக முஸ்லீம் இராச்சியமாக இருந்தது.

ஏறக்குறைய 89 ஆண்டுகள் பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆட்சியில் இருந்தது.

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...