ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிவகங்கை அருகே 16ஆம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு


சிவகங்கை, ஆக.22 சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தர ராஜன் மற்றும் புத்தகக்கடை முருகன் ஆகியோர் முத்துப்பட்டி பகுதியில் உள்ள தனியார் இடத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலையைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்துப் புலவர் கா.காளிராசா கூறும்போது, ‘’பழங் காலத்தில் தங்களது அரசர் போரில் வெல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டு கொற்றவை தெய்வம் முன்பாக வீரர்கள் தங்களை பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. இதில் நவகண்டம் என்பது உடலில் 9 இடங்களில் வெட்டிக் கொண்டு உயிரை விடுவர். அவ்வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்படும்.

மேலும் இப்பழக்கம் 9ஆம் நூற் றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. அதன்பிறகு படிப்படி யாகக் குறையத் தொடங்கியது. முத்துப்பட்டியில் கண்டறியப்பட்ட நவகண்டம் சிலை 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இச்சிலை மூன்றடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் உள்ளது. தலைமுடிகள் கொண்டையாக கட்டியபடியும், சிதறிய 3 கற்றை களாகவும் உள்ளன. முகத்தில் மீசை காட்டப்பட்டுள்ளது, கழுத்தில் வேலைப்பாடுடன் கூடிய ஆபரண மும், கையில் கழல் போன்ற ஆபரண மும் உள்ளன.

மேலாடை தொங்குவதைப் போல் உள்ளது. இடுப்பில் உறை யுடன் கூடிய குத்துவாள், கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும், மற்றொரு கை சிதைந்து உள்ளது. கழுத்தில் வலது புறத்தில் இருந்து இடதுபுறமாகக் கத்தி குத்தியபடி உள்ளது.

மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று நவகண்ட சிலையை சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நில உரிமையாளர் ஒப்புக் கொண் டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

சனி, 1 ஜனவரி, 2022

பெருங்குடி: கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு


மதுரைநவ. 25- மதுரை விமான  நிலையம் அருகே பெருங்குடி  கண்மாயில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச்  சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு  கண்டறியப் பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய கண்மாய்  அருகே கல்வெட்டு இருப்பதாக  முதுகலை வரலாற்றுத் துறை  மாணவர் சூரியபிர காஷ் தகவல்  அளித்தார்அதன்படி மதுரை சரசு வதி  நாராயணன் கல்லூரி வரலாற்றுத்  துறை உத விப் பேராசிரியர்  து.முனீஸ்வரன் மற்றும்  பேராசி ரியர்கள் லட்சுமணமூர்த்தி,  ஆதிபெருமாள்சாமி ஆகியோர் கள  ஆய்வு செய்தனர்ஆலமரத்து  விநாயகர் கோயில் அருகே  குத்துக்கால் பாதி புதைந்த நிலையில்  கல்வெட்டு இருந்ததுஇதனை  ஆய்வு செய்ததில் கி.பி.13ஆம்  நூற் றாண்டை சேர்ந்த கல்வெட்டு  எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்துப் பேராசிரியர்கள்  முனீஸ் வரன்லட்சுமணமூர்த்தி  ஆகியோர் கூறும்போது,  "வேளாண்மைமண் பாண்டத்  தொழிலில் சிறந்து விளங்கிய  பெருங் குடியில் பெரிய கண்மாய்  ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே  கல்தூண் உள்ளதுஅவை மண் ணில்  புதைந்த நிலையில் 5 அடி நீளக் கல்  தூணில் எட்டுக்கோணம், 2 பட்டை  வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய  கண்மாயில் உள்ள கி.பி. 13ஆம்  நூற்றாண் டைச் சேர்ந்த நிலக்கொடை  கல்வெட்டு.

தூணின் மேல் பகுதிப் பட்டையில் 3  பக்கம் நில அளவைக் குறியீடுகள்,  மற்றொரு பக்கம்  கோட் டோவியமாக  வரையப் பட்டுள்ளதுநிலத்தை  வைணவக் கோயிலுக்கு  நிலக்கொடையாகக் கொடுத்ததைச்  சுட்டிக் காட்டுகிறதுகல்தூணின்  கீழ்பட்டைப் பகுதியில் 12 வரிகள்  உள்ள எழுத்தமை வின் வடிவத்தை  வைத்து கி.பி.13ஆம் நூற்றாண் டைச்  சேர்ந்தது எனக்  கண்டறியப்பட்டுள்ளது.

பல எழுத்துகள்  தேய் மானமடைந்ததால் முழுப்  பொருள் அறிய முடியவில்லை.  தொல்லிய லாளர்  சொ.சாந்தலிங்கத் தின் உதவியுடன்  கல் வெட்டு படிக்கப்பட்ட தில்,  விக்கிரம பாண்டியன் பேரரையான்  என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி  செய்ததாகவும்அப்போது நிலதானம்  வழங்கியவரையும்ஆவ ணமாக  எழுதிக்கொடுத்த குமராஜன்  என்பவரின் பெயரும் கல்வெட்டு  இறுதி வரியில் இருப்பதை அறிய  முடிகிறது’’ என்று தெரிவித்தனர்.

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...