திங்கள், 22 ஏப்ரல், 2019

ஆதிச்ச நல்லூர் கூறும் அரிய தகவல்கள்



கடவுள் சாதி நம்பிக்கை தமிழனின் பண்பாட்டிலேயே இல்லை

நம் பண்டைய தமிழர் பண்பாடான மதுரை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியிலும் ஏறத்தாழ 5 கி.மீ. பரப்பளவு அலசி ஆராய்ந்ததில் கிடைத்த பொக்கிஷங்கள்



1. கழிப்பறை

2. நகைகள்

3. பானைகள்

4. கண்ணாடிகள்

5. பொம்மைகள்

6. முத்திரைகள்

7. கிணறுகள்

8. பெயர் கல் வெட்டு குறிப்புகள்

என மனிதர் களுக்கு தேவையான அனைத்தும்

கிடைக்காதவை

1. கோயில் , மசூதி, சர்ச் அல்லது வழிபாட்டு தலங்கள்...

2. சாமி சிலைகள், முப்பாட்டன் முருகன், ஜாதி குறியீடுகள், ஆண்ட பரம்பரை என்ற அலப்பறைகள்..

3. மத நூல்கள், பர்தா, முக்காடு..

4. ஓர் இறை கோட்பாடுகள், நூல்கள், நபிகளின் வரலாறுகள், சிலுவைகள், ...

5. பூஜை ஜாமானங்கள், ஓம் குறியீடு, ஹோமம் கூடம், காவிக் கொடி, பசுமாடு, ஆதியோகி, யோகா...

ஆக நம்மோட முப்பாட்டன்கள் எவரும் கடவுள், ஜாதி, கோத்ரம், மதநூல், நபிகள், பரிசுத்த ஆவி, பூஜை, அய்யர், மார்கம்ன்னா என்னவென்றே தெரியாமல் பல்லாயிர ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஜாதி, மத வெறியை தூக்கி வீசிட்டு தமிழனே போய் உங்க சொந்த பொழப்ப பாருங்க...

-  விடுதலை ஞாயிறு மலர், 13.4.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பார்ப்பனனின் கேவலமான திருமண உறவு

பார்பனின் கேவலமான திருமண உறவு - அர்த்தமுள்ள இந்துமதம்...

கேரள நம்பூதிரி பார்ப்பன குடும்பத்தில் அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம்.

தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை.

அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது.

பார்ப்பன நம்போதிரி மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் அண்ணன் மனைவியுடனும் மற்ற நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் அதிகமாக இருந்தனர்.

நம்பூதிரி மூத்த சகோதரன் பல மனைவிமார்களை மணம் முடிக்கலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் 2ஆம் நூற்றாண்டிலும் கூட, மூத்த சாகோதரரின் திருமணம் போது, 'அண்ணன்-தம்பிகள் இணைந்து ஊர்வலமாக வரும் முறை இன்றளவும் வழக்கத்தில் உள்ளது..

ஆதாரம் - (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120)(கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் - பக்கம் 896) கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.
- டக்ளஸ் முத்துகுமார்,
முகநூல் பதிவு,
10.1.18

பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள் கண்டெடுப்பு



பிலிப்பைன்ஸ், ஏப். 18 பிலிப்பைன்ஸ் குகையொன்றில் பண்டைய மனித குடும்பத்தின் புதிய கிளையொன்று கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவை கிடைத்த இடமான லஸோன் தீவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய கண்டு பிடிப்புக்கு ஹோமோ லஸோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டிருக் கிறது. இவர்கள் இன்றைய இன்றைய மனித குலத்தின் நேரடி மூதாதையர்களாக இருக்க வாய்ப்பில்லை எனினும் தூரத்துச் சொந்தங்களாக இருக்க 99 சதவிகித வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இவர்கள் வாழ்ந்திருந்த காலம் இன்றைக்கு 50,000 ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம். அன்று இந்த மனிதர்களின் உயரம் வெறும் 3 அடிகளே என புதன் அன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பானது மனித பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கண்டுபிடிப்புக் கதைக்கு மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் எனும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை சிதைப்பதாக இருக்கிறது இந்தப் புதிய கண்டுபிடிப்பு. ஏனெனில் மனித குலம் தோன்றிய காலங்களில் இருந்து பல விசித்திரமான வடிவங்களில் எல்லாம் எண்ணற்ற மனித குலங்கள் வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும் எனும் அய்யப்பாட்டுக்கு இந்தக் கண்டுபிடிப்பு வழிவகுத்திருக்கிறது.

நமது மூதாதையர்களாகக் கருதப்படும் ஹோமோசேபியன்கள் இப்போது ஒப்பீட்டளவில் தனியாக இந்த உலகில் வாழ்கின்றனர்.

தற்போது கிடைத்து வரும் புதிய மனித இனங்களைக் காண்கையில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களைக் காட்டிலும் மேலும் அதிகமான மாறுதல்களைத் தருவனவாக உள்ளன என்கிறார் கனடா, லேக்ஹெட் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறை வல்லுனரான மேத்யூ டோச்செரி. இவர் மேற்கண்ட அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர் இல்லையென்ற போதும் ஒரு மானுடவியலாளர் எனும் அடிப்படையில் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.



2000 ல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்மண்ட் சால்வடர் மிஜரிஸ் எனும் மாணவர் லஸோன் தீவிலிருக்கும் கல்லாவோ குகைப்பகுதிகளை பிலிப்பைன்ஸில் முதலில் விவசாயம் செய்த மனித இனம் எது எனும் ஆராய்ச்சிக்காக தோண்ட முற்படுகையில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அவர் மேலும் ஆழமாக அந்தப் பகுதி நிலத்தைத் தோண்டுவது என முடிவெடுத்தார்.

இந்தோனேசியத் தீவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் வாயிலாக கண்டறியப்பட்ட 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரம்மாண்டமான மனித உயிரினங்களுக்கு அன்றைய விஞ்ஞானிகள் ஹோமோ ஃப்ளோரெசியன்சிஸ் என்று பெயர் சூட்டியிருந்தனர். அவை சில அம்சங்களில் இன்றைய மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவதாயிருந்தன. அத்துடன் அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கற்கருவிகளை கையாளத் தெரிந்தவர் களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இவ்வகை மனித உயிரினங்களில் வயது வந்தவை அனைத்தும் சுமார் 3 அடி மட்டுமே வளர்ச்சி கொண்டவையாகவும் மிகச்சிறிய மூளை கொண்டவையாகவும் இருந்தவை சந்தேகத்திற் கிடமானவையாக இருந்தன. அதன் காரணமாகவே இவர்களின் நிஜமான மூதாதையர்கள் யார் எனும் ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இவர்களின் மூதாதையர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஹோமினைன்களாக இருக்கலாம். அவர்கள் தான் உயரம் குறைந்த வர்களாகவும் சிறிய மூளை கொண்டவர்களாகவும் இருந்தனர்.

ஆனால் தற்போது பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் படிமங்களில் பற்களும், கால் சிற்றெலும்புகளும் கிட்டத்தட்ட இன்றைய மனித குலத்தை ஒத்தவையாகவே இருக் கின்றன. அளவு தான் இடிக்கிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட எந்த ஒரு மனித குலத்தையும் விட இவை மிகச்சிறியவையாக இருக்கின்றன

- விடுதலை நாளேடு, 18.4.19

ஏலகிரிமலையில் கல்வெட்டு, கற்கோடரிகள் கண்டெடுப்பு



ஏலகிரிமலை, ஏப்.18 ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் கல்வெட்டு மற்றும் கற்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி மற்றும் வரலாற்று ஆர்வலர் இரா.நீலமேகம் ஆகியோர் மேற் கொண்ட களஆய்வில் இவற்றை கண் டெடுத்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியது: ஏலகிரிமலையில் ஏராளமான பழங்காலத் தடயங்கள், நடுகல் மற்றும் கல்வெட்டுகள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அத்தனாவூரில் உள்ள பெருமாள் கோயிலில் திறந்த வெளியில் உள்ள இந்தக் கல்வெட்டும், கோயிலுக்குள் இருக்கும் கற்கோடரி களும் இம்மலையின் பழைமையான மரபைத் எடுத்துரைக்கும் வகையில் உள்ளன. 3.5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட இந்தப் பலகைக் கல்லின் இரு பக்கமும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

இதில் உள்ள வடிவமைப்பைப் பார்க்கும்போது இவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால எழுத்துகள் எனக் கருதப்படுகிறது. கோயிலின் உட் புறத்தில் பெரிய கல் உரல் உள்ளது. இதைச் சுற்றிலும் ஏராளமான கற்கோ டரிகள் காணப்படுகின்றன. இவை மனிதன் இரும்பைப் பயன்படுத்துவ தற்கு முன் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.

எனவே, இக்காலத்தை புதிய கற் காலம் என வரலாற்று அறிஞர்கள் அழைப்பர். இதன் காலம் கி.மு.1000 என்று கருதப்படுகிறது. இம்மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பது இதன் மூலம் உறுதிப்படுகிறது என்றார் அவர்.
- விடுதலை நாளேடு, 18.4.19

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

திருப்பத்தூர் அருகே கி.பி. 11ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு



திருப்பத்தூர், ஏப்.12  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்கொண்ட கள ஆய்வில் 2 நடுகற்கள், பழங்கால மண் உருவ பொம்மைகள் மற்றும் கற்கோடரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியது:

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது உடையாமுத்தூர் கிராமம். இந்த ஊரில் ஏரிக்கரை ஓரத்தில் திறந்தவெளியில் பெரிய வேப்பமரத்தின் அடியில் இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. அவற்றை இந்த ஊர்மக்கள், வேடியப்பன் என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர்.

இந்த இரண்டு நடுகற்களும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகற்கள் ஆகும். அவை தலா 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. வலது கையில் நீண்ட கத்தியையும் இடது கையில் வில்லையும் கொண்டு காணப்படுகின்றன. இது, போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவாக அவர்களின் உருவத்தைக் கல்லில் செதுக்கி வழிபடும் பழமையான மரபாகும். இந்த நடுகற்களுக்கு எதிரில் இரண்டு பெரிய மண் குதிரைகள் உள்ளன.

இக்கோயிலுக்கு அருகில் நிலத்தை உழுதபோது ஏராளமான மண் பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்தையும் இக்கோயிலுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். அவற்றை கெட்டியான மண்ணைக் கொண்டு உறுதியாகச் செய்துள்ளனர். ஆண், பெண், குதிரை, காளை மாடுகள் என ஏராளமான உருவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இம்மண் உருவங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சில பொம்மைகளின் கழுத்தில் மணிமாலைகளை மண்ணால் செய்து வைத்திருப்பது பழந்தமிழரின் கலைநுட்பத்தை வெளிப் படுத்துகிறது. இக்கோயிலுக்கு எதிரே உள்ள சிறுகாட்டுப் பகுதியில் உருவம் இல்லாத கற்களையும் வேடியப்பன் என்று வணங்கு கின்றனர்.

இங்கு பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய சில கற் கோடரிகளும் காணப்படுகின்றன. இந்த இடத்தை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல புதிய வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும் என்றார் அவர்.

-  விடுதலை நாளேடு, 12.4.19

வியாழன், 4 ஏப்ரல், 2019

உடுமலைப்பேட்டையில் கல்திட்டைகள்!



வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை தொல் பழங்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம்,  மண்ணியல் காலம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தொல் பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பங் களை அடிப்படையாகக் கொண்டு, பழைய கற்காலம், நுண் கற்காலம்,  புதிய கற்காலம், பெருங்கற்காலம் என நான்கு பிரிவுகளாக வரலாற்று ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர்.

பழைய கற்கால மனிதர்கள், காடுகளில்,  இயற்கைச் சூழலோடு தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். அவர்களின் உணவுத்  தேவைக்காக காட்டிலிருக்கும் விலங்குகளை வேட்டையாடினர். உணவுக் கான முக்கியத்  தொழிலே வேட்டையாடு தலாக இருந்தது.  இதற்காக அவர்கள் பயன்படுத்திய கைக்கோடரிகள், சுரண்டை  ஆகிய கருவிகள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அமைந்திருந்தது. தொல்லியல் ஆய் வின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

பழைய கற்கால மக்களின் அடுத்த  வளர்ச்சியடைந்த நிலை, இடைக் கற்காலம்  அல்லது நுண் கற்காலம் என்று அழைக்கப் படுகிறது.  இவர்களும் உணவுக்காக விலங் குகளை வேட்டையாடுவதை பிரதானமாக கொண்டிருந்தனர். அதற்காக, அதிக அள வில் கல் ஆயுதங்களை பயன்படுத்தியிருப் பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர்  வாழ்ந் திருக்கலாம் எனவும் அறியமுடிகிறது.  குகைகளிலும், குகை போன்ற பாறைகளின் அடிவாரங்களிலும் இவர்கள் வாழ்ந்து உள்ளனர். தங்களுடைய உணவைத் தேடி, விலங்குகளுடன் விலங்குகளாக காடுகளி லும், மலைகளிலும் அலைந்து திரிந்தனர்.  கல் ஆயுதங்களைத் தவிர,  மற்ற உலோகங் களின் பலன் தெரியாத இவர்களின் காலத் துக்குப் பிறகு வாழ்ந்தவர்கள்,  புதிய கற் காலத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படு கின்றனர்.

புதிய கற்கால மனிதர்கள்


ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ்ந் தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வளர்த்தனர். வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்ட நிலையில் இருந்து முன்னேறி, வேளாண்மை செய்யவும், அதில் கிடைக்கும் தானியங்களை உட்கொள்ளவும் பழகியிருந்தனர்.  விலங்குகளை வேட்டை யாடிக் கொல்வதற்கு,  கையில் பிடிப்பதற்கு வசதியாக கூர்மையான கருவிகளை உரு வாக்கினர். கைக்கோடரி, கல் சுத்தி போன்ற கருவிகள் ,அகழாய்வுகளில் கண்டுபிடிக் கப்பட்டு உள்ளன. இவ்வகை மக்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெருங் கற்காலம்...


நான்காவது பிரிவைச் சேர்ந்த மக்கள் பெருங் கற்காலத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறது. இவர்களின் காலம் கி.மு. 3200-ல் தொடங்கி கி.மு.1500 வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இறந்தோரைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்கள் எலும்புகளை புதைத்த இடத்தைச் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு சூழப்பட்ட கல்திட்டைகளை உருவாக்கினர். இவற்றை  பெருங்கற்கால சின்னங்கள் என்று வரலாற்று ஆய்வா ளர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும்பா லான பகுதிகளில் மலையின் உச்சியில் உள்ள சமமான பகுதிகளில் கல்திட்டை கள் காணப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மாவடப்பு, குழிப்பட்டி, கோடந் தூர்  உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இவ்வகையான கல் திட்டைகள் அதிக அளவில் காணப்படுன்றன. இந்த கல் திட்டைகள் ஆயிரக்கணக்கான  ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இவை ஈமச்சின்னங்கள் என்று  குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு கள், நடுகற்கள், சுவடிகள் போன்ற சாசனங் கள் மூலம்,  இதன் வரலாறு அறியப்படுகிறது.

பலகை வடிவிலான பாறைக் கற்களால் இவை உருவாக்கப்பட்டு, சிறிய  அளவி லான வீடுபோல அமைந்துள்ளது.  மலை களின் உச்சியில் உள்ள சமதளப்பரப்பில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கல்திட் டைகளில் யாருடையது என்ற விவரங்கள் இல்லை.  அந்தந்த இடங்களை வைத்து எந்த இனக் குழுவினர் வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

பக்கத்துக்கு ஒரு கல் பலகையை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலகைக் கற்களை வைத்து,  மேல்புறம் அகலமான பலகைக் கல்லை வைத்து இவை மூடப்பட்டுள்ளன. கல் திட்டையின் கிழக்குப் பக்கமுள்ள பலகைக் கல்லில் வட்ட வடிவில் இடுதுளை ஒன்று காணப்படுகிறது. `யு’ வடிவிலும் துளை யிடப்பட்டுள்ளன.

இதேபோல,  உடுமலை அடுத்த கொங் கல் நகரில் இரண்டு கல்திட்டைகளும், கோட்டமங்கலம் கிராமத்தில் இரண்டு கல்திட்டைகளும் காணப்படுகின்றன. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தொல்லியல் ஆர்வலர் சதாசிவம்  கூறும்போது, “கொங்கு மண்டலத் தில் அரிதாகத் தென்படும் பெருங்கற்கால சின்னமான கல்திட்டைகளைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை பண்டைய மக்களின் சான்றுகளாக உள்ளன. எனவே, அடுத்த தலைமுறையினருக்கு பெருங்கற்கால மனி தர்கள் பற்றிய ஆய்வுக்கு இவை பெரிதும் உதவும். இவற்றைப் பாதுகாக்கத் தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

- விடுதலை ஞாயிறு மலர் 23. 3 .2019

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...