புதன், 31 ஜூலை, 2019

கீழடி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 3 சுவர்கள் கண்டெடுப்புகீழடி, ஜூலை 31 சிவகங்கை மாவட்டம்  கீழடியில் நடைபெற்று வரும் அகழாய் வில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட 3 சுவர்கள் இருப்பது கண்டறியப் பட்டது.

கீழடி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே மூன்று கட்ட அக ழாய்வுகள் மத்திய அரசின் தொல்லியல் துறை மூலமும், நான்காம் கட்ட அக ழாய்வு தமிழக அரசு சார்பிலும் மேற் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் போது, கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருந்தது தெரியவந்தது.

அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் பழங்கால மக்கள் பயன்படுத் திய பானைகள், ஓடுகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக் கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டியபோது இரட்டைச் சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இந்த சுவருக்கு அருகிலேயே 5 அடுக்குகள் கொண்ட 4 அடி உயர உறைகிணறு கண் டறியப்பட்டது.  இந்நிலையில், இந்தக் கிணறுக்கு அருகிலேயே தோண்டப் பட்ட குழியில் 5 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் ஒரு சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.

மற்றொரு குழியில் அகலமான நிலை யில் ஒரு சுவர் இருப்பது தெரிந்தது.  போதகுரு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டியபோது 2 அடி அகலத்திலும் ஒரு அடி உயரத்திலும், 12 அடி நீளத்திலும் மற்றொரு சுவர் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது.  5 அடி நீளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவ ரில் 3 அடுக்குகளில் செங்கல்கள் அடுக்கி கட்டப்பட்டுள்ளன.

கடந்த இரு நாள்களில் கீழடி அக ழாய்வில் உறைகிணறும் அடுத்தடுத்து சுவர்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள சுவர் கள் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும்,  இவை கோட்டை சுவர்களா அல்லது அரண்மனை சுவர்களா என் பதை அதன் தொடர்ச்சி சுவர்கள் கிடைத்தால்தான் உறுதியாகச் சொல்ல முடியும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 31.7.19

திங்கள், 1 ஜூலை, 2019

ஏலகிரி மலையில் சோழர் காலத்து கல்வெட்டு, நடுகல் கண்டெடுப்புசென்னை, ஜூன் 22 ஏலகிரி மலையில் சோழர் காலத்துக் கல்வெட்டு, நடுகல் கண் டெடுக் கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, பி.பால சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட ஆய்வுக்  குழுவினர் ஏலகிரிமலையில் மேற் கொண்ட கள ஆய்வில் பழை மையான கல்வெட்டு மற்றும் நடுகல் ஆகியவற் றைக் கண் டறிந்துள்ளனர்.

இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியது:  ஏலகிரி மலையில் உள்ள நிலாவூரில் வயல் வெளியில் அண்மை யில் மேற்கொண்ட கள ஆய் வில் கி.பி. 11-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த பிற்காலச் சோழர்களின் கல் வெட்டு, நடுகல் ஆகியவை ஒரே இடத் தில் இருப்பது தெரிய வந்தது.

கல்வெட்டானது படுத்த நிலையில் உள்ளது. இது 5 அடி நீளமும், 3.5 அடி அகலமும் உள்ளது. பெரிய பலகைக் கல்லில் எழுதப்பட் டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜெயங் கொண்ட சோழ மண்டலத் தில் எயில் நாடு இருந்த தையும், அப்போது ஏற்பட் டப் போரில் ஊர் அழிந்த போது இவ்வீரனும் இறந் தான் என் பதை இக்கல் வெட்டு எடுத்துரைக்கிறது.

இதில் உள்ள ஜெயங் கொண்ட சோழ மண்டலம் என்பது பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட பகுதி. பிற்கால சோழர்களின் ஆளு கையின் கீழ் இப்பகுதி வந்த பிறகு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயர் மாற்றம் பெற்றதை அறிய முடிகிறது. இக்கல் வெட்டில் இடம் பெறும் எயில் நாடு என்பது திருப் பத்தூர், ஏலகிரி மலை ஆகிய ஊர்களை உள்ளடக் கிய பகுதி.   ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய சோழர் களின் நாட்டுப் பிரிப்பு முறையை இக்கல் வெட்டு மூலம் அறிய முடிகிறது.  இக்கல்வெட்டின் அருகில் நடுகல் உள்ளது.

அந்தநடு கல்லில் உள்ள வீரன், கல் வெட்டுக் குறிப்பிடும் வீரனாக இருக்கலாம். 5 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் வீரனின் தோற்றம் பிரமாண் டமாகச் செதுக்கப்பட்டுள்ளது.  வலது கையில் நீண்ட வாளும்,  இடையில் கச்சுடன் கூடிய குறுவாளும் உள்ளன. வலதுபக்கம் கொண்டையும், காதுகளில் உள்ள காதணி களும் நுட்பமாக வடிவமைக் கப்பட்டுள்ளன.

வீரனின் கழுத்தில் ஆபர ணங்கள், கைகளில் கட கங்கள், கால்களில் வீரக் கழல்கள் உள்ளன என்றார் அவர்.
- விடுதலை நாளேடு 22. 6 .19

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...