காலச்சுவடு

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு



   August 29, 2022 • Viduthalai

செங்கல்பட்டு,ஆக.29- செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கற்குவைகள் என்பவை பெருங்கற் கால மக்களின் நினைவுச் சின்னங்கள் ஆகும். அன்றைய காலத்து மக்கள் இறந்த வர்களை அடக்கம் செய்த இடத்தை அடையாளம் காண்பதற்காக, பல குறியீடுகளை அமைத்திருந்தனர்.

அந்த வகையில் செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால  நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை சுமார், 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால அடையாளங்களாக உள்ளன. இவ் வூரில், தொல்லியல் துறை முறையாக அகழாய்வு மேற்கொண்டால், இப்பகுதி யின் தொன்மை மற்றும் ஏராளமான புதிய தகவல்கள் வெளி உலகுக்கு தெரியவரும் என வரலாற்று ஆய்வா ளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழர் தொன்மை வரலாற்று ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த வெற்றித்தமிழன் கூறியதாவது: பெருங் கற்கால நினைவுச் சின்னம் என்பது இன்றும் நம் மக்கள் வழக்காடுகளில் காரியம், கல்லெடுப்பு என்று கூறுவ துண்டு.

இறந்தவர்களைப் புதைத்த இடத் திலோ அல்லது அவரது எலும்புகளைத் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட  நினைவுச் சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள். இவை அமைக்கப் படும் முறையை வைத்து கற்குவை, கற் படை வட்டம், கற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல் என பலவகைகளில் பெயரி டப்படுகின்றன.

இறந்தவர்கள் நினைவாக அல்லது  நினைவுச் சடங்குகளுக்கான கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சின்னங்கள் இவற்றுள் அடங்கும். மேலும், தாழியிலிட்டு புதைக்கும் சின்னங்களையும் பெருங்கல் சின்னங்களாக கருதப்படு கின்றன. இறந்தவர்களுக்காக அமைக் கப்பட்ட இவ்வகையான ஈமச்சின் னங்கள் குறித்து சங்க இலக்கியங்களில் தகவல்கள் உள்ளன.

பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. மேற்கு அய்ரோப் பிய நாடுகள், பிரிட்டன் நடுநிலை நாடுகள் என இன்னும் பல இடங்களில் இவை காணப்படுகின்றன. அங்கெல் லாம் சின்னங்களை பாதுகாத்து ஆய்வு செய் கின்றனர்.

இப்படியான புராதன சின்னங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவ லாகக் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க வகையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காணப்படும் பெருங்கற்கால சின் னங்கள், மிகவும் தொன்மையானது.

அப்படியான நினைவுச் சின்னங்கள் தமிழ்நாட்டில் மலைக்குன்று பகுதி களில் பரவிக் கிடக்கின்றன. நம் மண் ணுக்கு பெருமை சேர்க்கும் இப்பகுதிகளை பாதுகாக்க ஆய்வுகள் நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைத்து தெரிவிக்க வேண்டும்.

பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய இந்த இடுக்காட்டினை தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்யும்போது, இங்கு மேலும் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேரம் ஆகஸ்ட் 29, 2022 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செங்கல்பட்டு, நினைவுச் சின்னம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுப்பு


  August 03, 2022 • Viduthalai

கமுதி, ஆக. 3-- ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 2,500 ஆண்டுகள் பழைமை யான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுக் கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட் டம் கமுதியை அடுத் துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் சில மாதங் களுக்கு முன்பு கண்மாய் வரத்து கால்வாய் சீர மைப்பு பணி நடைபெற்றது. 

அப்போது அங்கு ஒரு பகுதியில் 10 முதல் 20 வரையிலான முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகானந்தம் என்பவர் சிதைந்து கிடந்த பொதுமக்கள் தாழி மற்றும் அருகில் புதைந்து கிடந்த முது மக்கள் தாழி களை தோண்டி பார்த் துள்ளார். அதில் வித்தி யாசமான நிறத்தில் மண், அதனுள் சிறிய வகை கருப்பு,சிவப்பு நிறத்தில் மண்குவளைகள், எலும் புக்கூடுகள், பட்டையான இரும்பு கம்பிகள் ஆகி யவை இருந்தது தெரிய வந்தது. அதன் அருகே கீழடியில் கிடைத்ததை போன்று 2,500 ஆண்டு கள் பழைமையான 3 அடுக்கு உறைகிணறு புதைந்து இருப்பது கண் டறியப்பட்டது. 

இதுகுறித்து முருகானந்தம் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த அதிகாரி யும் பார்வையிட வர வில்லை என புகார் தெரிவித்தார். 

இதுதொடர்பாக தொல்லியல் அலுவலர் களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்தபோது வைகை ஆற்றின் கிளை ஆறுகளான கிருதுமால் நதி குண்டாறு படுக்கை யில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததாக அடையா ளங்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள்தாழி, மண் குவளை, உறைகிணறு ஆகிய 2,500 முதல் 3000 ஆண்டுகள் பழைமையா னது என தெரிவித்து உள்ளனர். எனவே செய் யாமங்கலம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் அகழாய்வு செய்தால் தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகள் தெரியவரும். தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரம் ஆகஸ்ட் 07, 2022 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: முதுமக்கள் தாழி, ராமநாதபுரம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

10ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

    September 20, 2022  • Viduthalai மதுரை, செப்.20   திருச்சுழி அருகே 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் ...

  • இராசராச_சோழனின்_பொற்கால_ஆட்சி ?
    பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள் ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய ஆழமான அர்த்தமுறை. ராசராச...
  • மாவலி, நரகாசுரன் போன்றோர் நம் இன மண்ணுரிமைப் போராளிகள்!
    புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் க...
  • திருப்பத்தூர் அருகே கி.பி. 11ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
    திருப்பத்தூர், ஏப்.12  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்...
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

  • முகப்பு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • மார்ச் 2023 (2)
  • பிப்ரவரி 2023 (3)
  • ஜனவரி 2023 (3)
  • ஆகஸ்ட் 2022 (2)
  • ஜூலை 2022 (1)
  • பிப்ரவரி 2022 (1)
  • ஜனவரி 2022 (2)
  • அக்டோபர் 2021 (1)
  • செப்டம்பர் 2021 (2)
  • ஆகஸ்ட் 2021 (8)
  • ஜூலை 2021 (4)
  • மே 2021 (2)
  • ஏப்ரல் 2021 (1)
  • ஜனவரி 2021 (1)
  • டிசம்பர் 2020 (1)
  • ஜூன் 2020 (1)
  • மார்ச் 2020 (1)
  • பிப்ரவரி 2020 (3)
  • டிசம்பர் 2019 (2)
  • நவம்பர் 2019 (3)
  • அக்டோபர் 2019 (6)
  • செப்டம்பர் 2019 (13)
  • ஆகஸ்ட் 2019 (3)
  • ஜூலை 2019 (2)
  • ஜூன் 2019 (5)
  • மே 2019 (5)
  • ஏப்ரல் 2019 (6)
  • பிப்ரவரி 2019 (1)
  • ஜனவரி 2019 (1)
  • டிசம்பர் 2018 (3)
  • நவம்பர் 2018 (4)
  • அக்டோபர் 2018 (4)
  • செப்டம்பர் 2018 (2)
  • ஆகஸ்ட் 2018 (2)
  • ஜூலை 2018 (5)
  • ஜூன் 2018 (7)
  • மே 2018 (3)
  • மார்ச் 2018 (8)
  • பிப்ரவரி 2018 (9)
  • ஜனவரி 2018 (4)
  • டிசம்பர் 2017 (18)
  • நவம்பர் 2017 (4)
  • அக்டோபர் 2017 (5)

லேபிள்கள்

  • அகழ்வாய்வு
  • அகழாய்வு
  • அம்பேத்கர்
  • அய்யனார் சிலை
  • அய்ராவதம் மகாதேவன்
  • ஆணைகள்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆந்திரா
  • ஆய்வு
  • ஆஷ் துரை
  • இந்தியா
  • இராசராசன்
  • இராஜராஜ சோழன்
  • இரும்பு
  • இளையான்குடி
  • உறைகிணறு
  • ஏரி
  • கல் கருவி
  • கல் செக்கு
  • கல் திட்டை
  • கல்செக்கு
  • கல்யாண ரத்து
  • கல்வி
  • கல்வி உரிமை
  • கல்வெட்டு
  • கலகம்
  • கற்பதுக்கை
  • கற்றூண்
  • காசு
  • காண்டாமிருகம்
  • கால்வாய்
  • கிணறு
  • கிருஷ்ணகிரி
  • கீழடி
  • குகை
  • குத்துக்கல்
  • குமிழி மடைத் தூண்
  • கேரளா
  • கொந்தகை
  • கொற்கை
  • கோட்சே
  • கோயில் அனுமதி
  • கோயில் நுழைவு
  • சங்க கால நகரம்
  • சமணம்
  • சாத்தூர்
  • சாதனை
  • சிங்கம்புணரி
  • சிலை
  • சிவகங்கை
  • சிவகளை
  • சிவாஜி
  • சுவர்
  • செங்கல்பட்டு
  • செய்யாறு
  • சென்னிமலை
  • சோழர்
  • சோழன்
  • தடயம்
  • தமிழ் எழுத்து
  • தானம்
  • திப்புசுல்தான்
  • திராவிடர் இயக்கம்
  • திருமணம்
  • திலகர்
  • தீவிரவாதிகள்
  • துலாபாரம்
  • நடுக்கல்
  • நடுகல்
  • நம்பூதிரி
  • நாணயம்
  • நியாண்டர்தல்
  • நினைவகம்
  • நினைவுச் சின்னம்
  • நீதிக்கட்சி
  • நெல்
  • படுக்கை
  • பரோடா
  • பல்லவர் காலம்
  • பல்லவர்கால சிலை
  • பழமை
  • பழைமை
  • பாண்டியர் காலம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனர்
  • பாறை ஓவியம்
  • பாறை கீரல்
  • பானை
  • புத்தம்
  • புதை படிமம்
  • புதைவிடம்
  • புரட்டு
  • பூம்புகார்
  • பெண்கள் சட்டய
  • பொருட்கள்
  • பொற்பனைக் கோட்டை
  • மகாபாரதம்
  • மகாவீரர்
  • மண் பானை
  • மறைவு
  • மன்னன்
  • மானாமதுரை
  • முதுமக்கள்
  • முதுமக்கள் தாழி
  • மூடத்தனம்
  • மேலாடை
  • ராமநாதபுரம்
  • வரலாறு
  • வாணியர்
  • வாள்
  • விருது
  • விலங்கு மனிதன்
  • வைரமுத்து
நீர்வரி தீம். Blogger இயக்குவது.