திங்கள், 26 மார்ச், 2018

1928இல் சமூகத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்

மதுரை ஜில்லா, உத்தமபாளையம் தாலுகா, ஆண்டிப்பட்டி போஸ்டாபீசானது அக்கிராமத்துக்குள் வைக்கப்பட்டும் பிராமணர் போஸ்ட் மாஸ்டராக நியமிக்கப்பட்டு மிருப்பதால் பஞ்சமர்கள் மேற்படி போஸ்டாபீசுக்குள் வரக்கூடாதென்றும் வெளியில் சுமார் கால் பர்லாங்கு தூரத்திலேயே நின்று மேற்படி போஸ்டாபீசுக்கு தடையன்னியில் வரக்கூடிய ஆசாமிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாகத்தான் பஞ்சமர்கள் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன பெற்-றுக்கொள்ள வேணுமென்றும் செய்திருப்பது மிகப் பரிதாபமாகயிருக்கிறது. பஞ்சமர்களுக்கு கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன தேவையாயிருந்தால் அவர்கள் அக்கிரகாரத்துக்குள் தாராளமாய்ப் பிரவேசிக்கக் கூடிய ஆசாமிகளை தேடிப் பிடித்து கெஞ்சிக் கேட்டால், இரக்கமுள்ள புண்ணியவான் களாயிருந்தால் பஞ்சமர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு போய் போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்து ஸ்டாம்பு வாங்கிக் கொடுக்கின்றார்கள். சிலர் ‘இதுதான் எனக்கு வேலையோ’வென்று போய்விடுகிறார்கள். ஆகவே சில சமயம் ஏழை சகோதரர்கள் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன வாங்க முடியாமல் திரும்பி வந்து விடவேண்டியதாயும் ஏற்படுகிறது. ஆண்டிப்பட்டி போஸ்டாபீசைச் சேர்ந்த சுமார் 15 கிராமங்களிலுள்ள பஞ்சமர்கள் இது விஷயமாக ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அநேக தடவைகளில் இவ்வித ஜனங்கள் கஷ்டப்படுகிற பரிதாபத்தைப் பார்த்து யானே எனது முக்கிய ஜோலிகளை நிறுத்திவிட்டு பஞ்சமர்களுக்கு ஸ்டாம்பு முதலியவை வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் மேல் எனது சொந்த ஜோலிகளைப் பார்க்க நேர்ந்திருக்கின்றன. ஆகையால் ஏழை ஜனங்களின் பரிதாப நிலைக்கிரங்கி மேற்படி போஸ்டாபீசை பொது ஸ்தலத்தில் வைத்து யாவரும் யாதொரு தடையன்னியில் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியவைகளை காலாகாலத்தில் பெற்றுக் கொண்டு போகவேண்டிய யேற்பாடுகளைச் செய்துவைக்க வேணுமாய் ரொம்ப வணக்கமுடன் கேட்டுக்கொள்கிறேன்.
‘உள்ளூர்வாசி’
‘குடிஅரசு’ 28.10.1928

பார்ப்பனனிடமிருந்து விபூதி வாங்காததால் ஜாதிப்பிரஷ்டம்

26.10.1928இல் எனது திருமண ஊர்வலத்தின்போது எங்கள் சொந்த மாரியம்மன் ஆலயத்திற்குச் செல்ல அங்கிருந்த பார்ப்பான் சூட தீபாராதனை செய்து காண்பித்து விபூதி கொடுத்தான். நான் விபூதி அவனிடமிருந்து வாங்காமலே யானே எடுத்து அணிந்துக்கொண்டேன். அதன்பின் பார்ப்பான் எனக்கு மாலையிட வந்தான். நான் அவனை போடவிடாமல் கையில் தரும்படி கேட்டேன். மேற்படியான் அப்படி கையில் கொடுத்துப் போடுவது வழக்கமில்லை என்று மறுத்து அப்புறம் என் கையில் கொடுத்தான். யானே மாலை அணிந்து பெண்ணுக்கும் அணிந்து தேங்காய் பழம் எடுத்துக் கொண்டேன்.

தேங்காய் பழம் எடுத்துக் கொண்டவுடன் என்னுடன் இருந்த என் அத்தான் தட்சணை கொடுப்பது வழக்கமென்று 2 அணாவை கொடுத்தார். பார்ப்பனன் அதையும் பெற்றுக் கொண்டு “இம்மாதிரி தங்கள் குருக்களை தங்கள் வேலைக்காரர்களைப்போல் கேவலப்படுத்திவிட்டீர்கள். ஆகையால் இனிமேல் யான் இந்த கோவிலில் இருக்க முடியாது; இச்க்ஷணமே சம்பளக் கணக்கு தீர்த்துக் கொடுக்க வேண்டும்’’ என்று என் உறவின் முறையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டான். செய்தவுடனே என்னையும் விசாரியாமல் யான் செய்தது குற்றம்தான் என்று ஒருசில பகுதியார் தாங்களாகவே தீர்மானம் செய்துகொண்டு இன்றைக்கு என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். விசாரிக்க “யான் செய்தது குற்றமல்ல’’ என்று வாதித்தேன். “உறவின் முறையோரெல்லாம் சேர்ந்து குற்றமென்று முடிவு செய்திருக்க நீ குற்றம் செய்யவில்லை என்று மறுக்கிறாய். இது இன்னும் இதைவிட அதிக குற்றம் ஏற்படும், ஆகையால் பார்ப்பானிடம் விபூதி, குங்குமம், மாலை இவை நீதானாய் எடுத்துக் கொண்ட குற்றத்துக்காக உடனே யாவருக்கும் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள் என்றார்கள். மறுபடியும் யான் செய்தது குற்றமல்ல என்று விளக்கினேன். அப்புறம் அவர்களாய் தீர்மானித்து என்னையும் என் தாய் தந்தையரையும் ஜாதிப் பிரஷ்டம் என்று உடனே தள்ளிவைத்து விட்டார்கள். எந்த கவர்ன்மெண்டிலும் இம்மாதிரி ‘நியாயம்’ கிடைக்காது. இவ்வளவு ஒழுங்கான உறவின்முறையாருடன் இருப்பதைவிட தனியே இருப்பது நல்லது என்று தற்சமயம் சந்தோஷமாய் விலகி இருக்கிறேன். என்றைக்கு என் உறவின்முறையார் சுயமரியாதை பெறுவார்களோ! - --_வே.மா.கி.சிங்காரவேல்
- குடிஅரசு - 04.11.1928

- உண்மை இதழ், 1-15.2.18

வெள்ளி, 23 மார்ச், 2018

பார்ப்பனர்களாய் மாற்றம்

பெரிய அக்கிரமம்
25.03.1928 - குடிஅரசிலிருந்து... 

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரம மாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக் கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர் களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய் யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டன வாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத் தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்ம வர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் சிறீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் சிறீமான் கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர் களாக வும், கோபி சந்தனம் போட்டார்களானால் சிறீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் சிறீமான் ஆதிநாராயண செட்டியா ராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக் கணக்கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!! எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமை களும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.
- விடுதலை நாளேடு, 23.3.18

புதன், 21 மார்ச், 2018

டாக்டர். சுப்பராயன் ஆட்சியும் எதிர்ப்பும்

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து...

டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்ப னர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத் திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித்துவமோ பொருந்தியது என்று சொல்வதற்கில்லை. இந்த ஒரு வருஷத் திற்குள்ளாக 3, 4, தடவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய்விட்டது. இதைப் போன்ற விளையாட்டு விஷயங்களே மிகுதியும் சட்ட சபைகளில் நடக்கின்ற தேயல்லாமல் பொது ஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை.

இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சியாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்றதாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறதாகத் தெரி கிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் ஆறு பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்டதானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்கா ரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும், அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசிய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமுகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப்பிராயம். கொஞ்ச காலமாக பனகால் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்றதாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத்தின்மேல் குற்றம், அறியாமை யின்மேல் அறியாமையாகவே, நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சி தேய்ந்து போகும்படி யானதாகிவிடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர்களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பரா யனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை என்னவென்று கேட்கின் றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப் பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம்.

உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந் தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரிகளை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டுவிட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனக் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல் லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட் டாலும் அதுகெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசியாக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனியாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக!

தமிழனுக்கு மற்றவர்கள் போல இன உணர்ச்சி இல்லா விட்டாலும் மான உணர்ச்சி இருக்க வேண்டாமா? நம் முட்டாள்கள் உரிமை யைக் கண்டவனுக்கு - எதிரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவன் அனுபவிக்கப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்கின் றானே. உரிமையை விட்டுக் கொடுத்த பின் சுதந்திரமென்ன? சுயராஜ்ஜியமென்ன?

மதச் சம்பந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

- தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு, 17.3.18

திங்கள், 19 மார்ச், 2018

வாணியர்கள் கோயிலுக்குள் போகலாம்திருச்செந்தூர் கோயிலுக்குள் வாணியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் மூலம் தீர்ப்பு பெற்று அனுமதிக்கப்பட்டதை விளக்கும் செய்தி 24.3.1935 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியாகியுள்ளது.

19.3.1935இ-ல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டோன்ஸ் இருவரும் திருச்செந்தூர் ஆலயப் பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்பந்தமான வியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவி கவுன்சில் வரையில் போய் மறுபடியும் அய்க்கோர்ட்டுக்கு வந்தது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் “எண்ணெய் வாணியர்” என்ற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு.

வழக்கின் வரலாறு

திருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பினருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்பிரமணிய சுவாமி தேவஸ் தானத்தின் தர்மகர்த்தாக்களையும், ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதிகளாக்கி, அந்த ஆலயத்தில் மற்ற மேல்ஜாதி இந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்ய தமக்கு உரிமை உண்டென்று வழக்கு தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப்-கோர்ட்டில் நடந்தது.

ஆட்சேபம்

பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப் பிரகாரத்தில்கூட இந்த வகுப்பினர் வருவதற்கு உரிமை கிடையாது. 1877இல் அதைப் பற்றி வியாஜ்ஜியம் நடந்திருக்கிறது. வாணியர்களுக்கு இந்தக் கோயிலில் பிரவேச உரிமை இல்லையென்று அப்போது தீர்ப்பு கூறப்பட்டு இருப்பதால், இப்போது கொண்டுவரப்படும் வழக்கு முன் வழக்கால் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் விவாதித்தார்கள்.

சப் கோர்ட்டு தீர்ப்பு

வாணியர்கள் “வைசியர்கள்’’ என்று ருசுவாகா விட்டாலும் அவர்கள் சூத்திரர்களுக்கு குறைவானவர்கள் அல்ல. முன் வியாஜ்யம் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியமல்ல. ஆகையால் இப்போது வரும் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியத்தை முன் தீர்ப்பு பாதிக்காது என்று சப்-கோர்ட்டு கருதியது. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்று தீர்ப்புக் கூறப்பட்டது.

பிரதிவாதிகள் அய்க்கோர்ட்டில் அப்பீல்

இதன் மீது ஹைக்கோர்ட்டில் தர்மகர்த் தாக்களும், ஸ்தலத்தாரும் அப்பீல் செய்தனர். முன் தீர்ப்பினால் பாதகம் தான் என்று சொல்லி, அய்க்கோர்ட்டு வாணியர்களுக்கு விரோதமாகத் தீர்ப்புக் கொடுத்தது.

பிரிவி கவுன்சிலில் மாறியது

முன் வழக்கால் பாதகம் ஏற்பட்டதா என்பதைப் பற்றி வாணியர்கள் பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்தார்கள். பாதகம் இல்லையென்று பிரிவி கவுன்சில் சொல்லிவிட்டதோடு, இந்த வழக்கின் உள் விஷயங்களையும் கவனித்து தீர்ப்புக் கூறும்படி உத்திரவிட்டது. கடைசியாக இப்பொழுது அய்க்கோர்ட்டில் வழக்கு வந்தது. வாணியர்கள் எக்காலமும் பிரவேச உரிமையை அனுபவிக்க வில்லை என்பதை ருசுச் செய்வது பிரதிவாதிகள் பொறுப்பு; ஏனென்றால் வாணியர்கள் வைசியர்களைவிட தாழ்ந்த படியில் இருப்பவர்களல்ல. பிரதிவாதிகள் முன் அனுஷ்டானத்தை ருசுச் செய்யவில்லை. 1862-க்கு முன் வாணியர்களுக்கு பிரவேச உரிமை இருக்கவில்லையென்று ருசுவாகவில்லை. ஆகையால், அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது சப்-கோர்ட்டின் தீர்ப்பு உறுதி. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்பதே இப்போது ஏற்பட்டுள்ள தீர்ப்பு. இந்த வழக்கில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.எல். வெங்கடராமையர், வி.சம்பந்தம் செட்டி ஆகியோர் வாணியர்கட்சிக்கும், டி.ஆர்.வெங்கடராமையர், கே.எஸ்.சங்கரைய்யர், டி.நல்லசிவம்பிள்ளை தர்மகர்த்தாக்களுக்காகவும் ஆஜரானார்கள். (தினமணி)

குறிப்பு: பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் இல்லாமல், பார்ப்பனர்களுடைய வருணாசிரம தர்மம், சுயராச்சிய ஆட்சி இருந்திருக்குமானால், இத்தகைய தீர்ப்பு ஏற்பட்டிருக்க முடியுமா? இத்தகைய வழக்கு தொடர்ந்ததையே அதிகப் பிரசங்கித்தனமானதென்று கருதி அதற்காக வாதிகளுக்கு கடுந்தண்டனை கொடுத்தி ருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம்? வருணாசிரம தரும ஆட்சிகாரப் பார்ப்பனர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிபவர்கள் இதை கவனிப்பார்களா?

- பத்திராதிபர் குறிப்பு
- ‘குடிஅரசு’, 24.03.1935 


- உண்மை இதழ், 1-15.1.18

வெள்ளி, 2 மார்ச், 2018

ஆதிச்சநல்லூர்


1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூ ரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப் பட்டதாகத் தெரிகிறது. பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத் தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வு களை நடத்திய பிரித்தானியத் தொல்லி யலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தி யாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத் தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்ச நல்லூரில் இருந்தது எனத் தொல்லியலா ளர்கள் கருதுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப் பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமான வையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத் தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழி கள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்கு களாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக் களுடன்கூடிய பல தாழிகளும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமு டன் உள்ளனர். அது தமிழர்களின் பண் டைய நாகரீகத்தைச் சொல்லும் இடம், சிந்து சமவெளிக்குமுன்பாகவே ஒரு முழுமையடைந்த நாகரீகத்தைக் கொண்ட நாகரீகமாக இருந்தது. இங்கு கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தி யுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கை யைக்கூட வெளியிடவில்லை, அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்ச நல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது  ''2004 மற்றும் 2005இல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று இன்று வரை வெளி யிடப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு மத்திய கலாச்சாரத்துறை வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியா வந்து ஆய்வு செய்ய கடுமையான விதிமுறைகளை விதித்த பிறகு ஆதிச்சநல்லூர் குறித்த ஆய் வுகளை அரசைத்தவிர மற்ற யாருமே செய்ய இயலாமல் போனது. இதனால் ஆதிச்ச நல்லூர் நாகரீகம் மெல்ல மெல்ல மக்களி டையே மறைக்கப்பட்டுக்கொண்டு இருக் கிறது.

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18

வியாழன், 1 மார்ச், 2018

குற்றால அருவியில்.... குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், என்ற நிலை மாற்றம்

''குற்றால அருவியில்....
குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும்,
ஏனைய சாதியைச் சார்ந்த யாரும்
குளிக்க கூடாது....???
என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர்
என்பது....
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ????.
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை....
சாதி வெறியனான
வாஞ்சி நாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரு நாள் ஆஷ் துரை
மாலை நேரத்தில்
தனது குதிரையோட்டி
முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார்.
நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக  கேட்கிறது.
ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.

அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த ராவுத்தர்
ஓடி வந்து
"துரை அங்கு போகாதீர்கள்"
என்று தடுக்கிறார்.
ஏன் என்று வினவிய
துரைக்கு "
அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும்
நீங்கள்
அங்கு போகக் கூடாது
என்றும்
சொல்லுகிறார்....!!!

உடனே ஆஷ் துரை
ராவுத்தரை பார்த்து
சரி நீ போய்
பார்த்து வா என்றார்.
சேரிக்குள் போன
முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்
" முதல் பிரசவம் துரை....
சின்ன பொண்ணு
ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம்,
பிள்ளை வயித்துல  தலை மாறிக் கிடக்காம்"
பரிதாபம்.....
இனி எங்கிட்டு துரை
பொழைக்கப் போகுது
என்றார்.

ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக் கேட்க ,
அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க
அய்யா....
பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது ???
என்றார் ரவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்துரை இறங்கி
அக் குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு  கொண்டு சென்றால்.....
ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள்
சென்று
உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையோட்டியைப் பணித்தார் துரை.

ஓடிப் போன ராவுத்தர்
ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம்  தாண்டிய பொழுது.....
துரையின் வண்டியோட்டி எனத் தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறார்.
விசயத்தை சொல்லி
ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.

அந்த வழியாய் செல்ல....
வண்டிப்பாதை பிராமணர்களின்  அக்கிரஹாரத்தை தாண்டித் தான் சென்றாக வேண்டும். சரியாய்
அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டி மறிக்கப்படுகிறது.

ஒரு சேரிப்பெண்ணை
ஏற்றப் போகும்
வண்டி
இப் பாதை வழியே
போகக் கூடாது என்று பார்ப்புகள் வழி மறித்து
வழி விட மறுக்கிறார்கள்...!!!
வண்டி கொடுத்த குடியானவனையும்
ஊர்
நீக்கம் செய்து விடுவோம் என எச்சரிக்கிறார்கள்...???

வண்டி கொண்டு வரச் சொன்னது
துரையும்
அவரின்
மனைவியும் தான் என்று விபரம் சொன்ன
பிறகும்
ஏற்க மறுக்கிறார்கள் ....!!!

இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார்
ராவுத்தர்.
இதைக் கேட்ட ஆஷ் துரை அவர்கள்,
தனது வண்டியில்
அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.

குதிரையோட்டியின் பக்கதிலேறி
அமர்ந்தும்  கொண்டார்.
வண்டி அக்கிரஹாரத்திற்குள்  நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய்
வழி மறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு
இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய்
இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"
என்கிறார்கள்.

வழி விட சொல்லிப் பார்த்த துரை 
அவர்கள் வழி விட மறுக்கவே.... வண்டியைக் கிளப்பு
என்று
உத்தரவிடுகிறார்.
மீறி  வழி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல்
துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.

ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில்
ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான்
அவன் பெயர் வாஞ்சிநாதன்.

அப்போது வாஞ்சிநாதன் எடுத்த
சபதம் தான்......
17.06.1911 அன்று
ஆஷ் துரை
சுட்டுக் கொல்லப்பட  வஞ்சகமாக
அமைந்து விட்டது.

மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு
இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.

இதுவும் "ழான் வோனிஸ் எழுதிய
Ash Official
Notes.....
என்னும் குறிப்புகளில்
அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது...???!!!
🙏 (நன்றி ÷ சுந்தர மகாலிங்கம் , வாட்ஸ் ஆப்)

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...