Published February 16, 202, விடுதலை நாளேடு
பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது.
பழனி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய் வாளர் நாராயணமூர்த்தி வழி காட்டுதலின்படி, பழனியாண் டவர் மகளிர் கல்லூரி வர லாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர் கள் தங்கம், ராஜேஸ்வரி தலை மையிலான மாணவிகள் கள ஆய்வுமேற்கொண்டனர். இதில், 1000ஆண்டுகள் பழை மையான தடுப்பணை கண்டறி யப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக் கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந் தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதி யில் உற்பத்தியாகி, காட்டாறாக சில கி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற் றில் கலக்கிறது.
இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட் டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட்டிருந்ததை, அணை யின் சிதைந்துபோன இடிபாடு களில் இருந்து அறிய முடிகிறது.
ஆற்றின் கிழக்கு கரைநெடு கிலும் ஓரமாக தடுத்து, அணை கட்டியதன் மூலம் ஆறு நேராக வடக்கே 2 கி.மீ. தொலைவு பாய்ந்து, அம்மாபட்டியான் குளத்திலும், குமார சமுத்திரக் குளத்திலும் கலப்பதால் அப் பகுதி விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்து கிறது.
ஆற்றின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்கள் இருப்பதால், ஆற்றில் வரும் மிகையான வெள்ளம் இந்த தடுப்பணையில் அமைக்கப் பட்ட மதகுகள் மூலம் 3 குளங் களையும் நிரப்பிவிட்டு, இறு தியாக சண்முகநதியில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் காட் டாற்று வெள்ளம் தடுப்பணை யையும், மதகுகளையும் உடைத் தெறிந்ததை அணையின் சிதைவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது வெறும் 50 மீட்டர் தொலைவு மட்டுமே காணப்படுகிறது.
இதை தடுப்பணை என்று சொல்வதைவிட, தடுப்புக் கரை என்று சொல்வதே பொருத்த மானது. இந்த தடுப்பணை மிகப் பெரிய பாறாங்கற்களைக் கொண்டும், செங்கற்களைக் கொண் டும் கட்டப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் 10ஆம் நூற் றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றிருப்பதால், தடுப் பணை கி.பி.10ஆம் நூற்றாண் டில் கட் டப்பட்டிருக்கலாம்.
இதன் மூலம், இந்த தடுப்பணை 1,000 ஆண்டுகள் பழைமையானது என்பதை அறிய முடிகிறது. அணையின் மேற்புறம் காரைப் பூச்சு உள் ளது. பூச்சு விலகாமல் இருக்க வும், கரையின் மேற்புறப் பிடி மானத்துக்காகவும் இரும்பைக் காய்ச்சி ஊற்றிய தடயம் தென் படுகிறது. இது ஒரு புதுமையான கட்டுமான வகை எனலாம்.
இந்த தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசனத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.