செவ்வாய், 31 ஜூலை, 2018

தமிழ் நாட்டில் நினைவகங்கள்

எனக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது. ''மானங்கெட்ட தமிழனே! என்று அது தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். பெயராக இருக்கிறது.

அட மானங்கெட்ட தமிழனே ராஜராஜசோழனை, ராஜேந்திரசோழனை, பாண்டிய மன்னனை எங்கேடா காணும்? வெள்ளையர்களை எதிர்த்தவர்களுக்கு சிலை எங்கே? என்று நீட்டி முழக்குகிறது அந்த வாட்ஸ் அப்.

ஐயோ பாவம்! மானங்கெட்ட தமிழனே என்று கேட்கும் அந்த மானமுள்ள தமிழனுக்கு தமிழ்நாடு தெரியுமா என்று தெரியவில்லை? அல்லது கைபர் வாசியா தெரியவில்லை?

இந்த நாட்டில் தான்...

1. வள்ளுவர் கோட்டம்
2.வள்ளுவருக்கு 133 அடி சிலை
3. காமராஜர் நினைவகம்
4. பக்தவத்சலம் நினைவகம்
5 காந்தி மண்டபம்
6. இராஜாஜி நினைவாலயம்
7. பாரதியார் நினைவு இல்லம் சென்னை
8. காமராஜர் நினைவு இல்லம்
9. மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம்
10.சுதந்திரப் போராட்ட தியாகிகள் மணிமண்டபம்
11.இரட்டமலை சீனிவாசன் நினைவகம்
12. காயிதேமில்லத் மணிமண்டபம்
13. திருப்பூர் குமரன் நினைவகம்
14. உடுமலை நாராயணகவி மணிமண்டபம்
15. தீரன் சின்னமலை மணிமண்டபம்
16. இராஜாஜி பிறந்த இல்ல நினைவகம்
17. வள்ளல் அதியமான் கோட்டம்
18. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லம்
19. நாமக்கல் கவிஞர் மாளிகை
20. தாளமுத்து நடராசன் மாளிகை
21. வ.வே.சு.அய்யர் நினைவு இல்லம்
22. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்
23. தில்லையாடி வள்ளியம்மை நினைவகம்
24. தமிழ்த்தாத்தா உ.வே.சா நினைவு இல்லம்
25. கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்
26. குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம்
27. மருதுபாண்டியர் நினைவு மண்டபம்
28. தியாகசீலர் கக்கன் மணிமண்டபம்
29. தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம்
30. பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம்
31. பாவாணர் மணிமண்டபம்
32. காமராஜர் பிறந்த இல்லம்
33. காமராஜர் நூற்றாண்டு விழா மண்டபம்
34. பாரதியார் மணிமண்டபம்
35. மகாகவி பாரதியார் இல்லம் எட்டயபுரம்
36. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இல்லம்
37. வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபம்
38. வீரன் சுந்தரலிங்கம் நினைவகம்
39. வீரன் வெள்ளையத்தேவன் நினைவகம்
40. உமறுப்புலவர் நினைவகம்
41. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மணிமண்டபம்
42.பூலித்தேவன் நினைவு மாளிகை
43. கால்டுவெல் நினைவு இல்லம்
44. ஜீவா மணிமண்டபம்
45. காந்தி நினைவு மண்டபம்
46. காமராஜர் மணிமண்டபம்
47. செய்கு தம்பி பாவலர் நினைவு மண்டபம்
48. முத்து மண்டபம்
49. சுப்பிரமணியசிவா மணிமண்டபம்
50. தமிழிசை மூவர் மணிமண்டபம்
51. வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம்
52.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்
53. தியாகி சின்னமலை நினைவுச் சின்னம்
54. வாஞ்சிநாதன் மணிமண்டபம்
55. மார்ஷல் நேசமணி மணிமண்டபம்
56. வேலுநாச்சியார் மணிமண்டபம்
57.தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்
58. வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்
59.சிங்காரவேலர் மணிமண்டபம்
60. வீரன் ஒண்டி வீரன் மணிமண்டபம்
61. மனுநீதிச்சோழன் மணிமண்டபம்
63. இராஜாஜி மண்டபம்
64. கலைவாணர் அரங்கம்
65. வெள்ளையனே வெளியேறு இயக்க பொன்விழா நினைவுத்தூண்
66. சுதந்திரப் பொன்விழா நினைவுத்தூண்
67. குடியரசு பொன்விழா நினைவுத்தூண்
68. சிப்பாய் புரட்சி நினைவுத்தூண்
69. காமராஜர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண்
70. வீரத்தாய் குயிலி நினைவுச்சின்னம்

- இவ்வளவும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை கம்பீரமாகக் காட்சி தரும்போது பெரியாரும் அண்ணாவும் மட்டும் அவர்கள் கண்ணுக்கு உறுத்துகிறது.

இவை காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டதா திராவிட ஆட்சியில் அமைக்கப்பட்டதா என்பதை அந்த மானமுள்ளவன் கண்டுபிடித்துச் சொன்னால் தமிழர் இனமானம் பெறலாம்!
- கட்செவி மூலம் வந்தது.

திங்கள், 30 ஜூலை, 2018

திலகர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை

கள்ள கையெழுத்து மோசடி ஜாதிவெறி மதத் துவேச வழக்குகளில் சிறைக்குச் சென்ற பாலகங்காதர திலகர்


ஆதாரங்களுடன் பதிவு
நாடுமுழுவதும் சங்கிகளால் திலகரின் பிறந்த நாள் (23.7.2018) விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று திலகர் முழங்கியதாக கூறும் அவர்கள்,

சுதந்திரமடைந்த இந்தியாவை ஆளும் உரிமையும், கல்வியும்,  அரசியலும் பார்ப்பனர்களுக்கே உரியது என்று சாதிவெறி பிடித்த இந்த பார்ப்பனன் கூறியதை மட்டும் வசதியாக மறைத்து விடுவார்கள்.  இன்றைக்கு நடந்த கள்ளக்காதல் கொலைகளையே தேசபக்த கொலைகளாக திரித்து கூறும் பார்ப்பனீய கும்பல்களும், பார்ப்பன ஊடகங்களும்....

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் மக்களை தேசவிரோதிகளாகவும், பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக போராடியவர்களை தேசபக்தர்களாவும் வரலாற்றையே திரித்து நமக்கு சொல்லி வருவதோடு...

சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி பார்ப்பனீய  ஆர்.எஸ்.எஸ்., கும்பலால் மிகப் பெரும் தேசபக்தராக சித்தரிக்கப்படும் பாலகங்காதர திலகர் உண்மையில் ஒரு சித்பவன் பார்ப்பன ஜாதி வெறியர், மதவெறியர்!

பிரிட்டிசார் மராட்டிய பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றிய ஆட்சியை திரும்ப பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரின் கோரிக்கையாக இருந்தது .

மகாத்மா ஜோதிபா பூலேவின் சத்யசோதக் சமாஜுக்கு எதிராக கலவரத்தை தூண்டுவதற்காகவே விநாயக சதுர்த்தி விழாவை ஆரம்பித்து வைத்தவர்.

காங்கிரசு மாநாட்டில் செருப்பு வீச்சைத் தொடங்கி வைத்தவர்.

1920 இல் அத்தானி பொதுக்கூட்டத்தில் பேசும்போது "பிராமணர் அல்லாத மக்கள் கல்வி கற்கவோ அல்லது அரசியலில் ஈடுபடவோ கூடாது என பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக பேசியதால் பம்பாய், சங்கலி, புனே கூட்டங்களில் மக்களால் கல்லடிபட்டவர்.

ஜாதி மறுப்புத் திருமணம்,  குழந்தைத் திருமண தடுப்பு போன்ற சட்டங்களை கடுமையாக எதிர்த்தவர்.

தீண்டாமைக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத் திட மறுத்தவர்.

இப்படிப்பட்ட திலகர் நாட்டுக்காக சிறைப்பட்டதாக பார்ப்பன கும்பல் வரலாற்றை எழுதி வைத்துள்ளது .

உண்மையில் பிறர் மீது அவதூறு சுமத்துதல், மோசடி, கள்ள கையெழுத்து,

பிளேக் நோய் பரப்பிய எலிக்கு ஆதரவான போராட்டம்,

முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரசாரம் போன்ற காரணங்களுக்காகத் தான் இவர் நான்கு முறை சிறை சென்றார்.

1. 1882 ஜூலை 16 இல் திலகர் முதன் முதலில் சிறைக்குச் சென்றது ஒரு அவதூறு வழக்கில்.

பம்பாய் அருகிலுள்ள கோலாப்பூர் சமஸ்தானத்தின் மன்னர் இறந்ததும் அவர் மகன் சிவாஜி VI என்ற சிறுவனை பதவியில் அமர்த்தினர் .

அவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு. மாதவ் பார்வே கோலாப்பூரின் பொறுப் பதிகாரியாக இருந்தார்.

முதன் முதலில் பத்திரிகைகளில் அவதூறு, துவேசம், கிசுகிசு எழுதியதே திலகர் தான்.

கோலாப்பூர் விவகாரத்திலும் திலகர் புதுசா ஒரு கதை கட்டினார்,

மன்னர் சத்ரபதி சிவாஜி  VI பைத்தியம் இல்லை என்றும்,

ஆனால் அவரை பைத்தியமாக்குவதற்கு மருந்து கொடுக்கப்படுகிறது. குறிப்பாக மாதவ் பார்வே மன்ன ருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து வருவதாகவும்.....

தன் கேசரி. மராத்தா பத்திரிகைகளில் எழுதினார்.

திலகர் தன் மீது அவதூறு சுமத்தியதாக கார்வார் மாதவ் பார்வே நீதிமன்றத்துக்குப் போனார்.

இதில் திலகருக்கு 4 மாதம் சிறை தண்டனை கிடைத்தது.

சிறைக்குப் போனபின்பு ஆங்கிலப் பேராசிரியராக இருந்த வர்ட் ஸ்வர்த் மூலம் அரசுக்கு மனு அனுப்பி பார்த்தார், ஒன்னும் வேலையாகல, நாலு மாசம் களி தின்னுட்டு வந்தார்.

இந்தியாவில் முதன் முதலில் அவதூறு வழக்கில் சிறை சென்றவர் இந்த பால் கங்காதர் திலக் தான்.

2. பிளேக் நோயை பரப்பும் எலிகளுக்கு ஆதரவான போராட்டம்

1897 இல் புனே நகரை பிளேக் நோய் தாக்கியதால் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்தனர் .

நோய் தாக்கி இறந்தவர்களை அடக்கம் கூட செய்ய பயந்து பிணங்களை அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறினர்.

பாதி நகரமே காலியானது .

நோயை கட்டுப்படுத்த அரசு W.C. ராண்ட் தலைமையில் பிளேக் கமிசனை அமைத்தது .

இவர்கள் வீடு வீடாகச் சென்று பிளேக் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்ததோடு ,வீட்டிலுள்ள சாமான்களுக்கு மருந்து போட்டு சுத்தம் செய்தனர் .

அனாதையாக கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப் படுத்தி எரித்ததோடு பிளேக் நோய்க்கு காரணமான எலிகளையும் கொன்றனர்.

இவர்களின் முயற்சியால் நோய் கட்டுப்படுத்தப் பட்டது.

உலகமே இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டிய போது திலகர் தன் பார்ப்பன புத்தியை காட்டினார்.

மாமிசம் சாப்பிடும் மிலேசர்கள் அக்கரகாரத்துக்குள் நுழைந்ததோடு பிராமணர்களை தீண்டி விட்டார்கள், பிள்ளையாரின் வாகனமான எலிகளைக் கொல்லு கிறார்கள்... இது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகும் என கண்டித்து ஊர்வலம் போனார்.

பிளேக் கமிசனர் W.C ராண்ட் க்கு எதிராக கேசரியில் எழுதினார்....

திலகரால் உந்தப்பட்ட பார்ப்பன சாபேகர் சகோ தரர்கள் ஜூன் 22 1897 அன்று W.C ராண்ட் மற்றும் அவரது உதவியாளர் லெப்டினென்ட் அயஸ்டரை சுட்டுக் கொன்றனர்.

இதனால் பிளேக் நோய் பரப்பிய எலிகளுக்கு ஆதரவாய் போராடிய திலகருக்கு 18 மாதம் சிறை தண்டனை கிடைத்தது .

திலகருக்கு சிறையில் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்கிற வேலை கொடுக்கப்பட்டது .

மாக்ஸ் முல்லரின் மூலம் பிரிட்டிஸ் ராணிக்கு மனு கொடுத்து 6 மாதத்துக்கு முன்பே விடுதலையானார்.

3. 24.8.1903 பாபா மகராஜ் உயில் மோசடி வழக்கு

கோலாப்பூரில் இருந்த சர்.பாபா மகராஜ் என்ற பெரும் செல்வந்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் 7.8.1897 அன்று தன் திரண்ட சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயில் எழுதி வைத்தார்,

சொத்துக்களை நிர்வகிக்க திலகர் உட்பட அய்ந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார்.

உயிலின் படி கர்ப்பிணியான தன் மனைவிக்கு பிள்ளை பிறக்காமல் போனாலோ அல்லது பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் இறந்தாலோ தன் வம்சம் செழிக்க, அய்ந்து பேர் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பிள்ளை மேஜர் ஆகும் வரை இந்த சொத்துக்களை இந்த அய்வரே பரிபாலித்து வரவேண்டும்  என எழுதி வைத்து இறந்தார்.

பாபா மகராஜின் மனைவிக்கு பிள்ளை பிறந்து அது இரண்டு மாதத்தில் இறந்து விட்டது!

வளர்ப்பு மகன் விசயத்தில் திலகரும், வேறு இரண்டு டிரஸ்டிகளும் சேர்ந்து தன்னை மோசடி செய்வதாகவும், துன்புறுத்துவதாகவும் பாபா மகராஜின் மனைவி ஜூலை 2.9.1901 அன்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.

24.8.1903 அன்று இந்த வழக்கில் கள்ளக் கையெழுத்து, பொய் சாட்சி முதலிய குற்றங்கள் செய்ததற்காக திலக ருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

4. முஸ்லிம்களுக்கு எதிராக மதத் துவேச பிரச்சாரம் செய்ததால் 6 ஆண்டு சிறை

இந்த வழக்கின் பின்னணி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

1911 க்கு முன்பு வரை கல்கத்தா தான் தலைநகராக இருந்தது.

மெக்காலே கல்வி திட்டம் வந்தவுடனேயே வங்க பார்ப்பனர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அவர்கள் கல்வி கற்று அரசின் உயர் பதவியில் அமர்ந்தனர்.

1858 புரட்சிக்குப் பின்பு ஆங்கிலேய அரசும் முஸ்லிம் களுக்கு எதிராக இருந்ததால் அவர்களுக்கு ஆங்கில கல்வி மறுக்கப்பட்ட காலம்.

வங்காள பார்ப்பனர்கள் தான் இந்து தேசியத்தை உருவாக்கியவர்கள். இவர்கள்

Indian mirror,
The national guardian,
Young Bengal,
Tribune, 
Hindu patriat...


போன்ற இதழ்களை நடத்தி வந்தார்கள் .

1870 இல் அரசு பணிகளில் முஸ்லிம்களையும் சேர்க்க பிரிட்டிசார் முன்வந்தபோது வங்காள பார்ப்பனர்கள் நடத்தி வந்த இந்து பேட்ரியாட்  பத்திரிகை ஆகஸ்ட், 2, 1870இல் வெளியிட்ட இதழில் ,அரசின் முடிவை எதிர்த்ததோடு,  முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான கலகக் காரர்கள்  என்பதையும் ஞாபகப்படுத்தியது....

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த வங்காளத் தில் அரசு துறை பணிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முஸ்லிம்கள் இருந்தனர்.

1905இல் கர்சன் பிரபு வங்காளம், பீகார், ஒரிசா உள்ள டங்கிய வங்காளத்தை இரண்டு மாகாணங்களாக பிரித்தார்.

அதுவரை அரசு பணிகளை ஏகபோகமாக அனுப வித்து வந்த வங்காள பார்ப்பனர்கள், இந்த பிரிவினையால் தங்கள் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பிரிவினையை ரத்து செய்யக் கோரி கல்கத்தா உள்ளிட்ட வங்க பகுதியில் கலவரம் செய்து வந்தனர் .

பிளேக் எலிக்கு ஆதரவாக போராடி சிறை சென்ற திலகர் வெளிவந்தவுடன் வங்காளப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தார்.

இந்த பிரச்சினையில் அரசு முஸ்லிம் குண்டர்களை ஏவி இந்துக்களின் சொத்துக்களை சேதப்படுத்தி பெண்களை மானபங்கப் படுதுவதாக

முஸ்லிம்களுக்கு எதிராக மதத் துவேச கருத்துக்களை தொடர்ந்து தனது கேசரி பத்திரிக்கையில் எழுதி வந்த தால் இவர் மீது இரு மதங்களுக்கிடையே துவேசத்தை வளர்ப்பதாக வழக்கு தாக்கலானது.

இந்த வழக்கில் ஜூன் 24 1908 அன்று கைது செய்யப் பட்டார்,

இதில் திலகருக்கு 6 ஆண்டு தண்டனை விதிக்கப் பட்டது.

தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட இப்படிப்பட்ட ஒரு ஜாதி, மத வெறியரை தேச பக்தராக சித்தரித்துள்ளனர்.

பார்ப்பன ஜாதி மத வெறியர்களை தேச பக்தர்களாக சித்தரிக்கும் பார்ப்பனப் புரட்டு வரலாற்றை மாற்றியமைப்போம். ஆதாரங்கள்:

1. http://ambedkar.org/jamanadas/TilakGandhi.htm
2. https://en.wikipedia.org/wiki/Shivaji -IV
3. https://en.wikipedia.org/wiki/Kesari (newspaper)
4. https://www.mapsofindia.com/on-this-day/july-3-1908-bal-gangadhar-tilak-is-arrested-for-sedition-by-the-british
5. https://en.wikipedia.org/wiki/Chapekar brothers
6. http://bombayhighcourt.nic.in/libweb/historical cases/cases/First Tilak Trial - 1897.html
7. http://www.newworldencyclopedia.org/entry/Bal Gangadhar Tilak
8. http://www.bombay-book.htmlplanet.com/cus tom2.html
9. https://indiankanoon.org/doc/1765978/
10.https://indiankanoon.org/doc/1765978/
11.https://en.wikipedia.org/wiki/Bal Gangadhar Tilak
12.https://indiankanoon.org/doc/265118/
13.https://books.google.co.in/books? id=905gbgzGN1EC&pg= PA117&lpg=PA117&dq=bal+ gangadhar+tilak+kolhapur+case&source=bl&ots= i0AxYblMoa&sig=OjhsQmiKiRpyzmp3q0PrE8VOw RI&hl= en&sa=X&ei= MWI1UpeBC4OErAeJz4DACg#v= onepage&q=bal%20gangadhar%20tilak%20kolhapur%20case&f=false
14. http://bombayhighcourt.nic.in/libweb/judgment/Tilakcases/BalGangadharTilak.html


15. https://indiankanoon.org/doc/1430706/


16.  நூல்: லோக மான்ய பால கங்காதர திலகர்.     ஆசிரியர்: சிறீ.எம்.எஸ்.சுப்ரமணிய அய்யர். அல்லயன்ஸ் கம்பெனி, மைலாப்பூர் - 1938 திலகர் பிறந்த நாள் (23.7.2018) முன்னிட்டு மீள்பதிவு.

முகநூலிலிருந்து: Mohamed Bashith

- விடுதலை நாளேடு 28.7.18

வியாழன், 12 ஜூலை, 2018

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்....

13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒரு துலாபாரம் நடந்தது. திருச்சிக்குப் பக்கத்தில் சிறீரங்கத்திற்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறதில்லையா அங்கேதான் நடந்தது. அங்கே துலாபாரம் கொடுத்தவர் யார் தெரியும்களா?

சுந்தர பாண்டியன். சுந்தரபாண்டியனை நம்முடைய ஆள்களுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால் தெரியும். ஏனென்றால் நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரியும்.

அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துக்கொண்டு போனான். இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான். என்று வரலாறு சொல்லுது.

ஒரு அய்யர் மன்னனிடம் "நீ பல போர்களை செய்திருக்கிறாய். பல உயிர்களைக் கொன்றிருக்கிறாய். அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய வேண்டும்" என்றார்.

சரி, துலாபாரம் செய்யலாம். எங்கே செய்யலாம்? சிறீரங்கத்தில் போய் பெருமாளுக்கு செய்வோம் என்று சொன்னார்கள். சரி என்று வந்தான்.
கோயிலில் தராசு கட்டினார்கள். பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் அணிந்து கொண்டு வந்தான். மகாராஜா அல்லவா?

சக்ரவர்த்தி அல்லவா? வந்து தராசில் உட்காரப் போனான். அப்பொழுது ஒரு பட்டர் கேட்டார், எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்கள்? என்று.

அவன் வெள்ளரிக்காய் தருகிறேன், கத்தரிக்காய் தருகிறேன் என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள். வாழைப்பழம் தருகிறேன். முருங்கைக்காய் தருகிறேன். என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.

ஆனால், அவன் சுந்தரபாண்டியன் சொன்னான், "நான் எடைக்கு எடை பணம் தரப் போகிறேன், வைரம் தரப் போகிறேன்" என்றான்.

உடனே பார்ப்பன மூளை வேலை செய்தது.
அவர்கள் என்ன செய்தார்கள்? ஓகோ, எடைக்கு எடை கொடுக்கப்போனால் தங்கம்- வைரம் எல்லாம் கொடுக்கப் போகிறான். அதுவும் நம்மவர்களுக்குத்தான் தரப் போகின்றான். அவன் வெறும் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது.

நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்? போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான் என்று சொன்னான்.

ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்கள். ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள் என்று சொன்னார்கள்.

போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இவைகளை எல்லாம் கட்டிக்கொண்டு செல்வான்.

இதுவே ஒரு 50 கிலோ சேர்ந்து போகும். அப்பொழுது இருந்த சுந்தரபாண்டியன் எல்லாம் என்னை மாதிரி இல்லிங்க. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் வரும். இன்னும் 50 கிலோ தங்கம் வருமல்லவா?

போரிலே செய்கின்ற படுகொலைப் பாவங்களைப் போக்கத்தானே வந்திருக்கிறீர்கள்? அதனால் போருக்கு போகிற மாதிரியே உட் காருங்கள் என்று சொன்னார்கள். சுந்தரபாண்டியன் பார்த்தான் பயந்துவிட்டான். பகைவரைக் கண்டு நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த பட்டரைக் கண்டு நடுங்குகின்றான். உடனே தளபதியை மன்னன் அழைத்தான். உடைவாள், கவசம் எல்லாம் வந்தது. போய் தராசில் உட்காரப் போறான்.

இன்னொரு பட்டர் சொல்றான்...

இவன் என்னான்னான். கொஞ்சம் நில்லு! நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்? நான் தரப்போகிறேன். போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன் என்று சொன்னார்.

சரி, நல்லா பண்ணுங்கோ... திவ்யமா பண்ணுங்கோ... ஆனால் ஒன்று, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள் என்று கேட்டான். சின்னக் குழந்தைகள் எல்லாம் சிரிக்கிறது. சுந்தரபாண்டியன் சிரிக்கவில்லை.

போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?

யானையினுடைய ஒவ்வொரு தந்தமும் 25 கிலோ எடை கொண்டது. பட்டத்து யானையோ ஆயிரம் கிலோ. யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும்.

யானையோடு மட்டுமல்ல, யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரி-அது ஒரு 100 கிலோ.இவ்வளவோடும் நீ வந்து உட்கார்ந்து செய்தால் தான் உன்பாவம் போகும் என்று சொல்லிவிட்டான்.

பக்கத்திலே இருந்த அய்யர், ஆமாம் மகாராஜா. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள் என்று சொன்னார்.

இன்னொருத்தன், இவன் எப்படி துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம். யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு இவன் எப்படித் துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம் என்று சொன்னார்.

மன்னனும் அப்படியே கொடுப்பது என்று சொல்லிவிட்டான். தராசா இல்லை? நான் கண்டு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எல்லோரும் அம்மாமண்டபத்திற்கு வந்தார்கள். அந்த மண்டபத்தில் இப்பொழுது சீட்டாடுகிறார்கள். அப்பொழுது இல்லை.

அம்மாமண்டபத்திற்குப் போனார்கள். அப்பொழுதெல்லாம் காவிரியில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரண்டு பரிசலைப் பெரிதாகச் செய்தார்கள். யானை ஏறி நிற்கிற மாதிரி ஒரு பரிசல்.

இன்னொன்று அதே அளவுக்குப் பரிசல். இரண்டையும் கயிற்றிலே கட்டி காவிரி ஆற்றிலே மிதக்கவிட்டார்கள்.

தண்ணீரில் யானையைப் பரிசலில் நிற்க வைத்து, அதற்குச் சமமாக இன்னொரு பரிசலில் தங்கத்தை, வைடூரியத்தை கொட்டு என்று சொன்னார்கள். அப்படி எல்லாவற்றையும் கொட்டினார்கள். சுந்தரபாண்டியன் மலை அளவு செல்வத்தை அவன் வாரி வழங்கினான்.

எல்லாமே பார்ப்பானுக்குப் போய்விட்டது. ஆக துலாபாரத்தை சுந்தரபாண்டியன் கொடுத்து விட்டான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியனை பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

கோயில் வாசலிலே சுந்தரபாண்டியன் நிற்கிறான். அப்பொழுது அந்த தலைமை பட்டரைப் பார்த்து கேட்கிறான். எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்று மன்னன் சொன்னான் சுந்தரபாண்டியன்.

யார்? மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன். அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மன்னர்கள். கைகட்டி காத்திருக்கின்றார்கள்.

அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி பட்டரிடம் சாமி, எனக்கு ஒரு கோரிக்கை என்று கேட்டான். இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டான்.

உடனே அந்த பட்டர் சொன்னார், இல்லை, இல்லை. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை என்று சொன்னார். மறுத்துவிட்டான்.

சுந்தரபாண்டியன் நினைத்திருந்தால் இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமாக்கி யிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில் கோவில் இருக்கிறது. இந்த பட்டரெல்லாம் அவன் போடுகின்ற பிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்தப் பெருமாளே அவன் போடுகின்ற பிச்சையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை.

ஆனால் அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தானல்லவா? ஒரு ஓரத்தில் அவனுடைய சிலையை வைப்பதில் என்ன குறைந்து போய்விட்டது?

கடைசி வரைக்கும் வைக்கவில்லை.

அதன் பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணினார்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு ஒரு பூஜை பண்ணுகிறோம், அர்ச்சனை பண்ணுகிறோம் என்று பட்டர்கள் சுந்தரபாண்டியனுக்காகச் சொன்னார்கள். அந்த அர்ச்சனை இன்றைக்கும் நடக்கிறது. தட்டுல 5பைசா போட்டாலே இந்த அய்யர் அர்ச்சனை பண்ணுவான். மலைபோல் இந்த செல்வத்தைக் கொடுத்துவிட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்றான்.

நான் சொல்லுவதெல்லாம் கதை அல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம். அப்பிடியாவது உங்களுக்கு புத்தி வரட்டும் மக்களே..
- கட்செவி பதிவு

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...