புதன், 28 ஜூலை, 2021

கொற்கை அகழாய்வுப் பணி சங்கு வளையல்கள், மோதிரங்கள் கண்டெடுப்பு

 

தூத்துக்குடி, ஜூலை 28 கொற்கை பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழிற் கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தூத்துக்குடி மாவட் டம் சிறீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்ச நல்லூர் மற்றும் ஏரல் அருகே உள்ள சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழ் நாடு அரசு சார்பில் அக ழாய்வுப் பணிகள் தொடங் கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஏரல் அருகே உள்ள கொற்கையிலும் அகழாய்வுப் பணிகள் நடத்தப்படுகின்றன.

கரோனா பரவல் அதி கரித்ததின் காரணமாக ஆதிச்சநல்லூர், சிவ களை, கொற்கை ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் முதல் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்று பரவல் படிப்படி யாக குறைந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அங்கு தொல்லியல் துறை யினர் பல்வேறு இடங் களிலும் பள்ளங்களை தோண்டி, அகழாய்வுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆதிச்சநல்லூர், சிவ களையில் இரு கட்டங் களாக நடைபெற்ற அக ழாய்வில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. கொற்கையில் பழங்கால செங்கல் கட்டுமான அமைப்புகள், சங்கால் செய்யப்பட்ட வளையல் கள், மோதிரங்கள் உள் ளிட்ட ஏராளமான பழங் காலப் பொருட்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

கொற்கை மற்றும் மாரமங்கலம் பகுதிகளில் 17 குழிகள் அமைக்கப் பட்டு அகழாய்வுப் பணி கள் நடைபெறுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட சங்கு வளையல்கள் மிகவும் அருமையாக வடி வமைக்கப் பட்டுள்ளன. கொற்கையில் சங்காலான 2 மோதிரங்களும், மார மங்கலத்தில் 4 மோதிரங் களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 

மேலும் சுடுமண் மணிகள், பச்சை, ஊதா, மஞ்சள் நிற கண்ணாடி மணிகள், கருப்பு நிற கண்ணாடி வளையல்கள் ஆகியவை கண்டறியப் பட்டுள்ளன. 

இதன் அடிப்படை யில் இந்த பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழிற் கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

1400 ஆண்டுகளுக்கு முந்தைய சிலை கண்டெடுப்பு

 

உத்திரமேரூர்ஜூலை 24- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் பல்லவர் காலத்தை சார்ந்த 1400 ஆண்டு களுக்கு முற்பட்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவான லகுலீச பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின் சிலை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய் யத்தினரால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து  கோழியாளம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது இச்சிலையை கண்டறிந்தனர்.

இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறிய தாவது:  தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட லகுலீசர்  உருவங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட் டுள்ளனஇம்மாவட்டத்திலும் இதுதான் முதல் சிலை எனவே இதை அரிதாகவே நினைக்க வேண்டியுள்ளதுநாங்கள் கண்டறிந்த இந்த சிலையானது 95 சென்டிமீட்டர் உயரமும் 65 சென்டிமீட்டர் அகலமும் கொண்டு ஆடையின்றி சம்மணமிட்டு  அமர்ந்த நிலையில் காணப் படுகிறதுஇதன் தலையில் ஜடா பாரமும் இரு காதுகளில் அழகிய குண்டலங்கள் கழுத்தில் ஒட்டிய  அணிகலனாக சவடியும் வலக்கையில் தண்டும்இடக்கையை தொடை மீது வைத்த நிலையில் தொப்புளின் கீழ் ஆண்குறி அருகே மலர் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறதுஇடது தோள்பட்டை  மேலே படம் எடுத்த நிலையில் நாகத்தின் சிற்பம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 22 ஜூலை, 2021

கீழடியில் மேலும் ஓர் உறை கிணறு கண்டுபிடிப்பு

 

திருப்புவனம்ஜூலை 17- தமிழ் ஆட்சிமொழிதமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையின் கீழ் சுற்றுலாகலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன் மைச்செயலாளர் பி.சந்திர மோகன் வழிகாட்டுதலில்மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் பேரா சிரியர் கே.ராஜன் மற்றும் கீழடி அகழாய்வு இயக்குநர் ஆர்.சிவா னந்தம் ஆகியோர் மேற்பார்வை யில் சிவகங்கை மாவட்டம் கீழடிதூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூர்சிவகளைகொற்கைஈரோடு மாவட்டம் கொடுமலைஅரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலா டும்பாறை ஆகிய 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வரு கிறது.

சிவங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வரு கிறதுஇதில் பண்டைய மக்கள் விளையாடுவதற்காக பயன்படுத் தப்பட்ட உபகரணங்கள்ஓடுக ளால் செய்யப்பட்ட அணி கலன்கள்மண் பாத்திரங்கள்நெசவாளர் கருவிகள்கையால் தயாரிக்கப்பட்ட ஓடுகள் உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளனஇதன்மூலம் பண்டைய தமிழர்களின் நாகரி கத்தை தொல்லியல் துறை வெளிக்கொணர்ந்து வருகிறது.

கீழடி 7ஆம் கட்ட அகழாய் வில் சில தினங்களுக்கு முன்பு 3 அடுக்குகளை கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டதுஉறை கிணற்றின் வெளிப்புறத்தில் கயிறு வடிவில் 2 டிசைன்கள் வடிவமைக்கப்பட்டிருந்தனஇந்தநிலையில் மேலும் ஒரு உறை கிணறு கீழடியில்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுஇந்த உறை கிணற்றிலும் அலங்காரம் செய் யப்பட்டிருந்ததுகிழக்கில் இருந்து மேற்காக 58 செ.மீநீளமும்அதன் பெரும்பான்மை யான பகுதி தெற்கு பகுதியின் உள்ளே செல்லும் வகையிலும் இருக்கிறது.

தெற்கு பகுதியில் செங்குத்தாக இது 18 செ.மீநீளமும் உள்ளதுஅலங்காரம் செய்யப்பட்ட விளிம்பின் தடிமன் 3 செ.மீஆகும்அகழாய்வுக்காக தோண் டப்பட்ட குழியின் தென்கிழக்கு மூலையில் இந்த உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅந்த குழியின் பிற பகுதிகளில் மண்ணில் செய்யப்பட்ட பொருட்களோகலைப்பொருட் களோ எதுவும் கண்டுபிடிக்கப் படாத நிலையில்நதியின் வண் டல் மண் படிவுகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் மயிலாடும்பாறை பகுதியில் பழங்கால இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு

 

கிருஷ்ணகிரி,ஜூலை 20- மயிலாடும் பாறை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரும்பு வாள் மற்றும் மண் பானைகளைக் கண் டறிந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கீழடிகொந்தகைஅகரம்கங்கை கொண்ட சோழ புரம்கொற்கைமயிலாடும்பாறைசிவகளைஆதிச்சநல்லூர்கொடு மணல்மணலூர் ஆகிய 10 இடங் களில் தற்போது அகழாய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படிகிருஷ்ணகிரி மாவட் டம்தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில்தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப் பட்டதுதொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமை யில்மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல்தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந் தாமன்வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவமாணவிகள் இதில் பங்கேற்றுள் ளனர்.

இந்த அகழாய்வில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்திட்டையில் 70 செ.மீநீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றைக் கண்டறிந்தனர்.

இது தொடர்பாகஅகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:

"பர்கூர் வட்டம் மயிலாடும்பாறை யில்சானரப்பன் மலையில் மனி தர்கள் வாழ்ந்ததற்கான அடையா ளங்கள் உள்ளனமலையின் கீழ், 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றனஇங்கு முன்னோர்கள் எந்த மாதிரி யான வாழ்வியல் முறைகளை மேற் கொண்டனர்உலக அளவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களில் இவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.

கடந்த 1980 மற்றும் 2003இல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில்இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த இடம் என்று வரலாற்று ஆய்வா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு கடந்த 3 மாதங்களில் ஆய்வு மேற்கொண்டதில்மனித எலும்புகள் எதுவும் நேரடியாக நமக்குக் கிடைக்கவில்லைதொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனதற்போது இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீநீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஇதில்தற்போது 40 செ.மீவாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளதுவாளின் கைப் பிடி பகுதி இன்னும் எடுக்கப்பட வில்லைஇந்த வாளை ஒரு மண் திட்டை அமைத்து அதன்மேல் வைத்துள்ளனர்.

ஆனால்நாளடைவில் மண் ணின் அழுத்தம் காரணமாகபடிப் படியாக வாள் மேடும் பள்ளமுமாக மாறியுள்ளதுஇந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறதுஇந்த வாள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதுமுடிவுகள் வந்தபிறகுதான் இந்த வாளின் சரியான காலத்தைக் கணிக்க முடியும்".

இவ்வாறு சக்திவேல் கூறினார்.

இந்நிலையில்இந்த அகழாய்வில் தற்போது 4 மண் பானைகளைக் கண்டறிந்துள்ளனர்இது தொடர் பாகஆய்வு செய்து வருவதாகத் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சுட்டுரை மற்றும் முகநூல் பக்கத்தில் வாள் படத்தைப் பதிவிட்டு 'ஒடிந்த வாளா னாலும் ஒரு வாள் கொடுங்கள்என, 1948ஆம் ஆண்டு வெளிவந்த அபி மன்யு திரைப்படத்தில் மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞரின் கைவண்ணத்தில் உருவான வைர வரி எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தனது வலைதளப் பக்கத்தில் மண் பானை (தாழிபடத் துடன், 'கலம் செய் கோவேகலம் செய் கோவேநனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!' - புறநானூறு எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...