திங்கள், 23 ஆகஸ்ட், 2021

900 ஆண்டு பழைமையான கல்செக்கு கண்டெடுப்பு


பெரம்பலூர், ஆக. 22-  பெரம்பலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் சுமார் 900 ஆண்டு பழை மையான கல்லால் ஆன எண்ணெய் பிழியும் செக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் முனைவர் ம.செல்வபாண் டியன், சூழலியல் செயல் பாட்டாளர் ரமேஷ் கருப் பையா, சமூக ஆர்வலர் பா.வசந்தன் ஆகியோர் வெங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயி லில் பகுதியில் நேற்று (21.8.2021) ஆய்வு மேற் கொண்டனர். அப்போது செல்லியம்மன் கோயி லின் முன்புறம் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கல் செக்கை கண்டறிந்தனர்.

இதன் உயரம் 33 செ.மீ. வெளிவிட்டம் 71செ.மீ. உள் விட்டம் 64 செ.மீ. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். செக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு வரிக ளில்,  “மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் லம்பலம்“ எனும் எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ம.செல்வ பாண்டியன் தெரிவித்த தாவது: கல்செக்கில் காணப்படும் எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 11ஆம் நூற்றாண் டைச் சேர்ந்ததாக கருத லாம். பழங்காலத்தில் உணவுப் பொருள்களை அரைக்கவும், கோயில், வீடுகள், தெருக்கள் ஆகிய வற்றில் விளக்கு எரிக்க எண்ணெய் வித்துக்களிலி ருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்கவும் செக்கு கள் பயன்பட்டன.

இதற்கென அரசர்கள், படைத்தலைவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் கோயில் வழிபாட்டுக்கும், பொதுப் பயன்பாட்டுக் கும் கல்செக்குகளைச் செய்து தானமாக வழங்கி னர். பெரம்பலூர் மாவட் டத்தில் செஞ்சேரி, சத்திர மனை வேலூர் ஆகிய கிராமங்களில் இத்தகைய கல்செக்குகள் ஏற்கெ னவே கண்டறியப்பட்டுள்ளன. இதில் வெங்கலம் கிராமத் தில் உள்ள இந்த கல் செக்கு 11ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த மிகவும் பழைமையானதாகும்.

மல்லடி நாட்டான் என் பவர் இந்த கல்செக்கை செய்து கொடுத்திருக்கி றார். இவர் யாரென அறிய முடியவில்லை. பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும். இது தற் போதைய செல்லியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியாக இருக்கலாம். வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றைப் பறைசாற் றும் இந்த அரிய வரலாற்று சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நகர நாகரீகத்தின் முக்கியக் குறியீடு: பொற்பனைக் கோட்டையில் சங்க கால செங்கல் கட்டுமான கால்வாய் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது


புதுக்கோட்டை, ஆக.14  தமிழ னின் தொன்மையான வர லாற்றை பறை சாற்றும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் சங்ககாலத்து கட்டுமானம் கிடைத் துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே மகிழ்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டிலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையான பொற் பனைக் கோட்டையில் பல்வேறு தொல்லியல் தட யங்கள் கிடைத்து வந்தன.2005 ஆம்  ஆண்டு குடவாயில் பாலசுப்பிர மணியம் மேற்கொண்ட மேற் பரப்பு ஆய்வின் மூலமாக சங்ககால செங்கல் மற்றும் பானை ஓடுகள் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தினார்.அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர்  சு. ராஜவேலு மற்றும் தமிழ் பல்கலைக்கழக அந்நாளைய மாணவர்கள் தங்கதுரை, பாண்டியன் ஆகி யோரால் கி.பி இரண் டாம் நூற் றாண்டை சேர்ந்த தமிழிக் கல் வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின்ஆ.மணி கண்டன், கரு.ராசேந்திரன்  உள் ளிட்ட குழுவினர் பொற்பனைக் கோட்டை பகுதியில் தொடர்ச்சி யாக மேலாய்வு செய்ததைத் தொடர்ந்து இரும்பு உருக்கு தொழிற்சாலை, இரும்பு உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள், உருக்குக் கலன்கள் உள்ளிட் டவை அடையாளம் காணப் பட்டன.இதனைத் தொடர்ந்து கோட்டையின் மேற்பரப்பில் இருக்கும் கட்டுமானங்களில் கொத் தளங்கள் உள்ளிட்டவை இருப்பதை யும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  ஆய்வுக் கழகத்தினர் கண்டுபிடித்த நிலையில்,   அகழ்வாய்வு தொடங்கிய பிறகு  சுடுமண் கூரை ஓடுகள், மணிகள், இரும்புக்கருவிகள் இருப்பதை கண்டறிந்து அகழ் வாய்வு இயக்குநர் பேரா. இனியனிடம் புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினரால் ஒப்ப டைக்கப்பட்டது.

இந்நிலையில் பொற்பனைக் கோட்டை அகழ்வாய்வு கடந்த 13 நாட்களாக தமிழ்நாடு பல் கலைக்கழக பேராசிரியர் இனியன் தலைமையிலான அகழ்வாய்வு குழுவினர் மூலம் நடந்தது. இதில் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட செங்கல் கட்டு மான நீர்த்தட கால்வாய் அமைப்பு அகழ்வாய்வு குழியில் வெளிப் பட்டு இருப்பது வெளிக்கொணரப் பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இது வரை நடந் துள்ள அகழ்வாய்வு களில் வாழ்விடம் சார்ந்த ஒரே கட்டுமானமாக பொற் பனைக் கோட்டை இருப்பதை இந்த கட்டுமான அமைப்பு உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி நகர நாகரிகத்திற்கான முக்கிய குறியீடாக தொல்லியல் துறை யினரால் பார்க்கப்படும் கால் வாய் அமைப்பு கிடைத்திருப்பது, பொற் பனைக் கோட்டையின் மீது சிறப்பு கவனத்தை திருப்பி யுள்ளது.

கீழடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் மட்டுமே இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்டிருக் கும் நிலையில் கோட்டை மற்றும் அதுசார்ந்த வாழ்விடம் குறித்த எவ்வித ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக தஞ்சாவூர் வல்லம் பகுதியில் இருந்த சங்க காலக் கோட்டை முழுவதுமாக சிதைந்து விட்ட நிலையில் சங்ககால பாடல்களில் கூறப் பட்ட அனைத்து அவயங்களும் கொண்ட ஒரே கோட்டையாக பொற்பனைக்கோட்டை இருப்பது இந்த அகழ்வாய்வின் முதல் கட்டத்திலேயே வெளிப் பட்டிருக்கிறது.தற்போது அகழ் வாய்வு செய்யப்படும் இடத் திற்கு மேற்குப் புறத்தில் அமைந் திருக்கும் அரண்மனை மேட்டுப் பகுதியில் மிகமுக்கியமான கட்டுமானங்கள் இருக்கும் வாய்ப்புள்ளது.

தமிழர்களின் நிர்வாக அமைப்பைவெளிப் படுத்தும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் இருந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தும் ஒரு இடமாக பொற்பனைக் கோட்டை அமைந்துள்ளது.தொடர் ஆய்வுகள் மூலம்முக்கிய கட்டு மானங்கள் பழங்கால பொருட்கள் ஆயுதங்கள் இன் னும் பிற முக்கிய தொல் பொருட்கள் கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது

கொந்தகை அகழாய்வு: முதுமக்கள் தாழிக்குள் இரு சிறிய பானைகள்


திருப்புவனம்,ஆக.16- சிவகங்கை மாவட் டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடி, கொந்தகை, அகரத்தில் மண் பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவுத் தொழிலில் பயன்படும் தக்கிளி, கற்கோடரி, சிறிய செப்பு மோதிரம் உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கொந்தகையில் ஒரு முதுமக்கள் தாழியில் இறுதிச் சடங்குக்கு பயன்படுத்திய கூம்பு வடிவ பானை, சாதாரண பானை என 2 பானைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த முதுமக்கள் தாழியின் அடியில் மனிதஎலும்புகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதுவரை கொந்தகையில் 25 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு 13 தாழிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளிக் காசு

 

சென்னை,ஜூலை 31- திருப் புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளதுஇங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வரு கிறதுஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு  ஒன்றிய  தொல்லியல் துறை மூலமாக வும்நான்குஅய்ந்துஆறாம் கட்ட அகழாய்வு தமிழ்நாடு தொல்லியல் துறை மூலமும் நடந்தன.

தற்போது 7ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 6ஆம் கட்ட அகழாய்வு மூலம் 14,535 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன.

இந்த அகழாய்வு மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வந்ததுஇந்நிலை யில்கீழடியில் வெள்ளிக் காசு ஒன்றும் கண்டறியப்பட்டுள் ளது.

இது தொடர்பாகதமிழ் ஆட்சி மொழிதமிழ்க் கலாச் சாரம்தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 29.7.2021 அன்று தன் முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாவது:

"கீழடியின் கொடை குறைவதில்லை!

கீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது.

'கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள் ளுவோம்எனப் பாடிய பாரதியின் வணிகக் கனவினைப் பொது யுகத்துக்கு முன்னூற்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் னரே நனவாக்கிக் காட்டிய கீழடித் தமிழ்ச் சமூகத்தின் வணிகத் தொடர்புகளுக்கான ஆதாரம் அது.

வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coinஒன்று சில நாட்களுக்கு முன் கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளதுஇதன் வழியே இதன் காலம் மவுரியர்களின் காலத்துக்குச் சற்று முன்னதாக பொ.யு.முநான்காம் நூற்றாண்டின் நடுவிலானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.

முன்புறம் சூரிய சந்திரர்கள்காளைஎருதுநாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரை வட்டம் மற்றும் 'வடிவக் குறியீடுகளும் காணப்படு கின்றன.

2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசுவட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்று மொரு சான்று".

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித் துள்ளார்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கூரை ஓடுகள் கண்டுபிடிப்பு

 

புதுக்கோட்டைஆக. 2- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானத்தின் மேற்கூரைக்கு பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொற்பனைக் கோட்டையில்தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் கடந்த 3 நாட்களாக அக ழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்அகழாய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களில் மண்ணிலிருந்து பழங்கால பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டு வருகின்றன.

தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் .மணிகண்டன்தொல்லியல் ஆர்வலர்கள் ஆனந்தன்இளங்கோ.மணிகண்டன் உள்ளிட்டோர் பொற்பனைக்கோட்டை மேற்கு சுவரின் மீது 1.8.2021 அன்று மேலாய்வு பணியில் ஈடுபட்டனர்அப்போதுகட்டுமானத்தின் மேற்கூரைக்காக பயன்படுத்தப் பட்ட உடைந்த நிலையிலான ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து .மணிகண்டன் கூறியதுகோட்டையின் மதில் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் தங்குவதற்காக 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை யான ஓடுகளால் வேயப்பட்ட அரண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேற்கூரையின் மீது ஓடுகளை அடுத்தடுத்து பொருத்து வதற்கு ஏற்ப ஒவ்வொரு ஓட்டிலும் காடிகள் அமைக்கப் பட்டுள்ளனசங்க காலத்திலேயே இவ்வாறு நேர்த்தியாக வடிவமைத்து இருப்பது வியக்கும் வகையில் உள்ளது.

மேலும்சில ஓடுகள் துளையிடப்பட்டு உள்ளதால்இப்பகுதியில் இருந்த உருக்கு ஆலையில் இருந்து கம்பிகள் தயாரித்து துளையில் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறதுஇதுபோன்ற ஓடுகள் இந்த மாவட்டத்தில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லைஇது மாதிரியான ஓடுகள் இங்கு ஏராளமாக புதைந்துள்ளன. 3 அடி ஆழத்துக்கு அகழாய்வு செய்த பிறகே கட்டுமானங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்றார்.

இந்நிலையில்அகழாய்வு பணியை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சென்று பார்வையிட்டார்.

அண்ணா பல்கலைதுணைவேந்தர் பதவிக்கு 160 பேர் விண்ணப்பம்

சென்னைஆக.2 அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, 160 பேர் விண்ணப்பித்து உள்ளனர்அவர்களின் பட்டியலை வெளியிடாமல், 9ஆம் தேதி நேர்காணல் நடத் தப்பட உள்ளது.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைதுணைவேந்தராககருநாடக மாநி லத்தை சேர்ந்தபேராசிரியர் சூரப்பா பதவி வகித்தார்அவரின் பதவிக்காலம்ஏப்ரல் 11இல் முடிந்ததுஇதையடுத்துபுதிய துணைவேந்தரை தேர்வு செய்யவதற்கான அறிவிப்பு வெளியானது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைதுணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில்ஓய்வு பெற்ற அய்..எஸ்., அதிகாரி ஷீலாராணி சுங்கத் மற்றும் சென்னை பல்கலைமுன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் இடம் பெற்ற தேடல் குழு அமைக்கப்பட்டதுஇந்த குழுவின் சார்பில்துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டனமொத்தம், 160 பேர் விண்ணப்பித்துள்ளனர்அவர்களில், 10 பேரை தேர்வு செய்துஆளுநரிடம் அளிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதுஇதற்கான நேர்காணல், 9ஆம் தேதி நடக்க உள்ளது.

அண்ணா பல்கலைக்குஇந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே துணைவேந்தராக தேர்வு செய்யப் பட வேண்டும் என்பதில்தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

- விடுதலை நாளேடு, 2.8.21

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

சிங்கம்புணரி அருகே பழைமையான மண்குடுவை கண்டெடுப்பு

 

ஜெயங்கொண்டம்ஜூலை 26 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கழிப்பறைக்காகத் தோண்டிய குழியில் பழைமையான கருப்புநிற மண்குடுவை கண்டெடுக் கப்பட்டது.

சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்ட நிலை யைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னழகுஇவர் தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்டு வதற்காகக் குழி தோண் டியுள்ளார்அப்போது

அடி ஆழத்தில் பழை மையான மன்னர்கள் காலத்து கருப்பு நிற மண்குடுவை இருந்ததுஇது அரை அடி உயரம் இருந்தது.

இதுகுறித்து பொன் னழகு உறவினர் திருநாவுக்கரசு வருவாய்த் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்அங்கு வந்த வட்டாட்சியர் திருநாவுக் கரசுகிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணம் மண் குடுவையைக் கைப் பற்றி சிங்கம்புணரி வட் டாட்சியர் அலுவலகத் திற்கு எடுத்துச் சென் றனர்.

இதுகுறித்து வட் டாட்சியர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘’பழைமை யான குடுவையாக இருப் பதால் தொல்லியல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளோம்அவர்கள் ஆய்வு செய் தால் மட்டுமே குடுவை யின் காலம் போன்றவை தெரியவரும்‘’ என்றார்.

குடுவை கிடைத்துள்ள பகுதியில் மேலும் தொல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அப் பகுதியை அகழாய்வு நடத்த வேண்டுமெனத் தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாத்தூரில் பழைமையான தொல்லியல் தடயங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தகவல்

 

சென்னைஆக.9 சாத்தூரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல்மேடு கண்டறியப் பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் தொல்லியல் சான்றுகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றனதற்போது சாத்தூர் வைப்பாறு அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொல்லியல் மேடு கண்டறியப்பட் டுள்ளது.

இதுகுறித்துசாத்தூர்  எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான பா.ரவிச்சந்திரன் கூறிய தாவதுசாத்தூர் பகுதியானது பண்டைக்காலம் தொட்டே சாத்தனூர் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது என்பதை முற்காலப் பாண்டிய வேந்தன்மாற வல்லபனின் காலத்தைச் சேர்ந்த கி.பி. 823ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறதுஅக்கல்வெட்டில் இருன்சோ நாட்டுச் சாத்தனூர் என்ற பெயர் காணப்படுவதில் இருந்து இவ்வூரின் தொன்மையை அறிய முடியும்இப்பகுதியில் சங்க காலம் முதல் மக்கள் வாழ்ந்த தடயங்களான தொல்லியல் மேடுகள்முதுமக்கள் தாழிகள்கல்வெட்டுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.

அண்மையில்சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்துக்கு அருகில் வைப்பாற்றுக்கு தெற்கே உயரமானதொல்லியல் மேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதுதொல்லியல் மேட்டின் ஊடாக ரயில்வே பாதை செல்கிறது.

இப்பகுதியில் சிதிலமடைந்த பானை ஓடுகள் இருந்த இடத்தை களஆய்வு செய்தபோது பழங்கால மக்கள் பயன்படுத்திய நுண் கருவிகள்கருப்புசிவப்பு பானை ஓடுகள்குறியீட்டுடன் கூடிய பானை ஓடுகள்குறுகிய துளை யுடைய நீர்க்குடுவை மற்றும் மண்ஜாடி மூடியின் கொண்டைப்பகுதிசங்கு அறுத்து செய்த வளையல்கள்அதற்கு பயன்படுத்திய சங்குகள் மற்றும் வட்ட சில்லுகள்பலவண்ண கடற்பாசிகள்ஒளி ஊடுருவாத கருப்பு நிற கண்ணாடி வளையல்கள்பிற்காலத்திய நாயக்கர் கால செப்புக்காசு ஆகியன கிடைத்துள்ளன.

மேலும் 1.7 மீட்டர் அளவு விட்டமுடைய உறைகிணறு ஒன்றும் அண்மையில் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

புதன், 11 ஆகஸ்ட், 2021

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வளைந்த நிலையில் சங்ககால பழைமையான இரும்புக் கம்பி!

 

சென்னைஆக.5 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை யில் நேற்று (4.8.2021) மேற்கொள்ளப்பட்ட 6-ஆவது நாள் அகழாய் வின்போது இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளது.

சங்ககாலப் பழைமை வாய்ந்ததமிழ்நாட்டில் எஞ்சியுள்ள ஒரே கோட் டையான பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு திறந்தநிலைப் பல் கலைக் கழகத் தொல்லி யல் துறை பேராசிரியர் .இனியன் தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6-ஆவது நாளாக நேற்று (4.8.2021) அகழாய் வுப் பணி நடைபெற்றது.

அப்போது, 10 செ.மீநீளமுள்ளதுருப்பிடித்த நிலையில் இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளதுஅதன் ஒரு பகுதி வளைந்த நிலையில் இருந்தது.

அகழாய்வின்போதுஏராளமான கருப்புசிவப்பு பானை ஓடுகளும்சிறிய அளவிலும்துகள் களாகவும் இரும்பு உருக் குக் கழிவுகள் கிடைத்து வந்த நிலையில்நேற்று (4.8.2021) இரும்புக் கம்பி கிடைத்திருப்பது ஆய் வுக்கு கூடுதல் வலு சேர்க் கும் விதமாக இருப்பதாகத் தொல்லியல் ஆய்வா ளர்கள் தெரிவித்தனர்.

அகழாய்வு நடை பெற்று வரும் இடத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் மு.பூவதிமருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன்இருக்கை மருத் துவ அலுவலர் இந்தி ராணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்

அப்போதுவேப்பங் குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராஜாங்கம்தொல்லியல் ஆய்வுக் கழகப் பொறுப்பாளர் எம்.ராஜாங்கம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்அப்போதுபொற்பனைக் கோட்டையின் சங்ககால வரலாறு குறித்துப் பேரா சிரியர் இனியன் விளக் கினார்.

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...