திங்கள், 20 மார்ச், 2023

10ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு


மதுரை, செப்.20   திருச்சுழி அருகே 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. நீர்நிலைகளை வணிகர்கள் பேணிக் காத்த தகவல், இந்த கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கல்லூரி வரலாற் றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜ பாண்டி ஆகியோர், திருச்சுழி சுற்று வட்டாரத்தில் கள ஆய்வு செய்தனர். மூலக்கரைப்பட்டி என்னும் ஊரில், கண்மாய்க் கரையோரமாக கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

 மூலக்கரைப்பட்டி கிராமத்தில் கண்மாய்க் கரையோரம் 4 அடி உயர மும் ஒன்றரையடி அகலமும் கொண்ட ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தோம். அதன் மேற்புறம் 13 வரிகள், வலதுபுறம் 7 வரிகள் என இருபக்கங்களிலும் எழுத்துகள் தென்பட்டன. இவற்றை ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குநரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்ய செயலாளருமான சாந்தலிங்கத் தின் உதவியோடு படித்துப் பார்த்தோம். கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, இக்கல்வெட்டு கி.பி10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர் காலத்தை சேர்ந்தது என தெரிய வருகிறது.

இக்கல்வெட்டு இருந்த கண்மாய் கரையில், மழை காலங்களில் நீர்வரத்து அதிகரித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, அப்பகுதியைச் சேர்ந்த வணிக ரான பெற்றான் கழியன் என்பவர் சீரமைத்து கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் கரையில் உடைப்பு ஏற்பட் டுள்ளது. 

இதையடுத்து, வணிகரின் மகளான கோதிலால் நங்கை என்பவர், கற்களைக் கொண்டு உடைப்பு ஏற் பட்ட கரையை சீரமைத்து, அதில் இக் கல்வெட்டையும் வைத்துள்ளார் என தெரிய வருகிறது. நீரின் முக்கியத்து வத்தை அறிந்த, இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களும், நீர்நிலைகளை பேணி பாதுகாத் துள்ளனர் என்பதனை இதன் மூலம் அறியலாம். 

இவ்வாறு தெரிவித்தனர்


வியாழன், 9 மார்ச், 2023

மனித உருவத்துடன் பழங்கால செப்பு நாணயம் கண்டுபிடிப்பு

 

சேலம்,அக்.9- மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட மனித உருவம் பொறிக்கப்பட்ட பழங் கால செப்பு நாணயம் கிடைத்திருப்பதாக சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வர லாற்று ஆய்வாளர்கள், நாடு முழுவதும் இருந்து பழங்கால நாணயங்களை சேகரித்து வருகின்றனர்.

சமீபத்தில் கருநாடகா மாநிலத்தில் நடந்த நாணயவியல் கண்காட்சியில் மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களை குஜராத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் காட்சிப்படுத்தியிருந் தனர். அந்த நாணயங்களை சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வர லாற்று ஆய்வாளர் சுல்தான் வாங்கி வந்துள்ளார். வழக்கமாக அக்கால மன் னர்கள் வெளியிட்ட செப்பு நாணயங் களில் காளை, பசு, தேர், கப்பல் போன்ற உருவங்கள் இருந்தன.

ஆனால், இந்த செப்பு நாணயத்தில், மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த செப்பு நாணயம் குறித்து வரலாற்று ஆய்வாளர் சுல்தான் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறோம். இதுவரையில் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற நாண யங்களில் மனித உருவம் தவிர பிற உருவங்களே இருந்துள்ளன.

அதிலும் தமிழ் மொழி பொறிக்கப்பட்ட செப்பு நாணயங்களில், மனித உருவம் கிடைக்கப்பெற்றதில்லை. முதன்முறை யாக இந்த நாணயம் கிடைத்திருக்கிறது. மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்க நாத நாயக்கர் 1731இல் காலமானார். அவருக்கு பிறகு அவரது மனைவி மீனாட்சி 1732முதல் 1756வரை ஆட்சி செய்தார். இந்தவகையில்  மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார்.

‘‘தமிழனின் விஞ்ஞான ஊன்று வேக விசை பயண வண்டி’’ நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயண வண்டியில் மனித உருவம், ஊன்றை பிடித்தபடி இருக்கிறது. இந்த செப்பு நாணயம் மிகவும் அரிதாகும். காரணம், இதுவரையில் வட இந்தியாவிலும், தென் னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான செப்பு நாணயங்களில் மனித உருவம் இல்லை.

ஆனால், மதுரையை ஆட்சி புரிந்த மீனாட்சி, மனித உருவத்தில் நாண யத்தை வெளியிட்டிருக்கிறார். கோயில் சிற்பங்களில் இத்தகைய உருவங்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற உருவத்தில் நாணயத் தையும் அக்காலத்தில் வெளியிட்டுள் ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங் களில் நடக்கும் நாணயவியல் கண் காட்சிகளில் இந்த செப்பு நாணயத்தை காட்சிப்படுத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...