சனி, 24 பிப்ரவரி, 2018

முலைவரிஇந்து நாடாக இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங் களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத் தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மேலாடை இன்றிதான் உயர்சாதியினருக்கு  மரியாதை செய்ய வேண்டும். பிறந்த குழந்தையிலி ருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவ னுடைய மனைவியாக, மகளாக, சகோதரி யாக, தாயாராக, பாட்டி யாக, இருந்தாலும் மேலாடை இன்றிதான் இருக்க வேண்டும்.

இந்த இந்துத்துவ அடக்குமுறையை கூறும்போது கண்டிப்பாக ‘நாங்கிலி’ என்ற பெண்ணைப்பற்றி கூறியே ஆகவேண்டும்.

நடந்த காலம்: சுமார் 100 ஆண்டுக ளுக்கு முன், இடம்: திருவிதாங்கூர் இராஜ் யம், நாங்கிலி என்னும் பெண்ணின் கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங் கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.

இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. (முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப்பட்டது.)

அதைத் தொடர்ந்து, மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் விட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத் தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவ மானமாகக் கருதினாள். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதி யில் தளராமலிருந்தாள்.

இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கர்ணம் என்று பெயர்.

தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

முலைக்கர்ணம் பார்வத்தியார் அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தி யார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய் விட்டார்.

நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகை யோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள். ஒரு வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத் தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள். மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் முலைவரி என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை.

இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.

பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் பார்ப்பனர்கள். அதனால் அந்த இடத்தை முலைச்சிபரம்பு என்பதற் குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் "நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி” என அவரைப் பாராட்டுகிறார்கள்.

இந்த வரலாறுகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்கு முறைகளும் தமிழரை எவ்வாறு பாடாய் படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.

- அழகர்சாமி,  மதுரை

- விடுதலை ஞாயிறு மலர், 3.2.18

ஆதிச்சநல்லூர்1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூ ரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப் பட்டதாகத் தெரிகிறது. பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத் தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வு களை நடத்திய பிரித்தானியத் தொல்லி யலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தி யாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத் தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்ச நல்லூரில் இருந்தது எனத் தொல்லியலா ளர்கள் கருதுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப் பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமான வையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத் தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழி கள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்கு களாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக் களுடன்கூடிய பல தாழிகளும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமு டன் உள்ளனர். அது தமிழர்களின் பண் டைய நாகரீகத்தைச் சொல்லும் இடம், சிந்து சமவெளிக்குமுன்பாகவே ஒரு முழுமையடைந்த நாகரீகத்தைக் கொண்ட நாகரீகமாக இருந்தது. இங்கு கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தி யுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கை யைக்கூட வெளியிடவில்லை, அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்ச நல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது  ''2004 மற்றும் 2005இல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று இன்று வரை வெளி யிடப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு மத்திய கலாச்சாரத்துறை வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியா வந்து ஆய்வு செய்ய கடுமையான விதிமுறைகளை விதித்த பிறகு ஆதிச்சநல்லூர் குறித்த ஆய் வுகளை அரசைத்தவிர மற்ற யாருமே செய்ய இயலாமல் போனது. இதனால் ஆதிச்ச நல்லூர் நாகரீகம் மெல்ல மெல்ல மக்களி டையே மறைக்கப்பட்டுக்கொண்டு இருக் கிறது.
- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18

ஆங்கிலேய அரசாணையால் பறிபோன பார்ப்பனரின் சுதந்திரம்!!• பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,  வைசியன் வியாபாரம் செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளா மல்,  சட்டம் என்றால் அனைவரும் சம மாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை யில் 1773 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு புதிய சட்டத்தை எழுத தொடங்கியது.

• சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,  1795-ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

• 1804ஆம் ஆண்டு பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது

• 1813ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது

• பார்ப்பான் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில், யார் குற்றம் புரிந்தவராக இருப்பினும், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது..

• சூத்திரப்பெண் திருமணம் முடிந்த அன்றே,  பார்ப்பனருக்கு பணிகள் பல செய்ய 7-நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். என்பதை ஆங்கிலேய அரசாங்கம் தனது அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
• பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லார்ட்மெக்காலேயின் சீரிய முயற்சி யின் விளைவாக, சூத்திரனும்  கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

• சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835இல் ஆங்கிலேய அரசு தனது அரசாணை யின் மூலம் முடிவிற்கு வந்தது.

• 1835-ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காரு வதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.

• 1868 ஆம் ஆண்டு  இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

• 1865-இல் உடன்கட்டை ஏறுவதை சட்டம் போட்டு தடுத்தனர். இருப்பினும் சட்டத்திற்கு உடன்படாமல் பல இளம்பெண்கள் எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். 1997-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் எரியும் நெருப்பில் தள்ளி ஒரு பெண் கொல்லப்பட்டாள். அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் ஊடகவெளிச்சம் இல்லாமல் அவ்வப்போது இது போன்ற கொடூரங்கள் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.

- விடுதலை ஞாயிறு மலர், 17.2.18

திங்கள், 19 பிப்ரவரி, 2018

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

 போடி, பிப்.19 தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசி ரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே ஓவா மலைப்பகுதியில் பழைமையான அரிய வகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: தொல்பொருள் மற்றும் விழிப்புணர்வு மய்யத் தின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டு பிடிக்கும் பணியில் கல்லுரி முதல்வர் மனோகரன் வழிகாட்டு தலில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கனகராஜ், மாண வர்கள் ராம்குமார், சவுந்திர பாண்டி, பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகிறோம்.இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊரின் வடமேற்கு 5 கி.மீ.,தொலைவில் உள்ள ஓவா மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளை நிற ஓவியங்கள் 

ஓவா மலையில் பெருமாள் பொடவு என அழைக்கப்படும் பழங்கால குகைகளில் வெள்ளை நிற பாறை ஓவியத் தொகுப்பை கண்டறிந்துள்ளோம்.இதில் ஏழுக்கும் மேற்பட்ட மனித உருவங்களும், புலி, மான் போன்ற விலங்குகளின் உருவங் களும் வெள்ளை நிறத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. குகை வெளிப்புறத்தில் மனித உருவங்கள் கைகளை உயர்த்தி நடனமாடும் நிலையிலும், சில மனித உருவங்கள் கைகளை உயர்த்தி, குச்சி போன்ற ஒன்றை கையில் பிடித்து புலி, மானை பார்த்த நிலையில் உள்ளன. இது புலி, மானை மனிதர்கள் வேட் டையாடும் நிகழ்வு போல காட்சியளிக்கிறது.

புலி தன் அருகில் உள்ள மானை பார்த்து தன் வாலை உயர்த்திய நிலையிலும், புலியின் உடல் முழுவதும் கோடுகள் வெள்ளை நிறத்திலும், மான் புலியை பார்ப்பது போல வரையப்பட்டுள்ளன.

பெரிய மனித உருவம் ஒன்று தன் கைகளை தொங்க விட்ட நிலையிலும், அருகில் கைகளை உயர்த்தி நடனமாடுவது போன்றும் காணப்படுகின்றன.

இதே பகுதியில் 1500 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டு கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் ஆய்வு செய் வதன் மூலம் வரலாற்று தொன் மையான தடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன, என்றார்.

- விடுதலை நாளேடு, 19.2.18

ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டெடுப்பு

திருப்பத்தூர், பிப்.19 ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு உள்ளிட்ட 32 மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், புங்கம்பட்டு நாட்டிற்கு உள்பட்ட  “கல்லாவூர்’ என்ற கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைவிடம் ஒன்றை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கே.ஆர்.லட்சுமி, காணி நிலம் மு.முனிசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமன், ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழு களஆய்வின் போது கண்டறிந்தனர்.

சென்னை, பிப்.19 ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. சென்னை மாவட்ட ஆட்சியர், அன்புச்செல்வன்

வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள, நாவிதர், சமையலர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு, தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு, 18 வயது முதல், 35 வயது வரையுள்ள, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேறிய, தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அடுக்குமாடி கட்டடம்  1இல், வரும்  19ஆம் தேதி முதல், 26ஆம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மார்ச் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு ,19.2.18

திங்கள், 12 பிப்ரவரி, 2018

பார்ப்பனத்திகள் வெளியிலிருந்து வந்தவர்களா?

9.11.1930, குடிஅரசிலிருந்து...


ஜாதியென்பது பிரம்மாவினால் உண்டுபண்ணப் பட்டது என்று கூறுவது எத்துணை நேர்மையுடையது? அச்சாதி வேற்றுமையை அக்கடவுள் வேறுநாடுகள் ஒன்றிலும் உண்டாக்காமல் பாழும் இந்தியநாட்டில் மட்டுந்தானா உற்பத்தி செய்ய வேண்டும்? அவன் முகத்தில் தோன்றிய பார்ப்பனர்கள் உயர்ந்த ஜாதியா ரென்றும் அதன் கீழ்ப்பாகமாகிய புஜத்தில் தோன்றிய ஜாதியார்களாகிய சத்திரியர் அவர்களை விட சிறிது தாழ்ந்த குலத்தாரென்றும், தொடையில் தோன்றிய வைசியர் சத்திரியரைவிட சிறிது தாழ்ந்த ஜாதியார் என்றும் பாதங்களில் தோன்றிய சூத்திரர் இவர்கள் எல்லோரையும் விட கீழானவர் என்றும் கூறல் சரியா? ஒரே மரத்தில் உச்சியிலும் இடையிலுள்ள கிளை களிலும் அடியிலும் காய்கள் காய்க்கின்றன. உச்சியில் காய்க்கின்ற காய்கள் உயர்ந்த ருசியையும் அடியில் காய்த்த பழங்கள் எல்லாவற்றையும் விடத்தாழ்ந்த ருசியையுமுடையதாயிருக்கின்றதோ அவ்வாறில் லாமல் எல்லாம் ஒரே விதமான ருசியாயிருக்கிறதே அஃதே போல் எல்லாச் சாதியாரும் சமமானவர்களாகத் தானேயிருக்க வேண்டும். கடவுளே ஜாதி, ஜாதியாக மனிதர்களை உற்பத்தி செய்திருந்தால் ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவை வெவ்வேறு ஜாதி என்று காட்ட வெவ்வேறு உருவமுடையதாய் உற்பத்திசெய்தி ருப்பது போல் பார்ப்பானை ஒருவித வடிவமாகவும், சத்திரியனை வேறு உருவமாகவும், வைசியனை வேறு வடிவமாகவும், சூத்திரனை ஒரு வடிவமாகவும் உண்டு பண்ணியிருப்பானன்றோ? ஆடும் மாடும் புணர்ந்தால் கர்ப்பம் உண்டா வதில்லை.

அஃதே போல் வெவ்வேறு ஜாதியான பார்ப்பனப் பெண்ணும், சூத்திர ஆணும் கூடினால் கர்ப்பமுண்டா காமலிருக்க வேண்டுமே? அவ்வாறின்மையால் மனிதர்களனைவரும் ஒரே ஜாதி யென்பது விளங்க வில்லையா? முகத்தில் பிராமணன் தோன்றி னான் என்றுதானே சாத்திரங்கள் கூறுகின்றன. பிராமணத்தி எவ்வாறு வந்தாள் என்று கேள்வி கேட்க நேரிடும் என்பதை அவர்களறியாமலே இச்சாத்திரங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாணமாய்ப்போகும் ஆண்கள் பெரும்பாலும் பெண்களைக் கூட்டிக் கொண்டு போவது வழக்க மில்லை. அஃதேபோல் அக்காலத்திலே நம் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தனியாக பெண்களின்றி வந்ததால் பிராமணத்தியும் முகத்தில் தோன்றினாள் என்று எழுத வழியில்லாமல் போய்விட்டது. நாம் பழைய சாத் திரங்களை ஆராய்ந்தால் ஆரியர்கள் பெண்களன்றி இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார்களென்பது நன்கு புலனாகும். எடுத்துக் காட்டாக வியாசமுனி மீன்வாணிச்சியினின்றும், கவுசிக முனி சூத்ரச்சியினின்றும், விசுவாமித்திரர் சண்டாளச்சியினின்றும், வசிஷ்டர் வேசியினின்றும், சக்கிலிச்சி வயிற்றில் சத்தியமுனியும், புலைச்சி வயிற்றில் பராசரமுனியும் பிறந்தததாக காணக்கிடக்கின்றது. இவர்களில் எவரும் பிராமணத்தியிடம் பிறக்கவில்லை யென்றாலும் பார்ப்பனர்களாக ஏன் அவர்களின் மேன்மை வாய்ந்த குருவாகவும் விளங்கியிருக் கின்றனர்? இந்நால்வகைச் சாதியாரும் ஒரே காலத்திலுற்பவித்திருக்க ஒரு ஜாதியார் குறையவும், மற்ற ஜாதியார் கூடியிருக்கவும் காரணமில்லை. சென்ற முறை எடுக்கப்பட்ட ஜனசங்கைக்  கணக்குப்படி 100க்கு ஒருவர் பிராமணராயும், மீதி 99 பேரும் சூத்திரரா யுமிருக்கின்றார்களே. பார்ப்பனர்களின் தற்கால சித்தாந்தப்படி கலியுகத்தில் சத்திரியரும், வைசியரும் கிடையாது. பிரம்மாவின் மூத்த புத்திரர்களும், அதிகப் பிரீதியுடைய வர்களும், பூசுரர்களுமான (பூலோக தேவர்களுமான) பார்ப்பனர்கள் மற்றைய ஜாதியார் களைவிட இத்துணை குறைவாகவும் சூத்திரர்கள் பல்கிப் பெருகி இருக்கவும் காரணந்தானென்னை? ஒரே ஜாதியான பார்ப்பனரிலே பல பிரிவினை களுண் டாகி ஒருவர் வீட்டில் ஒருவர் உணவருந்தமாட்டே னென மறுத்தலும் ஏதற்கு? பிரம்மதேவன் முகத்திலும், புஜத்திலும், தொடையிலும், பாதத்திலும் பிள்ளை உண்டாவதாகயிருந்தால் அவனுக்கு மனைவி எதற் கென்றும், ஆண்குறி எதற்கென்றும் கேள்விப்பிறக் கின்றது. எனவே பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை உயர்த்தவே இத்தகைய கட்டுக்கதைகளுண்டு பண் ணியவர் என்பதை நிச்சயமாய் நாமறியலாம்.

- விடுதலை நாளேடு, 9.2.18

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்

*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,*

அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது"* என்பது,,,

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

*உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; ் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*

தமிழ் நாடு - 79 ; வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*

தமிழ் நாடு - 86.7%; வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

*கல்வி_விகிதாசாரம்*

தமிழ் நாடு - 80.33%; ் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; ் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

*மனித_வள_குறியீடு* (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ;  வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)

தமிழ் நாடு - 18%;  வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149;  வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள்,,,,

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...