வியாழன், 29 நவம்பர், 2018

அய்ராவதம் மகாதேவன் மறைவு

தினமணி'யின் முன்னாள் ஆசிரியர்


திராவிடர் கழகத் தலைவர் விடுதலை' ஆசிரியர் இரங்கல் - இறுதி மரியாதை
தினமணி'யின் முன்னாள் ஆசிரி யரும், கல்வெட்டுத் துறையில் சிறந்த ஆய்வாளருமான உயர்திரு. அய்ராவதம் மகாதேவன் (வயது 88) அவர்கள் மறைவிற்காக பெரிதும் வருந்துகிறோம்.

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஆதரவும், ஆர்வமும் கொண்டவர். சிந்து சமவெளி - திராவிடர் நாகரிகம் என்பதை நிறுவியவர் - இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவர் (2009).

அவர் மறைவு தமிழ்நாட்டிற்கு முக்கிய இழப்பாகும்.

அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தாருக்கும், பத்திரி கையாளர்களுக்கும் கழகத்தின் சார்பிலும், விடுதலை'யின் சார் பிலும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

26.11.2018

குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறைந்த அய்ராவதம் மகாதேவன் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

-  விடுதலை நாளேடு, 26.11.18


'தினமணி'யின் முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டுத்துறையில் சிறந்த ஆய்வாளருமான பத்மசிறீ அய்ராவதம் மகாதேவன் (வயது 88) நேற்று  மறைவுற்றார். மறைவுற்ற தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அய்ராவதம் மகாதேவன் அவர்களின் இல்லத்திற்கு நேற்று (26.11.2018) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கழகத் தோழர்கள் கலைமணி, அம்பேத்கர், முரளிகிருஷ்ணன், அசோக், துரை, லோகேஷ்வரன், குமார் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


தமிழக கல்வெட்டியல் அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான, அய்ரா வதம் மகாதேவன் மறைந்து விட்டார் என்ற செய்தி நம்மைப் பெருந்து யரத்திற்கு ஆளாக்கியுள்ளது.  சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அவர் செய்த ஆய்வுகள் சிறப்பான வையாகும். சிந்து சமவெளி எழுத்து களுக்கும், தொன்மையான திராவிட மொழி எழுத்து களுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகம்தான் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். சிந்து வெளி முத்திரைகளில் இடம் பெற்றுள்ள தமிழ் மன்னர்களின் பெயர்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அவைகளை எல்லாம் விளக்கி சிந்துசமவெளி பண்பாடும் சங்க இலக்கியமும் என்ற அருமையான ஓர் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

மேலும், அவர் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் முந்தியவை என்பதை நிரூபித் துள்ளார். பழந்தமிழ் மன்னர்களைப் பற்றிக் கல்வெட்டில் கண்ட செய்திகளை விளக்கியுள்ளார். தமிழக வரலாற்றில் தொன்மைக்காலப் பகுதி மீது ஒரு வெளிச்சம் பாய்ச்சியவர்தான் அய்ராவதம் மகாதேவன். அவருடைய கல்வெட்டியல் துறை ஆய்வும், பங்களிப்பும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

அவருடைய மறைவு தமிழக வரலாற்றுப் புலத்திற்கு பேரிழப் பாகும். அவருடைய மறைவிற்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறது.

-  விடுதலை நாளேடு, 27.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்புதிருப்பத்தூர், நவ.12  திருப் பத்தூர் அருகே புலிக்குத்திப் பட்டான் நடுகல் கண்டெடுக் கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகி யோர் மேற்கொண்ட கள ஆய் வில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:  திருப்பத்தூரிலி ருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலையில் குரும் பேரிக்கு அருகில் உள்ளது நாயக் கனூர் எனும் சிற்றூர். இந்த ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சிவபாலன் மற்றும் ஆய்வு மாணவி சவுமியா ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில், கள ஆய்வினை மேற்கொண்டோம்.

இவ்வூர் மக்கள் வேடியப்பன் என்ற பெயரில் மூன்று நடுகற் களை பாதுகாப்பு வருகின்றனர். இதில், நடுவில் உள்ள நடுகல் வீரன் ஒருவன் புலியுடன் சண்டையிடுவது போல் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் லின் அமைப்பானது 4 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகக் காட்சி தருகிறது. வீரன் வலது பக்க கொண்டையிட்டுள்ளான். காதுகளில் குண் டலமும் காணப்படுகின்றது. வீரனின் இடது கை புலியின் வாயில் உள்ளது. வலது கையிலுள்ள நீண்ட வாளினால் புலியின் வயிற்றைக் குத்து கிறான் வீரன். இடை கச்சில் குறுவாள் உள்ளது. புலியின் மேல் கால்கள் இரண்டும் வீரனின் இடது கையினைப் பிடித்துள்ளன. வாய் கையினைக் கவ்வி (கடித்தல்) இருக்கிறது. பின் கால்கள் மூலம் நின்ற கோலத்தில் புலி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. தலையின் மேற்பகுதியில் இறந்த வீரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி வடிவமைக்கப் பட்டுள்ளது. தன்னுடைய ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் கொன்ற கொடிய புலியைக் கொன்று தானும் இறந்து போன வீரனுக்கு இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வூரானது ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதி என்பதால், பழைய காலத்தில் ஏராளமான புலிகள் இருந்திருக்கும் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.  மேலும், ஜவ்வாது மலை, அதன் அடிவாரப் பகுதிகளில் புலியூர், புலிமடு, புலிக்குகை, புலிக்குட்டை போன்ற ஊர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊரினைக் காத்து உயிர்விட்ட வீரனை இன்றும் இவ்வூர் மக்கள் வணங்குகின்றனர் என்றார் அவர்.

- விடுதலை நாளேடு, 12.11.18

மன்னனின் மூடத்தனம்

தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்ட அந்த மன்னரு நாள், கிழமை பாக்காம எந்தக் காரியமும் செய்ய மாட்டாராம். ஒருநாள் ஏதோ வெளியூர்ப் பிராயாணம் போனதால அன்னைக்கு ஏகாதசின்னு தெரியாம சாப்பிட்டு முடிச்சதும் வெற்றிலை போட்டுட்டாராம். “அய்யய்யோ ஏகாதசியும் அதுவுமா இப்பிடி பண்ணிட்டேளே”ன்னு வேதம் அறிஞ்ச ஜோஷியக்காரர்  பீதியை ஏற்படுத்த, அதுக்கு என்ன பரிகாரம்னு மன்னர் கேட்டிருக்கார். உடனே, “என்னைய மாதிரி 40, 50 பிராமணாளுக்கு வீடு, வாசல், கிணத்தோட 50 ஏக்கர் நிலத்தையும் குடுத்து, ஒரு கிராமத்தை ஏற்படுத்திக் கொடுத்தேள்னா எல்லாம் சரியாய்ப்புடும்” என்று பக்குவம் சொல்லியிருக்கார். மன்னரும் அப்படிச் செஞ்சு பெரிய பாவ காரியத்துல இருந்து தப்பிட்டார்.
(நீதி: இலவசமாய் வாங்குனாத் தப்பு. இப்பிடி குணமா கேட்டு வாங்கோணும்)
ஆதாரம்: உ.வே.சா எழுதிய என் சரித்திரம் நூலில், தன் ஊரின் வரலாறாகப் பதிவு செய்திருப்பதில் இருந்து.

*கே.கே.மகேஷ்*
- கட்செவி பதிவு

வியாழன், 1 நவம்பர், 2018

கீழடி: முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கையை அமர்நாத்தே தாக்கல் செய்ய உத்தரவு கிடைத்த பொருட்கள் 2,500 ஆண்டுகள் பழைமையானவை

அமெரிக்க ஆய்வகத்தில் உறுதி!
மதுரை, நவ.1 கீழடியில் கிடைத்த பொருள் கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் பழை மையானவை என, கலிபோர்னியா ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் இரு ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை, முந்தைய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனே தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் பிரபாகரபாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

இந்திய தொல்லியல் துறை இயக் குநர் ஜெனரல் கடந்த அக். 3 இல் ஓர்உத்தரவைபிறப்பித்துள்ளார்.அதில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் வசம் உள்ள சீலிடப்பட்ட பொருள்கள் மற்றும் ஆய்வு தொடர்பான ஆவணங்களை, புதிதாக நியமிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுப்பணிகளை மேற்கொண் டவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் சம்பந்தப்பட்ட ஆய்வு தொடர்பான விசயங்களை நன்கு அறிந்தவர். புதிதாக வந்துள்ளவருக்கு ஏற்கெனவே நடந்த ஆய்வுகள் குறித்து தெரியாது.

ஆய்வின்போது இருந்தவரே அறிக்கை தயாரித்தால் தான் உண்மை யான தகவல்கள் வெளிவரும். இங்கு பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய எழுத் துக்கள் கிடைத்துள்ளன. இவை அசோகர் காலத்திற்கும் முந்தையது.

எனவே, தமிழர் நாகரீகமே முதன்மையானது என்பதால் அதை சிதைக்கும் நோக்கில் இதுபோன்று மத்திய அரசு நடக்கிறது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து அமர்நாத் ராமகிருஷ்ணனே ஆய்வை தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்குரை ஞர் ஆஜராகி, கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் அமெரிக்காவின் கலிபோர்னி யாவிலுள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. முதல்கட்ட ஆய் வறிக்கை கிடைத்துள்ளது. அதில், சுமார் 2,300 முதல் 2,500 ஆண்டுக்கும் முந்தைய பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வணிக தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாழிகளில் மீன் உள்ளிட்ட பல வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். இலங்கை நாகரீகத்துடன் கூடியவர்களும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆதன், திஷ்ரன், உதிரன், சாந்தன், இறவன், குலிறன், மாயூரான் போன்ற பல தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு பணிகளில் அமர் நாத் ராமகிருஷ்ணனும் தொடர அனு மதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதையடுத்து, கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வா ராய்ச்சியில் ஈடுபட்ட அமர்நாத் ராம கிருஷ்ணன், இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையை தயாரிக்க வேண்டும். அவரது அறிக்கையை 7 மாதத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

- விடுதலை நாளேடு, 1.11.18

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...