வியாழன், 21 பிப்ரவரி, 2019

பழனி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய வகைக் காசுகள் கண்டெடுப்பு



பழனி, பிப். 19- பழனி அருகே ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட அரிய வகை காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழனி அருகே உள்ள போடுவார் பட்டி கிராமத்தில் ஆறு முகம் என்பவர் வீட்டில் சில பழைய காசுகள் கிடைத்துள்ளன. இதனை தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் மற்றும் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வரலாற்றுத் துறைத் தலைவர் இராஜேஸ்வரி, பழனியாண்டவர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனை வர் இரவிச்சந்தின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக் காசுகள் கோப்பரகேசரி வர்மன் முதலாம் இராஜராஜா சோழன் கால காசுகளாகும். தஞ்சையை தலைநக ராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் ராஜராஜ சோழன் கி.பி 985 ஆம் ஆண்டு அருள்மொழிவர்மர் என்ற பெயருடன் ஆட்சிப் பொறுப்பேற்று கி.பி.1014 முடிய 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார். கி.பி 993இல் இலங்கையின் மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

இலங்கை போரில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் இந்த காசுகளை வெளியிட்டுள்ளார். தங்கம் மற்றும் செம் பினால் வெளியிடப்பட்ட இந்தக்காசுகள் இலங்கை சோழ சாம்ராஜ்ய த்தின் ஒரு பகுதி என்பதை குறிக்கிறது.1 .5. செ.மீ விட்டமும் 0.5. மி.மீதடிமனும் கொண்ட இந்த காசுகள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கம் போர்வீரர்கள் வேலுடன் இருப்பது போலவும் மற்றொரு புறம் இராஜராஜ சோழனின் முத்திரை பொறிக்கப் பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டவை.

இராஜஇராஜ சோழனின் இந்த காசுகள் பழனிப் பகுதியில் பரவலாக கிடைக்கின்றது.இதே போல தங்கத்திலான காசுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவை இதுவரை கிடைத்த தில்லை. தங்கத்தின் மதிப்பு அதிகம் என்பதால் இந்தக் காசு களை மக்கள் ஆப ரணங்களுக்காகவும், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அழித்திருக்கலாம். செம்பினால் ஆன நாணயங்கள் மட்டும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. பண்டைத் தமிழ் மக்கள் வணிகத்திற்காக நாணயங்களை அதிக அளவுபயன்படுத்தி வந்துள்ளது நாகரிகத்தில் தமிழர் கள் சிறந்து விளங்கியுள்ளதை காட்டுகின்றது. மேலும் இந்த நாணயங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க முயற்சிக்கப் படும் என்று தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 19.2.19

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...