சனி, 15 செப்டம்பர், 2018

கொங்கு சேர மன்னர் கால அரிய நாணயம் கண்டறிதல்திண்டுக்கல், செப்.15 திண்டுக்கல் மாவட் டம், பழனியில் கொங்கு சேர மன்னர் காலத்தைய அரிய செம்பு நாணயம் கிடைத்துள்ளது. பழனியைச் சேர்ந்த பழங்கால நாணய சேகரிப்பாளர் சுகுமார் போஸ். இவர், பல்வேறு இடங்களுக்குச் சென்று பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். இந்த நிலையில், இவர் சேகரித்த நாணயங்களில் கொங்கு சேர மன்னர்கள் காலத்தைய செம்பு நாணயம் இருந்ததை, பழனி தொல்பொருள் ஆய் வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்தார். இது குறித்து நாராயணமூர்த்தி கூறி யதாவது: செம்பு உலோகத்தால் செய் யப்பட்ட இந்த நாணயம் ஒழுங்கற்ற வட்ட வடிவத்தில் 3.200 கிராம் எடையுடனும், 1 செ.மீ. குறுக்குவட்ட அளவிலும் உள்ளது. ஒருபுறம் கொங்கு சேர அரசின் முத்திரை பொறிக்கப் பட்டுள்ளது. இடது கோடியில் வில் லும், அடுத்து யானையும், அதற்கடுத்து பனை மரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுமே பண்டைய சேர நாட் டின் அரச முத்திரைகளாகும். நாணயத்தின் மேற்புறம் மங்கள விளக்கும், ஓரங்களில் புள்ளிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் மற்றொரு புறம் பலிபீடத்தின் குறுக்கே வைக்கப்பட்டது போன்று இரு வாள் கள் உள்ளன. இடது மற்றும் வலது ஓரங்களில் மங்கள விளக்குகள் உள் ளன. ஓரங்களில் மொத்தம் ஒன்பது புள்ளிகள் உள்ளன.

சேர நாட்டையும் (தற்போதைய கேரளம்), தமிழகத்தின் கொங்கு பகு திகளையும் ஆண்டு வந்த மன்னர்கள், கொங்கு சேரர்கள் என அழைக்கப்பட் டனர். சங்க கால சேரர்கள் வழியிலும், தமிழகத்தின் சோழ, பாண்டிய, மன்னர் களின் ரத்தக் கலப்புகளின் வழியிலும் வந்த கொங்குச் சேர மன்னர்களின் நாணயங்கள் அரிதாகவே கிடைக் கின்றன. அந்த வகையில், இந்த நாணயமும் அரியவகையாகும். பொதுவாக, கொங் குச் சேர மன்னர்கள் நாணயங்களில் யானை உருவம் அதிகமாக இருக்காது. கொங்கு சேர மன்னர்கள் வெளியிட்ட இந்த நாணயங்களில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால், இது அரிய வகை நாணயமாகும். இந்த நாணயம் எந்த மன்னர் ஆட்சியில் வெளியிடப் பட்டது என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

கி.பி.14 ஆம் நூற்றாண்டில் கொடுங் களூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் ரவிவர்ம குலசேகரப் பெரு மாள் ஆவார். இவர் காலத்தில் இந்த நாணயம் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றாலும், உறுதிப்படுத்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்
- விடுதலை நாளேடு, 15.9.18

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

11-ஆம் நூற்றாண்டு செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு

திருவண்ணாமலை, செப். 4- திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிரா மத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டெடுத்தது.
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிரா மம், பெரிய ஏரிக்கரையில் கல்செக்கு ஒன்றில் கல்வெட்டு இருப்பதாக திருவண்ணா மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வு நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலர் ச.பால முருகன், இணைச் செயலர் பிரேம்குமார், மதன்மோகன், சேது, சுதாகர், சிறீதர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத் தில் இருந்த செக்குக் கல் வெட்டை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், அந்தச் செக்குக் கல்வெட்டு 11-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. மேலும், கூரியூர் கிரா மத்தைச் சேர்ந்த பெருவன் மகன் சேந்தன் என்பவர் இந் தச் செக்கை செய்து கொடுத் ததும் தெரிய வந்தது.
- விடுதலை நாளேடு, 4.9.18

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

Viduthalai     May 25, 2023     தமிழ்நாடு,   மதுரை மே 25  - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...