வியாழன், 22 ஜூலை, 2021

தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் மயிலாடும்பாறை பகுதியில் பழங்கால இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு

 

கிருஷ்ணகிரி,ஜூலை 20- மயிலாடும் பாறை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரும்பு வாள் மற்றும் மண் பானைகளைக் கண் டறிந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கீழடிகொந்தகைஅகரம்கங்கை கொண்ட சோழ புரம்கொற்கைமயிலாடும்பாறைசிவகளைஆதிச்சநல்லூர்கொடு மணல்மணலூர் ஆகிய 10 இடங் களில் தற்போது அகழாய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படிகிருஷ்ணகிரி மாவட் டம்தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில்தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப் பட்டதுதொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமை யில்மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல்தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந் தாமன்வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவமாணவிகள் இதில் பங்கேற்றுள் ளனர்.

இந்த அகழாய்வில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்திட்டையில் 70 செ.மீநீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றைக் கண்டறிந்தனர்.

இது தொடர்பாகஅகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:

"பர்கூர் வட்டம் மயிலாடும்பாறை யில்சானரப்பன் மலையில் மனி தர்கள் வாழ்ந்ததற்கான அடையா ளங்கள் உள்ளனமலையின் கீழ், 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றனஇங்கு முன்னோர்கள் எந்த மாதிரி யான வாழ்வியல் முறைகளை மேற் கொண்டனர்உலக அளவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களில் இவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.

கடந்த 1980 மற்றும் 2003இல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில்இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த இடம் என்று வரலாற்று ஆய்வா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு கடந்த 3 மாதங்களில் ஆய்வு மேற்கொண்டதில்மனித எலும்புகள் எதுவும் நேரடியாக நமக்குக் கிடைக்கவில்லைதொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனதற்போது இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீநீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஇதில்தற்போது 40 செ.மீவாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளதுவாளின் கைப் பிடி பகுதி இன்னும் எடுக்கப்பட வில்லைஇந்த வாளை ஒரு மண் திட்டை அமைத்து அதன்மேல் வைத்துள்ளனர்.

ஆனால்நாளடைவில் மண் ணின் அழுத்தம் காரணமாகபடிப் படியாக வாள் மேடும் பள்ளமுமாக மாறியுள்ளதுஇந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறதுஇந்த வாள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதுமுடிவுகள் வந்தபிறகுதான் இந்த வாளின் சரியான காலத்தைக் கணிக்க முடியும்".

இவ்வாறு சக்திவேல் கூறினார்.

இந்நிலையில்இந்த அகழாய்வில் தற்போது 4 மண் பானைகளைக் கண்டறிந்துள்ளனர்இது தொடர் பாகஆய்வு செய்து வருவதாகத் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சுட்டுரை மற்றும் முகநூல் பக்கத்தில் வாள் படத்தைப் பதிவிட்டு 'ஒடிந்த வாளா னாலும் ஒரு வாள் கொடுங்கள்என, 1948ஆம் ஆண்டு வெளிவந்த அபி மன்யு திரைப்படத்தில் மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞரின் கைவண்ணத்தில் உருவான வைர வரி எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தனது வலைதளப் பக்கத்தில் மண் பானை (தாழிபடத் துடன், 'கலம் செய் கோவேகலம் செய் கோவேநனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!' - புறநானூறு எனப் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...