புதன், 21 ஏப்ரல், 2021

கீழடி 7ஆம் கட்ட அகழாய்வில் பகடைகாய் உழவு கருவி, கருப்பு ஓடு கண்டெடுப்பு


திருப்புவனம்,ஏப்.18- கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ பகடைக்காய், கல் உழவு கருவிகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவேமத்தியதொல்லியல் துறை நடத்திய 2 ஆம் கட்ட அக ழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடக்க காலத்தில் உழ விற்கு கூர்மையான கல்லால் செய்யப்பட்ட உழவு கருவியை பயன்படுத்தியுள்ளனர். மேற்புறம் மண்ணை கீறிச் செல்ல கூர்மை யாகவும்,மண்ணை கிளற பக்க வாட்டில் பளபளப்பாகவும் இந்த கல் உள்ளது. இதுவரை கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைத்த நிலையில் கருப்பு நிற பானை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...