ஞாயிறு, 3 டிசம்பர், 2017

ராயக்கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு




தருமபுரி, நவ.19 தர்மபுரி மாவட்டம், ராயக்கோட்டைக்கு அருகில் உள்ள கெட்டூர் மலைக் குகையில், பழைமை யான பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

தொல்லியல் ஆய்வாளர்கள், 'அறம்' வரலாற்று ஆய்வு மய் யத்துடன் இணைந்து, கெட்டூர் மலைப்பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன. இதுகுறித்து, அறம் வரலாற்று ஆய்வு மய்ய தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது:

எழுத்துக்கள் தோன்றும் முன், மனிதர்கள், தங்களின் எண்ணங்களை ஓவியங்களாகப் பதிவு செய்தனர். அவற்றில், மலைக்குகைகளில் உள்ள ஓவியங்கள் மட்டுமே, நமக்கு கிடைக்கின்றன. கெட்டூர் குகைப்பகுதியில், செங்காவி மற்றும் வெள்ளை நிறத்தில், 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவை, 2,500 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம்.

அதிக அளவில், மயில்களும், அடுத்த நிலையில், யானையின் ஓவியங்களும் உள்ளன. யானை யின் மீது அம்புக்குறி வரை யப்பட்டுள்ளது. அது, அரச னையோ, தலைவனையோ குறிக்கும். மயில்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாக, கெட்டூர் இருந்திருக்கலாம். நாகர், குதிரையில் அமர்ந்து போரி டுவது போன்ற காட்சிகளும் உள்ளன. இப்பாறை ஓவி யங்கள், பழங்கால மனிதர் களின் வாழ்வியல் சாட்சியாக உள்ளன. ஆனால், மலை அடிவாரத்தில், பல ஓவியங்கள் அழிந்தும், மறைந்தும் உள்ளன. இப்பகுதியை பாது காக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, தொல்லியல் துறை யினர், ஓவியங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு,19.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...