திங்கள், 25 டிசம்பர், 2017

வாஞ்சிநாத ஐயர் - பார்ப்பான சாதிவெறி

வாஞ்சிநாத ஐயர் - பார்ப்பான சாதிவெறி - திரிக்கப்பட்ட வரலாற்றின் உண்மை முகம்..

தென்னிந்தியாவில் நிகழ்ந்த ஒரே கொலைச் சம்பவம் என சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்ட ஆஷ் கொலை வழக்கு உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில் தமிழ்நாட்டில் கலெக்டராக இருந்தவர் ஆஷ். கொலை செய்யும் அளவிற்க்கு அவர் செய்தது என்ன..?

"அருந்ததி இனத்தை சேர்ந்த பெண், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல ஊருக்குள் உள்ள அக்கிரஹாரம் வழியே செல்ல ஆஷ் முயன்ற போது, பார்ப்பனர்கள் 'அவள் தீட்டு சாதியை சேர்ந்தவள். அவளை ஊருக்கு ஒதுக்கு புறமான வழியில் அழைத்துச் செல்லுங்கள்' என்று கூச்சலிட்டதோடு வண்டியை நகர விடாமல் முற்றுகையிட்டனர்.

வேறு வழியில்லாமல் 'ஆஷ்' அவர்கள் மீது தடி அடி நடத்த உத்தரவிட்டு முற்றுகையிட்டவர்களை ஓட வைத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்."

"குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்டுமே குளிக்க வேண்டும் என்கிற பார்ப்பன சாதி வெறியை அலட்சியப்படுத்தி எல்லா சாதியினரும் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று உத்தரவிட்டார்."

பார்ப்பன சாதிவெறி கூட்டத்தில் வாஞ்சிநாதன் என்ற இளைஞன் ஒருவனும் இருந்தான். அவனுக்கும் அடி விழுந்தது. 'இந்து சம்பிரதாயங்களை மதிக்காத இந்த வெள்ளைக்காரனை சாகடிப்பேன்' என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டான்.

விளைவு சில ஆண்டுகளுக்கு பின் இரயிலில் மனைவி, குழந்தைகளோடு பயணம் செய்து கொண்டிருந்த ஆஷ் துரையை மாறுவேஷத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டு சாகடித்தான்.

தப்பிச் செல்லவும் அவனுக்கு வழியில்லை. அங்கேயே அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டான்.

இப்படி பார்ப்பன சாதிவெறி முற்றிப்போய் தமிழக கலெக்டரான ஆஷ் என்பவரை கொன்றான்.

ஆனால் பார்ப்பன இந்திய அரசு இந்த வெறிப்பிடித்தவனை சுதந்திர போராட்ட தியாகி என வரலாற்றில் பதிவு செய்கிறது.  இவன் பிறந்த ஊரான திருநெல்வேலி பக்கம் உள்ள மணியாச்சி என்ற ஊரை வாஞ்சிமணியாட்சி மாற்றம் செய்து அந்த சாதி வெறியனை சிறப்பிக்கிறது..

RSS இயக்கத்தில் தமிழ்நாட்டின் இந்தூராஜ்ஜிய வழிகாட்டி என்றும் காவி வெறியர்களால் இன்று போற்றப்படுடுகிறான்.
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
26.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...