புதன், 3 ஜனவரி, 2018

2017ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி



ஜன. 2: ஜாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் ஒட்டுகேட்பது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ஜன. 4: சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜன. 8: பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக விடுத்த அழைப்பை ஏற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜன. 9: பொங்கல் விழாவை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜன. 13: மாஞ்சா நூலுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜன. 20: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டனர். சென்னையில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் திமுக ரயில் மறியல் போராட்டம் நடத்தியது.

ஜன. 23: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

ஜன. 24: நாடு முழுவதும் உள்ளகூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்கான ரூ.665 கோடி வட்டியை மத்திய அரசு ரத்து செய்தது.

* ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 8 நாட்கள் நடந்தபோராட்டம் முடிவடைந்தது.

ஜன. 25: அமெரிக்க வளாகத்தில் முதன்முதலாக இந்திய வம் சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலிக்கு, கேபினட் அந்தஸ்து கிடைத்துள்ளது. அவர் அய்.நா. சபைக்கான தூதராக நியமிக்கப்பட்டதற்கு செனட் சபை அங்கீகாரம் அளித்தது.

ஜன. 30: தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.

பிப்ரவரி



பிப். 1: மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்துத் தடை விதிக்கப்பட்டது.

பிப். 5: சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட் டார். அவரது பெயரை ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார்.

* முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை விட்டு விலகினார். அதற்கான கடிதம் ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

பிப். 14: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப் பட்ட 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவரை உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. இதே போன்று சசிகலா உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பெங்களூரு கோர்ட்டு அளித்த 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதத் தொகையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

* தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில் கூவத்தூரில் தங்கியிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டப் பேரவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தனர்.

பிப். 15: ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது.

பிப். 16: தமிழகத்தின் புதிய முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அவருடன் செங்கோட்டையன் உள்பட 30 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

பிப். 18: நம்பிக்கை வாக்கெடுப்பின்  போது ஏற்பட்ட ரகளையால் தமிழக சட்டசபை போர்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது மோதலில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. திமுக உறுப்பினர்களை வெளியேற்றிய பின்னர் நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

* எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக மெரினாவில் காந்தி சிலை அருகே பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், கனிமொழி, திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

பிப். 20: காவிரி நடுவர் மன்ற தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி அபயமனோகர் சப்ரே நியமிக்கப்பட்டார்.

மார்ச்



மார்ச் 6: பாபர்மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி, முரளிமனோகர்ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

மார்ச் 9: ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப். 12இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மார்ச் 11: உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா   ஆட்சியை கைப்பற்றியது. முதல் அமைச்சர் அகி லேஷ் யாதவ் தோல்வி அடைந்தார். உத்தரகாண்டிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. பஞ்சாபில் காங்கிரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியது. மணிப்பூர், கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மார்ச் 15: ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளராக டி.டி.வி. தினகரனும் தி.மு.க. வேட்பாள ராக மருதுகணேசும் போட்டியிடுவதாக அறிவிப்பு.

மார்ச் 20: நியூட்ரினோ திட்டத்துக்கு மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவு.

மார்ச் 21: காவிரி வழக்கில் ஜூலை 11 முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தமிழகத்துக்கு கருநாடகம் நொடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 22: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கப்படும் என்றும் அதிமுக கட்சி பெயரை யாரும் பாயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மார்ச் 23: தமிழக சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ப..தனபாலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. தி.மு.க. கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக97 பேரும் எதிராக 122 பேரும்வாக்களித்தனர். ஓ.பி.எஸ். அணி புறக்கணிப்பு.

* தமிழகத்துக்கு வார்தா - வறட்சி நிவாரண நிதியாக ரூ. 2,014 கோடியே 45 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

மார்ச் 27: நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தம் கையெழுத் தானது. மக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே திட்டம் தொடங்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அறிவித்தார்.

மார்ச் 29: நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.மசோதாக்கள் நிறைவேறின.

ஏப்ரல்

ஏப். 5: சென்னை உயர்நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவி ஏற்றார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 2ஆவது பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப் 19: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோசி, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.அய்க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மே

மே 11: பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப் படமாட்டாது. குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மே 17: பிளஸ்-1 தேர்வுக்கும் இனிமேல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

மே 21: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கப் படும் 200 மதிப்பெண்களை 100 ஆக குறைக்கவும், 40 மதிப்பெண்ணுக்கு அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கவும் முடிவு.

ஜூன்



ஜூன் 3: திமுக தலைவர் கலைஞரின் சட்டபேரவை வைரவிழா, 94ஆவது பிறந்த நாள் விழா சென்னையில்  நடந்தது. இதில் ராகுல்காந்தி, நிதிஷ்குமார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று கலைஞருக்கு புகழாரம் சூட்டினார்கள்.

ஜூன் 9: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜூன் 12: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவை வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் விதித்த இடைக் கால தடையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 22: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவர் மீராகுமார் வேட்பாளராக போட்டியிடுவார் என்று சோனியாகாந்தி அறிவித் தார்.

ஜூன் 23: மத்திய அரசின் ஸ்மார்ட் நகர திட்டத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய நகரங்கள் தேர்வு, புதுச்சேரியும் இடம் பிடித்தது.

* 11 லட்சம் பேர் எழுதிய மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் தேர்வாகவில்லை.

ஜூன் 24: தவறான தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்த மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ஜூன் 30: நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் நள்ளிரவில் நடந்த சரக்கு, சேவை வரி அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சரக்கு, சேவை வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

* ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 6 நாடுகள் அமெரிக்காவில் நுழைவதற்கு டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை அமலுக்கு வந்தது.

ஜூலை

ஜூலை 3: தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஜூலை 4: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.

ஜூலை 11: காங்கிரசு தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மேற்கு வங்காள முன்னாள் ஆளுநரும் காந்தியின் பேரனு மான கோபால கிருஷ்ணகாந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை 12: ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜூலை 14: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜூலை 19: தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 2 மடங்காக உயருகிறது. மாதம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கிடைக்கும். தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஜூலை 20: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 26: பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் பதவி விலகினார்.

ஜூலை 27: பீகார் மாநில முதல் அமைச்சராக பா.ஜனதா ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்றார். இதன் மூலம் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

ஜூலை 31: மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர் களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று கூறிய உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

ஆகஸ்டு



ஆக. 1: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட நகலை மத்திய அரசிடம் தமிழக அரசு வழங்கியது.

ஆக.3: நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்பது பற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக.4: இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.

ஆக.10: கும்பகோணத்தில்  நடந்த பள்ளி விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் 7 பேரை விடுதலை செய்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளிக்கூட நிறுவனர் பழனி சாமியின் ஆயுள் தண்டனையைக் குறைத்து உத்தர

விட்டது.

ஆக.11: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு அறிவித்த 85 சதவிகித இடஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆக.12: உ.பி. அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத் தையும் ஏற்படுத்தியது.

ஆக.15: சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் நீலத் திமிங்கல சவால் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை இணைய தளத்தில் இருந்து உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டது.

* பீகாரில் வடக்குப் பகுதியில் தொடர் மழை, வெள்ளத் தினால் 78 பேர் சாவு.

ஆக.21: ‘நீட்’ தேர்விற்கு தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு விலக்கு இல்லை. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

* 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

ஆக.23: ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஆக.25: பாலியல் வழக்கில் மதத் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டதால்  அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 36 பேர் இறந்தவர்கள். ஆக.28இல் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சி.பி.அய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

செப்டம்பர்



செப். 1: நீட்தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி அனிதா தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செப். 7: அரசு ஊழியர் - ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அரசு ஊழியர் - ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்தது

செப். 9: மியான்மாவில் இருந்து 15 நாளில் 3 லட்சம் ரோகிங்யா முசுலிம்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக அய்.நா.சபை புள்ளி விவரம் தெரிவித்தது.

செப். 13: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலிமா தேர்வு.

செப். 25: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அக்டோபர்

அக். 5: தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார்.

அக். 9: கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டயை£க குறைத்து உத்தரவிட்டது.20 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

அக். 24: உயிருடன் இருப்பவர்களின் படத்துடன் பொது இடங்களில் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை.

அக்.  27: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ அரசின் சார்பில் ரூ. 10 கோடி நிதி வழங்கப்படும் என்று முதல் அமைசசர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நவம்பர்

நவ. 6: வெளிநாடுகளில் 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு செய்து இருப்பதாக பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தியது.

நவ. 20: 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து பாடங்களுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. இதனை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

நவ. 23: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயர் கொடியை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

நவ. 29: தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிசம்பர்

டிச. 2: ஒக்கி புயலில் சிக்கி நடுக்கடலில் காணாமல் போன 1,000 மீனவர்களை கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி மும்முரம்,



டிச. 11: அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக ராகுல்காந்தி போட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிச. 12: உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் கவுசல்யாவின் தாயார் உள்பட 3 பேர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

டிச. 13: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை - மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

டிச. 16: காங்கிரசு தலைவராக போட்டியின்றி ராகுல் காந்தி பதவி ஏற்றுக் கொண்டார்.



டிச. 21: 2ஜி வழக்கில் இருந்து கனி மொழி எம்.பி. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனை வரையும் விடுதலை செய்து டில்லி சி.பி.அய். தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

- விடுதலை நாளேடு, 31.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...