வெள்ளி, 23 மார்ச், 2018

பார்ப்பனர்களாய் மாற்றம்

பெரிய அக்கிரமம்
25.03.1928 - குடிஅரசிலிருந்து... 

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரம மாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக் கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர் களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய் யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டன வாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத் தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்ம வர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் சிறீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் சிறீமான் கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர் களாக வும், கோபி சந்தனம் போட்டார்களானால் சிறீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் சிறீமான் ஆதிநாராயண செட்டியா ராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக் கணக்கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!! எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமை களும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.
- விடுதலை நாளேடு, 23.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...