கிருஷ்ணகிரி, மே19 கிருஷ் ணகிரி அருகே பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகையை வரலாற்று ஆர்வலர்கள் செவ் வாய்க்கிழமை கண்டறிந்தனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ் ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தனது களப் பணியை கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி அருகே செவ் வாய்க்கிழமை மேற்கொண்டது. அப்போது, நக்கல்பட்டி கிரா மத்தில் உள்ள ஆயிரம் அடி உயரம் உள்ள சிறீராமன் மலையின் தெற்கு திசையில், அடிவாரத்திலிருந்து சுமார் 200 அடி உயரத்தில் சுமார் 300 அடி நீளத்தில் இயற்கையாக அமைந்த குகையைக் கண்டறிந்தனர்.
இந்த குகையில், சுமார் 500 பேர் வரை தங்கலாம். இதனைச் சாவடி என அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
இந்தக் குகையில், சுமார் 2 ஆயிரம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையில் 3 தொகுதி களாக காணப்படுகின்றன. தொடக்க கால ஓவியங்களான விலங்கின் மீது மனிதன் அமர்ந் திருப்பது போலவும், சில திரிசூ லங்கள் நடப்பட்டு வழிபாடு செய்வதுபோன்ற ஓவியங்களும், ராமாயணத்தில் வரும் ராவணன், அனுமன் ஆகிய உருவங்கள் தெருக்கூத்தில் வருவது போன்ற ஆடை அணிந்தவாறு வரையப் பட்டுள்ளன. இதில் ராவணனுக்கு 10- க்குப் பதிலாக 7 தலைகள் மட்டுமே வரையப்பட்டுள்ளன.
இந்த குகைக்குச் செல்லும் வழியில் சென்னியம்மன் கோயில் அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல் திட்டைகள் காணப்படுகின்றன.
இந்த கள ஆய்வின்போது, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சி யகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வாளர் சுகவனம் முருகன் ஆகியோர் இந்த பாறை ஓவியங்கள் குறித்து விளக்கினர். இந்த கள ஆய்வை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
- விடுதலை நாளேடு, 19.5.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக