புதன், 20 ஜூன், 2018

தாரமங்கலம் அமரகுந்தி பகுதிகளில் 7 நடுக்கல்கள் கண்டுபிடிப்பு



சேலம் மாவட்டம், தாரமங்கலம் அமரகுந்தி பகுதிகளில் 7 நடுகல்களை சேலம் வரலாற்று ஆய்வு மய்யத்தைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

சேலம் வரலாற்று ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு அமரகுந்தி, தாரமங்கலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

அப்போது வீரக்கல், சதிகல், குதிரைக் குத்திப்பட்டான்கல், புலிகுத்திப்பட்டான்கல் என 7 நடுகல்களைக் கண்டறிந்துள்ளனர்.

கெட்டிமுதலிகள் 16ஆம் நூற்றாண்டில் அமரகுந்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.

இவர்கள் நாயக்க மன்னர்களின் கீழ் குறுநில மன்னர்களாக பாளையக் காரர்களாக ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் காலத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளன.

அந்தப் போர்களில் இறந்த வர்களுக்கு நடுகல்கள் வைக்கப் பட்டன.

வீரர்கள் இறந்தவுடன், அவர்கள் மனைவியர் சிலர் உடன்கட்டை ஏறி உயிரிழந்தனர். அவர்களுக்காக சதிகல் வைக்கப்பட்டது.

போரில் உயிரிழந்த ஒரு குதிரைக்கும் வீரனோடு இணைத்து நடுகல் வைக்கப் பட்டுள்ளது.

(இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு)

-  விடுதலை ஞாயிறு மலர், 19.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...