சனி, 23 ஜூன், 2018

ஏலகிரி மலையில் நடுகற்கள் கண்டெடுப்பு



திருப்பத்தூர், ஜூன் 23 ஏலகிரி மலையில் புதிய நடு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எடுக்கப் படும் நடுகற்கள் ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் உள் ளதை ஏலகிரிமலை தொன்போஸ்கோ கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் சு.ராஜா கண்டெடுத்துள்ளார்.

4 கற்கள் கொண்ட இத்தொகுப்பில் முதலாவது நடுகல் ஒரு பெண்ணுக்கு எடுக்கப்பட்ட வீரமாசதிக் கல்லாகும். 28 அங்குலம் உயரமும், முக்கோண வடிவிலும் இக்கல் உள்ளது. 2ஆவது கல் இரு பெண்களும், ஒரு வீரனும் உள்ள நிலையில் காணப்படுகிறது. முதல் பெண்ணின் வலது கையில் பூவும் , 2ஆவது பெண்ணின் இடது கையில் பை முடிப்பும் உள்ளன. வீரனின் கையில் வில் அம்பு உள்ளது. இக்கல் 28 அங்குலம் உயரமும் 58 அங்குலம் அகலமும் உள்ளது.

3-ஆவது நடுகல்லில் காணப்படும் பெண் இடது கையில் பை முடிப்புடனும், ஆண் மார்பில் பாய்ந்த வேலுடனும் காணப்படுகிறது. இக்கல் 28 அங்குலம் உயரமும், 35 அங்குலம் அகலமும் உள்ளது. 32 அங்குல உயரமும், 36 அங்குலம் அகலமும் உடைய 4-ஆவது கல்லில் வீரன் ஒருவன் வில் அம்புடன் காணப்படுகிறான்.

இந்த நடுகற்களில் ஆண், பெண் இருவரும் அணிகலங்களும், கை கால்களில் கடகங்களும் அணிந்து இருக்கின்றனர். தலையில் கொண்டை போட்டிருக் கின்றனர். எனவே, இது பிற்கால விஜய நகரத்தார் காலமான கி.பி. 15 அல்லது 16 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்களாக அறியப்படுகின்றன என்று பேராசிரியர் ராஜா தெரிவித்தார்

-  விடுதலை நாளேடு, 23.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...