செவ்வாய், 3 ஜூலை, 2018

ஆரவல்லி மலைத்தொடரில் பவுத்த மத அடையாளங்கள் கண்டுபிடிப்பு!



அகமதாபாத், ஜூன் 24 -குஜராத்தின் ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள தாரங்கா மலைப் பகுதியில் இந்தியத் தொல்லியல் துறையினர் மேற் கொண்ட ஆய்வில் புத்த சமய தூணைக் கண்டு பிடித்துள்ளனர்.

குஜராத்தில் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள தேவ்நீ மோரியில் கி.பி. 3-ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த, பவுத்த சமய பழங்காலப் பொருட்களும் தூண் ஒன்றும் புத்த விஹார் களும் நீண்டகாலமாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியத் தொல்லியல் துறையினர் தொடர்ந்து இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது, தூண், மண்பாண்டம், கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இங்கு தற்போது ஆய்வுப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டு உள்ளன. சுமார் 8 மீட்டர் விட்டம் கொண்ட சுட்டச்  செங்கற்களால் ஆனக்கட்டடம் ஒன்று நான்குபடிகளுடன் இருப் பதும் கண்டு பிடிக்கப்ப்பட்டு உள்ளதாக தொல்லியல் ஆய் வின் துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் அபிஜித் அம்பேகர் தெரிவித்துள்ளார். குஜராத் மிக முக்கிய மான பவுத்த தலம் என்பதை, சமீபத்திய இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதிப் படுத்தியுள்ளன.

சமீபத்தில் 50 மீட்டர் நீளம் கொண்ட கி.மு. 5-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த கட்டடம்  வாத் நகரில் தொல்லியல் துறையினர் கண்டு பிடித்தனர்.

வாத் நகரில் இருந்து தாரங்கா மலைப் பகுதியானது 38. கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். மேலும் மாநிலத் தொல்பொருள் துறையினர், வாத் நகரில் பவுத்த கோயில் ஒன்றையும் அண் மையில் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 24.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...