வியாழன், 29 நவம்பர், 2018

அய்ராவதம் மகாதேவன் மறைவு

தினமணி'யின் முன்னாள் ஆசிரியர்


திராவிடர் கழகத் தலைவர் விடுதலை' ஆசிரியர் இரங்கல் - இறுதி மரியாதை




தினமணி'யின் முன்னாள் ஆசிரி யரும், கல்வெட்டுத் துறையில் சிறந்த ஆய்வாளருமான உயர்திரு. அய்ராவதம் மகாதேவன் (வயது 88) அவர்கள் மறைவிற்காக பெரிதும் வருந்துகிறோம்.

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஆதரவும், ஆர்வமும் கொண்டவர். சிந்து சமவெளி - திராவிடர் நாகரிகம் என்பதை நிறுவியவர் - இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவர் (2009).

அவர் மறைவு தமிழ்நாட்டிற்கு முக்கிய இழப்பாகும்.

அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தாருக்கும், பத்திரி கையாளர்களுக்கும் கழகத்தின் சார்பிலும், விடுதலை'யின் சார் பிலும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

26.11.2018

குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறைந்த அய்ராவதம் மகாதேவன் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

-  விடுதலை நாளேடு, 26.11.18


'தினமணி'யின் முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டுத்துறையில் சிறந்த ஆய்வாளருமான பத்மசிறீ அய்ராவதம் மகாதேவன் (வயது 88) நேற்று  மறைவுற்றார். மறைவுற்ற தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அய்ராவதம் மகாதேவன் அவர்களின் இல்லத்திற்கு நேற்று (26.11.2018) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கழகத் தோழர்கள் கலைமணி, அம்பேத்கர், முரளிகிருஷ்ணன், அசோக், துரை, லோகேஷ்வரன், குமார் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


தமிழக கல்வெட்டியல் அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான, அய்ரா வதம் மகாதேவன் மறைந்து விட்டார் என்ற செய்தி நம்மைப் பெருந்து யரத்திற்கு ஆளாக்கியுள்ளது.  சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அவர் செய்த ஆய்வுகள் சிறப்பான வையாகும். சிந்து சமவெளி எழுத்து களுக்கும், தொன்மையான திராவிட மொழி எழுத்து களுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகம்தான் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். சிந்து வெளி முத்திரைகளில் இடம் பெற்றுள்ள தமிழ் மன்னர்களின் பெயர்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அவைகளை எல்லாம் விளக்கி சிந்துசமவெளி பண்பாடும் சங்க இலக்கியமும் என்ற அருமையான ஓர் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

மேலும், அவர் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் முந்தியவை என்பதை நிரூபித் துள்ளார். பழந்தமிழ் மன்னர்களைப் பற்றிக் கல்வெட்டில் கண்ட செய்திகளை விளக்கியுள்ளார். தமிழக வரலாற்றில் தொன்மைக்காலப் பகுதி மீது ஒரு வெளிச்சம் பாய்ச்சியவர்தான் அய்ராவதம் மகாதேவன். அவருடைய கல்வெட்டியல் துறை ஆய்வும், பங்களிப்பும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

அவருடைய மறைவு தமிழக வரலாற்றுப் புலத்திற்கு பேரிழப் பாகும். அவருடைய மறைவிற்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறது.

-  விடுதலை நாளேடு, 27.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...