ஞாயிறு, 16 ஜூன், 2019

பாஜக ஆட்சியில் வரலாற்று திரிபுவாதங்கள், மதவாதக்கருத்துகளுடன் இருந்த பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பு: ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் தகவல்

ஜெய்ப்பூர், ஜூன்16, ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தின்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு புகழ்பாடுவ தாகவே பாடத்திட்டங்களில் பல் வேறு வரலாற்றுத் திரிபுவாதங் களுடன் இருந்தன என்று ராஜஸ் தான் மாநில கல்வித்துறை அமைச் சர் கூறியுள்ளார்.

அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் அரசு அமைந்த பிறகு பாஜக ஆட்சியில் செய்த வரலாற்று திரிபுவாதங்கள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

12ஆம் வகுப்பு வரலாற்று புத்தகம்


விடுதலை போராட்டத்தில் சாவர்க்கரின் பங்கு அளப்பரியது என்றும், அவரின் வீர தீர செயல் களினால், அவருக்கு வீர் பட்டம் வழங்கப்பட்டது என்றும் முந்தைய ஆட்சியின் பாடத்திட்டத்தில் இருந்தது.

தற்பொழுது மாற்றியமைக்கப் பட்ட புதிய புத்தகத்தில், விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்றே சாவர்க்கர் குறிப்பிடப்படுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் செல்லுலார் சிறையில் சாவர்க்கர் கொடுமைப்படுத்தப்பட்ட விதம். தன்னை விடுதலை செய்யக்கோரி, 1911, நவம்பர் 14இல் சாவர்க்கர் இரண்டாவதாக தாக்கல் செய்த கருணை மனுவில், தான் போர்ச் சுகலின் மகன் என்று குறிப்பிட்டி ருந்தது.

விடுதலை செய்யக்கோரி, சாவர்க்கர் 4 கருணை மனுக்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்திருந்தது. 1942ஆம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக் கத்தை எதிர்த்தார். மகாத்மா காந்தி யின் (1948) மரணத்திற்கு பிறகு, காந்தியை கொல்ல, சாவர்க்கர் கோட்சேவிற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப் பட்டார் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

12ஆம் வகுப்பு அரசியல்


அறிவியல் புத்தகம்


பணமதிப்பிழப்பு நடவடிக்கை யால், பயங்கரவாத அமைப்புகளிடம் பணப்புழக்கம் குறைந்து,அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. வெளியுறவு கொள்கையில் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன என்று பழைய புத்தகத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது.

Casteism and Communalism  பிரிவில், இஸ்லாமிய அமைப்புகளான ஜமாத் இ இஸ்லாம், சிமி உள்ளிட்ட அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக குறிப்பிடப்பட்டி ருந்தன

மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய புத்தகத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன. மக்களை பிரித்தாளும் அமைப்புகள் பட்டியலில், இந்து மகாசபை அமைப்பின் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது.

புதிய பாடப்புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் நிபுணர்களின் ஆலோ சனையின்படியே மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. கடந்த பா.ஜ.க. ஆட்சியில், ஆர்எஸ் எஸ் அமைப்பின் புகழ் பாடுவது போன்றே மாணவர்களின் பாடங் கள் இருந்ததாக ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தொடசாரா கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு, 16.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...