செவ்வாய், 8 அக்டோபர், 2019

500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்றூண் கண்டெடுப்பு

கொடைக்கானல், அக்.8- கொடைக்கானல் மலைப்பகுதி யில் காலப்போக்கில் புதைந்து போனதாகக் கூறப்படும் அரை யப்பட்டி கிராமத்தில் கண் டெடுக்கப்பட்ட நுழைவுவா யில் தூணும் அடுக்கம் கிரா மத்திலுள்ள கல்தூணும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலகட்டத்தில் உருவாக்கப் பட்டவை என்பதை தொல்லி யல்துறையினர் உறுதி செய் துள்ளனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, அடுக்கம், பேத் துப்பாறை, பூம்பாறை, செண் பகனூர் பைரவர் கோயில் பகுதிகளில் ஆதிமனிதர்கள், பூர்வ குடிமக்கள் வாழ்ந்ததற் கான ஆதாரங்கள் கண்டறியப் பட்டன. அடுக்கம் கிராம வனப்பகுதிக்குள், காலப்போக் கில் புதையுண்ட அரையபட்டி கிராமம் சமீபத்தில் தொல்லி யல் ஆய்வாளர்கள் குழுவால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
அந்த கிராமம் தங்கள் மூதாதையர் வாழ்ந்த கிராமம் என்று கூறி அங்கிருந்த நடு கல்லை எடுத்து வந்து அடுக்கம் கிராம மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படும் அந்த தூணை ஆய்வு செய்த தொல் லியல்துறை அதிகாரிகள், அரையப்பட்டி கிராமத்தின் கல்தூணும், அடுக்கம் கிராமத் தின் தூணும் ஒரே காலகட் டத்தில் உருவாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
 - விடுதலை நாளேடு, 8.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

  Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...