வெள்ளி, 12 ஏப்ரல், 2019

திருப்பத்தூர் அருகே கி.பி. 11ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு



திருப்பத்தூர், ஏப்.12  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்கொண்ட கள ஆய்வில் 2 நடுகற்கள், பழங்கால மண் உருவ பொம்மைகள் மற்றும் கற்கோடரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியது:

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது உடையாமுத்தூர் கிராமம். இந்த ஊரில் ஏரிக்கரை ஓரத்தில் திறந்தவெளியில் பெரிய வேப்பமரத்தின் அடியில் இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. அவற்றை இந்த ஊர்மக்கள், வேடியப்பன் என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர்.

இந்த இரண்டு நடுகற்களும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகற்கள் ஆகும். அவை தலா 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. வலது கையில் நீண்ட கத்தியையும் இடது கையில் வில்லையும் கொண்டு காணப்படுகின்றன. இது, போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவாக அவர்களின் உருவத்தைக் கல்லில் செதுக்கி வழிபடும் பழமையான மரபாகும். இந்த நடுகற்களுக்கு எதிரில் இரண்டு பெரிய மண் குதிரைகள் உள்ளன.

இக்கோயிலுக்கு அருகில் நிலத்தை உழுதபோது ஏராளமான மண் பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்தையும் இக்கோயிலுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். அவற்றை கெட்டியான மண்ணைக் கொண்டு உறுதியாகச் செய்துள்ளனர். ஆண், பெண், குதிரை, காளை மாடுகள் என ஏராளமான உருவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இம்மண் உருவங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சில பொம்மைகளின் கழுத்தில் மணிமாலைகளை மண்ணால் செய்து வைத்திருப்பது பழந்தமிழரின் கலைநுட்பத்தை வெளிப் படுத்துகிறது. இக்கோயிலுக்கு எதிரே உள்ள சிறுகாட்டுப் பகுதியில் உருவம் இல்லாத கற்களையும் வேடியப்பன் என்று வணங்கு கின்றனர்.

இங்கு பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய சில கற் கோடரிகளும் காணப்படுகின்றன. இந்த இடத்தை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல புதிய வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும் என்றார் அவர்.

-  விடுதலை நாளேடு, 12.4.19

வியாழன், 4 ஏப்ரல், 2019

உடுமலைப்பேட்டையில் கல்திட்டைகள்!



வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை தொல் பழங்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம்,  மண்ணியல் காலம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தொல் பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பங் களை அடிப்படையாகக் கொண்டு, பழைய கற்காலம், நுண் கற்காலம்,  புதிய கற்காலம், பெருங்கற்காலம் என நான்கு பிரிவுகளாக வரலாற்று ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர்.

பழைய கற்கால மனிதர்கள், காடுகளில்,  இயற்கைச் சூழலோடு தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். அவர்களின் உணவுத்  தேவைக்காக காட்டிலிருக்கும் விலங்குகளை வேட்டையாடினர். உணவுக் கான முக்கியத்  தொழிலே வேட்டையாடு தலாக இருந்தது.  இதற்காக அவர்கள் பயன்படுத்திய கைக்கோடரிகள், சுரண்டை  ஆகிய கருவிகள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அமைந்திருந்தது. தொல்லியல் ஆய் வின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

பழைய கற்கால மக்களின் அடுத்த  வளர்ச்சியடைந்த நிலை, இடைக் கற்காலம்  அல்லது நுண் கற்காலம் என்று அழைக்கப் படுகிறது.  இவர்களும் உணவுக்காக விலங் குகளை வேட்டையாடுவதை பிரதானமாக கொண்டிருந்தனர். அதற்காக, அதிக அள வில் கல் ஆயுதங்களை பயன்படுத்தியிருப் பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர்  வாழ்ந் திருக்கலாம் எனவும் அறியமுடிகிறது.  குகைகளிலும், குகை போன்ற பாறைகளின் அடிவாரங்களிலும் இவர்கள் வாழ்ந்து உள்ளனர். தங்களுடைய உணவைத் தேடி, விலங்குகளுடன் விலங்குகளாக காடுகளி லும், மலைகளிலும் அலைந்து திரிந்தனர்.  கல் ஆயுதங்களைத் தவிர,  மற்ற உலோகங் களின் பலன் தெரியாத இவர்களின் காலத் துக்குப் பிறகு வாழ்ந்தவர்கள்,  புதிய கற் காலத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படு கின்றனர்.

புதிய கற்கால மனிதர்கள்


ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ்ந் தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வளர்த்தனர். வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்ட நிலையில் இருந்து முன்னேறி, வேளாண்மை செய்யவும், அதில் கிடைக்கும் தானியங்களை உட்கொள்ளவும் பழகியிருந்தனர்.  விலங்குகளை வேட்டை யாடிக் கொல்வதற்கு,  கையில் பிடிப்பதற்கு வசதியாக கூர்மையான கருவிகளை உரு வாக்கினர். கைக்கோடரி, கல் சுத்தி போன்ற கருவிகள் ,அகழாய்வுகளில் கண்டுபிடிக் கப்பட்டு உள்ளன. இவ்வகை மக்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெருங் கற்காலம்...


நான்காவது பிரிவைச் சேர்ந்த மக்கள் பெருங் கற்காலத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறது. இவர்களின் காலம் கி.மு. 3200-ல் தொடங்கி கி.மு.1500 வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இறந்தோரைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்கள் எலும்புகளை புதைத்த இடத்தைச் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு சூழப்பட்ட கல்திட்டைகளை உருவாக்கினர். இவற்றை  பெருங்கற்கால சின்னங்கள் என்று வரலாற்று ஆய்வா ளர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும்பா லான பகுதிகளில் மலையின் உச்சியில் உள்ள சமமான பகுதிகளில் கல்திட்டை கள் காணப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மாவடப்பு, குழிப்பட்டி, கோடந் தூர்  உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இவ்வகையான கல் திட்டைகள் அதிக அளவில் காணப்படுன்றன. இந்த கல் திட்டைகள் ஆயிரக்கணக்கான  ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இவை ஈமச்சின்னங்கள் என்று  குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு கள், நடுகற்கள், சுவடிகள் போன்ற சாசனங் கள் மூலம்,  இதன் வரலாறு அறியப்படுகிறது.

பலகை வடிவிலான பாறைக் கற்களால் இவை உருவாக்கப்பட்டு, சிறிய  அளவி லான வீடுபோல அமைந்துள்ளது.  மலை களின் உச்சியில் உள்ள சமதளப்பரப்பில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கல்திட் டைகளில் யாருடையது என்ற விவரங்கள் இல்லை.  அந்தந்த இடங்களை வைத்து எந்த இனக் குழுவினர் வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

பக்கத்துக்கு ஒரு கல் பலகையை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலகைக் கற்களை வைத்து,  மேல்புறம் அகலமான பலகைக் கல்லை வைத்து இவை மூடப்பட்டுள்ளன. கல் திட்டையின் கிழக்குப் பக்கமுள்ள பலகைக் கல்லில் வட்ட வடிவில் இடுதுளை ஒன்று காணப்படுகிறது. `யு’ வடிவிலும் துளை யிடப்பட்டுள்ளன.

இதேபோல,  உடுமலை அடுத்த கொங் கல் நகரில் இரண்டு கல்திட்டைகளும், கோட்டமங்கலம் கிராமத்தில் இரண்டு கல்திட்டைகளும் காணப்படுகின்றன. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தொல்லியல் ஆர்வலர் சதாசிவம்  கூறும்போது, “கொங்கு மண்டலத் தில் அரிதாகத் தென்படும் பெருங்கற்கால சின்னமான கல்திட்டைகளைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை பண்டைய மக்களின் சான்றுகளாக உள்ளன. எனவே, அடுத்த தலைமுறையினருக்கு பெருங்கற்கால மனி தர்கள் பற்றிய ஆய்வுக்கு இவை பெரிதும் உதவும். இவற்றைப் பாதுகாக்கத் தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

- விடுதலை ஞாயிறு மலர் 23. 3 .2019

வியாழன், 21 பிப்ரவரி, 2019

பழனி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய வகைக் காசுகள் கண்டெடுப்பு



பழனி, பிப். 19- பழனி அருகே ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட அரிய வகை காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழனி அருகே உள்ள போடுவார் பட்டி கிராமத்தில் ஆறு முகம் என்பவர் வீட்டில் சில பழைய காசுகள் கிடைத்துள்ளன. இதனை தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் மற்றும் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வரலாற்றுத் துறைத் தலைவர் இராஜேஸ்வரி, பழனியாண்டவர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனை வர் இரவிச்சந்தின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக் காசுகள் கோப்பரகேசரி வர்மன் முதலாம் இராஜராஜா சோழன் கால காசுகளாகும். தஞ்சையை தலைநக ராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் ராஜராஜ சோழன் கி.பி 985 ஆம் ஆண்டு அருள்மொழிவர்மர் என்ற பெயருடன் ஆட்சிப் பொறுப்பேற்று கி.பி.1014 முடிய 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார். கி.பி 993இல் இலங்கையின் மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

இலங்கை போரில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் இந்த காசுகளை வெளியிட்டுள்ளார். தங்கம் மற்றும் செம் பினால் வெளியிடப்பட்ட இந்தக்காசுகள் இலங்கை சோழ சாம்ராஜ்ய த்தின் ஒரு பகுதி என்பதை குறிக்கிறது.1 .5. செ.மீ விட்டமும் 0.5. மி.மீதடிமனும் கொண்ட இந்த காசுகள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கம் போர்வீரர்கள் வேலுடன் இருப்பது போலவும் மற்றொரு புறம் இராஜராஜ சோழனின் முத்திரை பொறிக்கப் பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டவை.

இராஜஇராஜ சோழனின் இந்த காசுகள் பழனிப் பகுதியில் பரவலாக கிடைக்கின்றது.இதே போல தங்கத்திலான காசுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவை இதுவரை கிடைத்த தில்லை. தங்கத்தின் மதிப்பு அதிகம் என்பதால் இந்தக் காசு களை மக்கள் ஆப ரணங்களுக்காகவும், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அழித்திருக்கலாம். செம்பினால் ஆன நாணயங்கள் மட்டும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. பண்டைத் தமிழ் மக்கள் வணிகத்திற்காக நாணயங்களை அதிக அளவுபயன்படுத்தி வந்துள்ளது நாகரிகத்தில் தமிழர் கள் சிறந்து விளங்கியுள்ளதை காட்டுகின்றது. மேலும் இந்த நாணயங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க முயற்சிக்கப் படும் என்று தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 19.2.19

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

வன்முறைத் தீவிரவாதிகள் யார்?

திடுக்கிடும் தகவல்கள்!




குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாதம் என்ற உடனேயே நமக்கு நினைவில் வருவது தாடிவைத்த குல்லாய் அணிந்த நபர்கள்தான், அதாவது இஸ்லாமியர்கள்.  பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே தீவிரவாதிகள் என்றாலே இஸ் லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

1.  ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006

2.  மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் 2006

3.  சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006

4.  மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006

5.  மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007

6.  மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் 2007

7.  நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006

8.  பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006

9.  ஜல்னா குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2008

10. பூனே குண்டுவெடிப்பு 2008

11. கான்பூர் குண்டுவெடிப்பு 2004

12. கன்னூர் குண்டுவெடிப்பு 2007

13.  பன்வேல் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2007

14. தானே குண்டுவெடிப்பு 2007

15.  வாஷி நவிமும்பை குண்டுவெடிப்பு 2009

16.  கோவா குண்டுவெடிப்பு 2010

இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்:-

1.  சுனில் ஜோஷி - மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 - 2003 வரை பதவி வகித்தவர்.

2.  சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 -  2007

3.  தேவேந்திர குப்தா ஜார்கண்ட்  ஜமாதாடா - ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக்.

4.  லோகேஷ் சர்மா - ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம்.

5.  சந்திரகாந்த லாவே -  ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம். 6. சாமியார் அசிமானந்தா-  மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர்.

7.  ராஜேந்திர சமுந்தர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா.

8.  முகேஷ் வாசனி - குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் - கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.

9.  ராம் காலசங்காரா - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

10. கமல் சவுகான் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

11. சாமியாரினி பிரஞ்யா சிங் - ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்

12. ராஜேந்திர சவுதிரி - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

13. ராம்பாலக் தாஸ் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

14. லக்சுமந்தாஸ் தன்சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

15. ராம் மனோகர் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

16. குமார் சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

17. தேஜ்ராம் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

18. சந்தீப் உபாத்தியாய்

19.  சரன் உபாத்தியாய் சகோதரர்கள் -  இருவருமே ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தாக்கள்

20.  ராகுல் பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

21.  உமேஷ் தேஷ்பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தா

22.  சஞ்சய் சவுதிரி -அபினவ்பாரத்

23.  ஹிமான்சு பான்சே - அபினவ்பாரத்

24.  ராம்தாஸ் முல்கே -அபினவ்பாரத்

25.  நரேஷ் ராஜாகேடாவர் -சனாதன் சான்ஸ்தா

26.  யோகேஷ் வித்துல்கள் -சனாதன் சான்ஸ்தா

27.  மாருதி பாங்கே -சனாதன் சான்ஸ்தா

28.  துப்தேவர் குருராஜ்- சனாதன் சான்ஸ்தா

29.  மிலிந்து எகாவோட் -சனாதன் சான்ஸ்தா

30.  மாலேகவுடா பாட்டில் -சனாதன் சான்ஸ்தா

31. கோவா தேவாயலத்தில் குண்டுவைக்கச்சென்ற போது தவறுதலாக குண்டுவெடித்து நிகழ்விடத்திலேயே உடல் சிதறி மரணமடைந்தார்.

32.  யோகேஷ் நாயக் -சனாதன் சான்ஸ்தா

33.  விஜய் தோல்கர் -சனாதன் சான்ஸ்தா

34.  வினாயக் பாட்டில்- சனாதன் சான்ஸ்தா

35.  பிரசாத் ஜுவேகர் -சனாதன் சான்ஸ்தா

36. சாரங்க் குல்கர்னி, தனஞ்சய் அப்டேகர், திலிப் மாங்கோகர், ஜெய்பிரகாஷ் அன்னா, ருத்ரா பாட்டில் பிரசாத் அஷ்டேகர் சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள். 37.   ராஜேஷ் கட்கரி -சனாதன் சான்ஸ்தா

38. விக்ரம் பாவே இவர்கள் அனைவர் மீதும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு பிணை வழங்கப் பட்டு சுதந்திரமாக வலம் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர இந்துத்துவ அமைப்பினரின் வன்முறை வெறியாட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை

1980 மோர்தாபாத் கலவரம் 400 பேர் மரணம்

1983 நெல்லிலே அஸ்ஸாம் கலவரம் 10000 படுகொலை

1987 ஹாசின்புரா வன்முறை 100பேர் படுகொலை

1989 பாகல்பூர் வன்முறை 1000 பேர் படுகொலை

1992 மும்பை கலவரம் 3000 பேர் படுகொலை

2002 குஜராத் கலவரம் 5000 பேர் படுகொலை 2013 முசாபர் நகர் வன்முறை 180 பேர் படுகொலை

1980 முதல் இன்றுவரை பாஜக-  ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ அமைப் பினர் இஸ்லாமியர்களை திட்டமிட்டு படு கொலை செய்த பட்டியல் மேலே உள்ளது. மேலும் மாட்டுக்காக பல இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர், பல பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன.

நாட்டில் 15 இடங்களில் குண்டுவைத்து அந்த பழிகளை இஸ்லாமியர்கள் மீது போட்டு அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்தனர், மேலும் போலியான என்கவுன்ட்டர் அதுவும் இஸ்லாமியர்களை மட்டும் என்கவுன்ட்டர் செய்தனர்.

ஆனால் பல குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் பெயரில் பிடித்துச்சென்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இன் றளவும் விசாரணைக்கைதிகள் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் வாடுகின்றனர். இது குறித்து உச்சநீதிமன்றமே மாநில அரசுகளையும் மத்திய அரசையும் கண்டித்துள்ளது. அய்தராபாத் குண்டுவெடிப்பிற்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் சிறையி லடைக்கப்பட்ட பல இஸ்லாமிய இளைஞர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் கழித்து  சிறையில் இருந்து குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் முதல் தீவிரவாத செயல் காந்தியைக் கொன்றதாகும். அதைச்செய்தது இந்துமகாசபையைச்சேர்ந்த நாதுராம் கோட்சே. ஆனால் அவரை தேசபக்தராக மாற்றும்  நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது.

-  விடுதலை ஞாயிறு மலர், 29.12.18

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வரலாற்றில் இன்று 12.12.2018

**
   
டிசம்பர் 12  கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.

1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.

1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது.

1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.

1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.

1862 – யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.

1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.

1901 – அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.

1911 – இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

1939 – குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.

1940 – இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.

1941 – அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.

1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.

1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

1948 – மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.

1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.

1979 – ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.

1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அஹமது டாயா புதிய அதிபரானார்.

1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.

1988 – லண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

1991 – ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

*பிறப்புகள்*

1863 – எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)
1927 – ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)
1949 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்
1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு மெற்ற அமெரிக்கர்
1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1931 – சௌகார் ஜானகி, தென்னிந்திய நடிகை

*இறப்புகள்*

1940 – தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)
2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)

*சிறப்பு நாள்*

கென்யா – விடுதலை நாள் (1963)

வியாழன், 13 டிசம்பர், 2018

மேல்சாந்தியாக புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர்

கேரள மாநிலம் கொச்சின்_தேவஸ்வம்போர்டின் கீழுள்ள கோவிலுக்கு வரலாற்றில் முதல்முறையாக #புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டார்!

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பெருமாள் கோயிலில் இருக்கும் ஆதிநாதர்

உத்திரமேருர் சுந்தரவதன பெருமாள் கோயிலில் இருக்கும் ஆதிநாதர் உருவம்.வைணவ கோயிலில் சமண உருவம் எப்படி வந்தது?

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...