வியாழன், 19 அக்டோபர், 2017

இட ஒதுக்கீடு

கல்வியில் இட ஒதுக்கீடு 2006 ஆம் ஆண்டில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று கணக்கிட்டு மூன்றாண்டுகளில் 27 சதவிகிதம் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்-பட்டது.
ராஜஸ்தானில் இருக்கக்கூடிய பி.ஜே.பி. அரசு அந்த மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 68 சதவிகிதமாக உயர்த்தியிருந்தால் அந்த அளவை வரவேற்கலாம். இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 14 சதவிகிதம் என்று சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பதற்கு சட்டத்தில் இடமில்லை; பி.வி.நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது பொருளாதார அடிப்படையில் 10 சதவிகிதம் என்று ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு பி.பி.மண்டல் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. இதற்காக பத்து ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்தியா முழுவதும் (டில்லி உள்பட) 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியது. வேறு சில அமைப்புகளும் அவ்வப்போது நமக்கு ஒத்துழைப்பை நல்கி வந்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...