வியாழன், 26 அக்டோபர், 2017

திராவிடர் கழகத்தின் போராட்ட முறை பஞ்சாபிலும் வெடிக்கிறது! இந்தி எழுத்துகள் தார் பூசி அழிப்பு!



பஞ்சாப், அக்.26 பஞ்சாப் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் பெயர்ப்பலகை வரிசையில் முதலிடத்தில் பஞ்சாபி மொழியிலேயே  எழுதப்படவேண்டும் என்பதை வலி யுறுத்தி போராட்டம் வெடித்துள்ளது.

பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த மொழிப்போர் இயக்கமாக உருவாக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றுள்ள இந்தி, ஆங்கில மொழிகளில் எழுதப் பட்ட எழுத்துகள் தார்பூசி அழிக்கப்பட்டன.

தள் கல்சா, சாட் (அமிர்தசரசு), பிகேயூ (கிராந்திகாரி) மற்றும் மால்வா இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஓர் இயக்கமாக   உருவாக்கப்பட்டுள்ளது. பஞ்சாபி மொழியை முத லிடத்தில் எழுத வலியுறுத்தி போராட்டங்கள் அவ் வியக்கத்தின் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

பஞ்சாபி மொழிக்கான அவ்வியக்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர்ப்பலகைகளில் உள்ள  இந்தி, ஆங்கில மொழி எழுத்துகளைத் தார் பூசி அழித்துள்ளனர்.

பத்திண்டா ஃபாரிட்கோட் தேசிய நெடுஞ்சாலை (எண் 15)யில் 25 கி.மீ. தொலைவில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்தி, ஆங்கில மொழி எழுத்து களை தார் பூசி அழித்தார்கள்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பஞ்சாபி மொழிக்கான அவ்வியக்கத்தினர் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி பரப்புரை செய்து வந்தார்கள். ஏற்கெனவே இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற் றுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில் பத்திண்டா துணை ஆணையர் திப்ரவா லக்ராவை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், எதுவுமே நடக்கவில்லை. ஆகவே, போராட்டத்தில் குதிக்க வேண்டியதாயிற்று என்று பஞ்சாபி மொழிக்கான இயக்கத்தினர் கூறு கிறார்கள்.

தார் பூசி அழிக்கும் போராட்டத்தின்போது காவல்  துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அதனால், போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு தரப்பினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டனர்.

தள் கால்சா துணைத் தலைவர் ஹர்தீப் சிங் கூறியதாவது:

“அனைத்து மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில்பஞ்சாபில்,பஞ்சாபிமொழிக்குமுன் னுரிமை அளிக்கப்பட வேண்டும். எங்கள் கோரிக்கையை பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்று செயல்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.

இதனிடையே, மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மால்வா இளைஞர் கூட்டமைப்பின் தலைவரான லக்பீர் சிங், லகா சிதானா, ஹர்தீப் சிங் மற்றும் சிலர் மீது நெகியன்வாலா காவல்நிலையத்தில் பொதுச்சொத்துக்கு சேதப்படுத்திய சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: 1952, 1953, 1954 ஆம் ஆண்டுகளில் ரயில்வே நிலையங்களில் பெயர்ப் பலகைகளில் இந்தி முதல் இடத்தில் இருந்ததை எதிர்த்து அதனைத் தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆணைப்படி திராவிடர் கழகம் நடத்தியது. திருச்சி ரயில்வே ஜங்சனில் தந்தை பெரியாரே அழித்தார். அதன் விளைவு இப்பொழுது தமிழ் முதலிடத்திற்கு வந்துள்ளது. அதன் எதிரொலியை பஞ்சாப் இளைஞர்களிடம் இப்பொழுது பார்க்க முடிகிறது!
-விடுதலை நாளேடு, 26.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...