செவ்வாய், 14 நவம்பர், 2017

85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்க இந்திய சிறுமி முயற்சி



துபாய், நவ. 13- துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஒரே வருடத்தில் 80 மொழிகளில் பாடல் பாடுகிற ஆற்றலை பெற்றுள்ளார். இன் னும் 5 மொழிகளில் பாட கற் றுக்கொண்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடி அதுதான் கின்னஸ் சாதனை ஏட்டில் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது. இந்த சாதனையை முறிய டித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.

அடுத்த மாதம் 29-ஆம் தேதி இவர் 85 மொழிகளில் பாட திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

முதன் முதலாக அன்னிய மொழி என்கிற வகையில் ஜப்பானிய மொழி பாடலைத்தான் கற்றேன். எனது தந்தையின் தோழி, ஜப்பானை சேர்ந்த சரும நோய் மருத்துவ நிபுணர். அவர் ஓராண்டுக்கு முன்னர் தான் துபாய்க்கு வந்தார். 

அவர் வீட்டுக்கு வந்தபோது ஜப்பா னிய பாடல் பாடினார். எனக்கு அந்த பாடல் ரொம்பவும் பிடித் தது. அதை கற்றேன். வழக்க மாக 2 மணி நேரத்தில் ஒரு பாட லைப் பாட கற்றுக்கொண்டு விடுவேன். உச்சரிப்பதற்கு சற்று எளிதாக இருந்தால், இன் னும் விரைவாக கற்றுக்கொண்டு விடுவேன். பெரிய பாடலாக இல்லாத பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் பாட கற் றுக்கொண்டு விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இவரைப் பொருத்தவரை யில் ஜெர்மன், பிரெஞ்சு, ஹங் கேரி மொழி பாடல்கள்தான் கடினமாக இருக்கிறதாம்.  

- விடுதலை நாளேடு,13.11.17

1 கருத்து:

  1. Casino in Las Vegas: Guide & Info on the Best Casinos in
    Find a Casino 출장마사지 in Las Vegas and goyangfc play games like blackjack, roulette, craps septcasino and more! We've got the nba매니아 complete mens titanium wedding bands gaming experience, exclusive restaurants,

    பதிலளிநீக்கு

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...