நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும்.
நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும்.
மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.
மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என "சங்கரஸ்மிருதியும்" கட்டளையிடுகின்றது.
"ஏக ஏவ க்ருஹம் கச்சேத் - ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ:
ஃப்ராத்ருஷ்வேகய் புத்ரிண(2-2-16)
இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப் படுத்தியுள்ளனர்.
"நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. இந்தச் சௌகரியத்தை உபயோகப்படுத்தி வீட்டின் மூத்தமகன் குறைந்தது மூன்று திருமணமாவது செய்துக் கொண்டார். பல வேளைகளிலும் வரனாக இருந்த மூத்த மகன் முடமானவனாக இருப்பார் அல்லது மத்திய வயது கடந்தவனாக இருப்பார். இவ்விதம் ஒருவருவருக்கு பதினொன்றும் பதிமூன்றும் வயதுடைய ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பர்".
ஆதாரம் - (கண்ணீரும் கனவும், வி.டி. பட்டதிரிபாடு - பக்கம் 120).
- டக்லசு முத்துக்குமார் முகநூல் பதிவு,16.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக