பார்ப்பன நம்போதிரி அப்பன்மார்கள் வேற்று ஜாதி உறவைத் தேடிச் சென்றபோது நம்பூதிரிப் பெண் குட்டிகள் இல்லங்களில் இருள்படர்ந்த அறை மூலைகளில் இருந்து நரைத்தனர்.
1885இல் மலபாரில் மட்டும் 1017 இல்லங்கள் இருந்ததாக லோகன் ஆதாரப்படுத்தியுள்ளார்.
இக்காலகட்டத்தில் கேரளத்தில் மொத்தமாக 1500 இல்லங்களில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட வாழ்க்கை கிடைக்காத கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்தது.
ஆதாரம் - (ஜாதிப் பாகுபாடும் கேரள வரலாறும் - பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம்: 159).
இதற்கும் மேலாக சிறு வயதுள்ள கன்னிப் பெண்களை வயதான நம்பூதிரிகள் திருமணம் புரிவதும் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் சிறுவயது விதவைகள் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தனர்.
பல நம்பூதிரிப் பெண்களுக்கும் திருமணம் புரியும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.
பல வேளைகளிலும் பெண்கள் கன்னிகளாகவே மரணமடைய வேண்டிய நிலை இருந்தது.
"1912இன் கணக்குப்படி 1000 நம்பூதிரிமார்களில் 516 பேர் திருமணம் புரிந்தவரும் 457 பேர் திருமணம் செய்யாதவரும் ஆவர். பெண்களில் 1000 க்கு 393 பேர் திருமணம் புரிந்தவர்களும் 387 பேர் திருமணம் புரியாதவர்களும் 230 பேர் விதவைகளுமாவர்"
ஆதாரம் - (கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால நிலைமையும் - டாக்டர். கெ.பி. ஸ்ரீதேவி).
-டக்ளசு முத்துக்குமார், முகநூல் பதிவு,16.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக