திங்கள், 5 பிப்ரவரி, 2018

பார்ப்பனர் தூண்டிவிட்ட கலகம்!

திருச்சிற்றம்பல முதலியார் என்ற சிவத்தொண்டர் திருத்துறைப் பூண்டி வந்தபோது அவ்வூர் மக்கள் அவரை அங்கேயே தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர் தங்கி இருப்பதற்காக குகை என்று அழைக்கப்பெற்ற மடம் ஒன்றை கட்டிக் கொடுத்தனர். அத்துடன் வெளியூர்களிலிருந்து அந்த மடத்திற்கு வருகிறவர்கள் அனைவரும் உணவு உண்பதற்கும் வசதி செய்து தரப்பட்டது. தமிழ் சைவத்துறவிகள் சோழ நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்த இது போன்ற குகைகளில் தங்கி இருந்து சிவத்தொண்டு ஆற்றி வந்தனர். விரதம், சீலம், ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய தமிழ் சைவத் துறவிகளின் செல்வாக்கும் மேம்பாடும் வளர்ச்சியடைவதைக் கண்டு சோழப் பேரரசனுக்கு குருமார்களாக விளங்கியவர்களும், கோளகிமடம் பிட்சா விருத்தி மடம் முதலிய சைவாதீனங்களுக்கு தலைவர்களா

யிருந்தவர்களும் ஆகிய வடநாட்டு பிராமணர்கள், பொறாமை கொண்டு அவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டனர். சைவ மடங் களுக்கு எதிராக மக்கள் கூட்டமாகச் சென்று தமிழ் சைவத் துறவிகள் வாழ்ந்த குகைகளை இடித்துத் தரைமட்டமாக்கினர். அங்கு இருந்த பொருட்களைச் சூறையாடினர். குகைகளுக்கான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிராமணர் அல்லாத சைவமடங்களுக்கு எதிராக பிராமணர்களால் தூண்டிவிடப்பட்ட இக்கலகம் மூன்றாம் குலோத்துங்கனின் 22ஆம் ஆட்சி ஆண்டில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டியில் இக் கலகம் நடைபெற்ற இரண் டாண்டுகளுக்குப் பின் திருச்சிற்றம்பல முதலியார் இறந்துவிட்டார். அவருக்குப் பின் இருதயத்தேவன் என்பவர் மடத்தின் தலைவர் ஆனார்.

(முனைவர் அ.இராமசாமி அவர்களின்

“தமிழகப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் (பக்கம் 218-219)

- விடுதலை ஞாயிறு மலர், 27.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...