• பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபாரம் செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளா மல், சட்டம் என்றால் அனைவரும் சம மாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை யில் 1773 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு புதிய சட்டத்தை எழுத தொடங்கியது.
• சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795-ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
• 1804ஆம் ஆண்டு பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது
• 1813ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது
• பார்ப்பான் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில், யார் குற்றம் புரிந்தவராக இருப்பினும், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது..
• சூத்திரப்பெண் திருமணம் முடிந்த அன்றே, பார்ப்பனருக்கு பணிகள் பல செய்ய 7-நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். என்பதை ஆங்கிலேய அரசாங்கம் தனது அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
• பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லார்ட்மெக்காலேயின் சீரிய முயற்சி யின் விளைவாக, சூத்திரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
• சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835இல் ஆங்கிலேய அரசு தனது அரசாணை யின் மூலம் முடிவிற்கு வந்தது.
• 1835-ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காரு வதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
• 1868 ஆம் ஆண்டு இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
• 1865-இல் உடன்கட்டை ஏறுவதை சட்டம் போட்டு தடுத்தனர். இருப்பினும் சட்டத்திற்கு உடன்படாமல் பல இளம்பெண்கள் எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். 1997-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் எரியும் நெருப்பில் தள்ளி ஒரு பெண் கொல்லப்பட்டாள். அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் ஊடகவெளிச்சம் இல்லாமல் அவ்வப்போது இது போன்ற கொடூரங்கள் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.
- விடுதலை ஞாயிறு மலர், 17.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக