சனி, 15 செப்டம்பர், 2018

கொங்கு சேர மன்னர் கால அரிய நாணயம் கண்டறிதல்



திண்டுக்கல், செப்.15 திண்டுக்கல் மாவட் டம், பழனியில் கொங்கு சேர மன்னர் காலத்தைய அரிய செம்பு நாணயம் கிடைத்துள்ளது. பழனியைச் சேர்ந்த பழங்கால நாணய சேகரிப்பாளர் சுகுமார் போஸ். இவர், பல்வேறு இடங்களுக்குச் சென்று பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். இந்த நிலையில், இவர் சேகரித்த நாணயங்களில் கொங்கு சேர மன்னர்கள் காலத்தைய செம்பு நாணயம் இருந்ததை, பழனி தொல்பொருள் ஆய் வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்தார். இது குறித்து நாராயணமூர்த்தி கூறி யதாவது: செம்பு உலோகத்தால் செய் யப்பட்ட இந்த நாணயம் ஒழுங்கற்ற வட்ட வடிவத்தில் 3.200 கிராம் எடையுடனும், 1 செ.மீ. குறுக்குவட்ட அளவிலும் உள்ளது. ஒருபுறம் கொங்கு சேர அரசின் முத்திரை பொறிக்கப் பட்டுள்ளது. இடது கோடியில் வில் லும், அடுத்து யானையும், அதற்கடுத்து பனை மரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுமே பண்டைய சேர நாட் டின் அரச முத்திரைகளாகும். நாணயத்தின் மேற்புறம் மங்கள விளக்கும், ஓரங்களில் புள்ளிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் மற்றொரு புறம் பலிபீடத்தின் குறுக்கே வைக்கப்பட்டது போன்று இரு வாள் கள் உள்ளன. இடது மற்றும் வலது ஓரங்களில் மங்கள விளக்குகள் உள் ளன. ஓரங்களில் மொத்தம் ஒன்பது புள்ளிகள் உள்ளன.

சேர நாட்டையும் (தற்போதைய கேரளம்), தமிழகத்தின் கொங்கு பகு திகளையும் ஆண்டு வந்த மன்னர்கள், கொங்கு சேரர்கள் என அழைக்கப்பட் டனர். சங்க கால சேரர்கள் வழியிலும், தமிழகத்தின் சோழ, பாண்டிய, மன்னர் களின் ரத்தக் கலப்புகளின் வழியிலும் வந்த கொங்குச் சேர மன்னர்களின் நாணயங்கள் அரிதாகவே கிடைக் கின்றன. அந்த வகையில், இந்த நாணயமும் அரியவகையாகும். பொதுவாக, கொங் குச் சேர மன்னர்கள் நாணயங்களில் யானை உருவம் அதிகமாக இருக்காது. கொங்கு சேர மன்னர்கள் வெளியிட்ட இந்த நாணயங்களில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால், இது அரிய வகை நாணயமாகும். இந்த நாணயம் எந்த மன்னர் ஆட்சியில் வெளியிடப் பட்டது என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

கி.பி.14 ஆம் நூற்றாண்டில் கொடுங் களூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் ரவிவர்ம குலசேகரப் பெரு மாள் ஆவார். இவர் காலத்தில் இந்த நாணயம் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றாலும், உறுதிப்படுத்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்
- விடுதலை நாளேடு, 15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...