வியாழன், 1 நவம்பர், 2018

கீழடி: முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கையை அமர்நாத்தே தாக்கல் செய்ய உத்தரவு கிடைத்த பொருட்கள் 2,500 ஆண்டுகள் பழைமையானவை

அமெரிக்க ஆய்வகத்தில் உறுதி!




மதுரை, நவ.1 கீழடியில் கிடைத்த பொருள் கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் பழை மையானவை என, கலிபோர்னியா ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் இரு ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை, முந்தைய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனே தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் பிரபாகரபாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

இந்திய தொல்லியல் துறை இயக் குநர் ஜெனரல் கடந்த அக். 3 இல் ஓர்உத்தரவைபிறப்பித்துள்ளார்.அதில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் வசம் உள்ள சீலிடப்பட்ட பொருள்கள் மற்றும் ஆய்வு தொடர்பான ஆவணங்களை, புதிதாக நியமிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுப்பணிகளை மேற்கொண் டவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் சம்பந்தப்பட்ட ஆய்வு தொடர்பான விசயங்களை நன்கு அறிந்தவர். புதிதாக வந்துள்ளவருக்கு ஏற்கெனவே நடந்த ஆய்வுகள் குறித்து தெரியாது.

ஆய்வின்போது இருந்தவரே அறிக்கை தயாரித்தால் தான் உண்மை யான தகவல்கள் வெளிவரும். இங்கு பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய எழுத் துக்கள் கிடைத்துள்ளன. இவை அசோகர் காலத்திற்கும் முந்தையது.

எனவே, தமிழர் நாகரீகமே முதன்மையானது என்பதால் அதை சிதைக்கும் நோக்கில் இதுபோன்று மத்திய அரசு நடக்கிறது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து அமர்நாத் ராமகிருஷ்ணனே ஆய்வை தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்குரை ஞர் ஆஜராகி, கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் அமெரிக்காவின் கலிபோர்னி யாவிலுள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. முதல்கட்ட ஆய் வறிக்கை கிடைத்துள்ளது. அதில், சுமார் 2,300 முதல் 2,500 ஆண்டுக்கும் முந்தைய பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வணிக தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாழிகளில் மீன் உள்ளிட்ட பல வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். இலங்கை நாகரீகத்துடன் கூடியவர்களும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆதன், திஷ்ரன், உதிரன், சாந்தன், இறவன், குலிறன், மாயூரான் போன்ற பல தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு பணிகளில் அமர் நாத் ராமகிருஷ்ணனும் தொடர அனு மதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதையடுத்து, கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வா ராய்ச்சியில் ஈடுபட்ட அமர்நாத் ராம கிருஷ்ணன், இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையை தயாரிக்க வேண்டும். அவரது அறிக்கையை 7 மாதத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

- விடுதலை நாளேடு, 1.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...