சனி, 4 மே, 2019

பெரம்பலூர் அருகே 400 ஆண்டு பழைமையான கல்செக்கு கண்டுபிடிப்பு



பெரம்பலூர், மே 4- பெரம்பலூர் அருகே சுமார் 400ஆண்டு பழமையான கல் செக்கு. வரலாற்று ஆராய்ச்சியாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆகியோரால் கண்டறியப் பட்டது மிகுந்த ஆச் சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறெங்கும் இவ்வளவு பழமையான செக்கு கண்டறியப் படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள சிவாலயங்களின் திருவிளக்கு பூஜை வழிபாடுகளுக்காக கல்செக்கு தானமாக செய்து கொடுக்க ப்பட்டுள்ளது கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தெரியவருகிறது.

இதில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன், அரியலூர் மாவட் டத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செவ்வேல் ஆகி யோர் இயற்கை வேளாண் சாகுபடியாளரான எளம்பலூர் உப் போடை கார்த்திகேயன் என்பவருடன் பாளையம் கிராமத்திற்கு வந்து, அங்கு ஆர்சி தொடக்கப்பள்ளி, செபஸ்தியார் மேடை ஆகியவற்றின் நடுவே சுமார் 7அடி உயரமுள்ள 2 கல்செக்குகள் இருப்பதை கேள்விப்பட்டு நேரில் வந்து ஆராய்ச்சி மேற் கொண்டனர். அந்த ஆராய்ச்சியில் அவர்களுக்கு சுமார் 400 ஆண்டுப் பழமையான கல்செக்கு என்ற கல்வெட்டுத் தகவல் இருந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பிறகு ஆராய்ச்சியின் முடிவில் வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை, வேலூர் ஆகிய கிராமங்களில் அப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு விளக்கு பூஜைகளுக்கு எண்ணெய் வழங்க உபயமாக வசதி படைத்த நபர்களால் அக்காலத்தில் அந்தந்த ஊர்களின் பயன் பாட்டிற்காக கல்செக்கு செய்து கொடுத்திருப்பது தெரிய வருகிறது. இதில் மற்ற ஊர்களில் 20ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப் பட்டாலும் பாளையத்தில் மட்டும் 393ஆண்டுகள் பழமை வாய்ந்த 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி பாளையம் கல்செக்கிலுள்ள கல்வெட்டை ஆராய்ந் தால் அதில், சோம சிறீ சாலிவாகன சகாப்தம், கிபி 1626 தை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கி ழமை குரும்புலியூர் பஞ்சநதீஸ்வரர் தர்மசம்ரதனி அம்மன் நித்திய அபிசேகத்திற்காக, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வீரம ரெட்டியார் குமாரர் சுப்பி ரெட்டியார் என்பவரே இந்த கல் செக்கினைச் செய்து கொடுத்திருக்கிறார். இந்தக் கல் செக்கைப் பயன்படுத்தும் பொதுமக்கள், அதிலிருந்து பெறப்படும் எண்ணெயில் அரைப்படி எண்ணெய் வீதம் குரும்பலூர் பஞ்சந்தீஸ்வரர் கோவிலுக்கு கொடையாக வழங்க வேண்டும் என அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவை சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஒருஅடி உயர திரிசூலம் கல்வெட்டாக செதுக்கப் பட்டுள்ளது. 7அடி உயரத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உள்ளதாக வடிவமைக்கப் பட்டுள்ள கல்செக்கு அதிநவீனமானதாகக் காணப்படுகிறது. அது தற்போது பராமரிப்பின்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இதனைப் பாதுகாத்தால் அடுத்து வரும் சந்ததிகளுக்கு தமிழர்கள் கல்செக்கினைப் பயன்படுத்திய விதம், தெரியவரும். இதுபோன்ற 400ஆண்டு பழமையான கல்வெட்டு வேறு இடங்களில் இதுவரை கண்டறியப் படவில்லை எனத் தெரிவித்தார்.

-  விடுதலை நாளேடு, 4.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...