புதன், 29 மே, 2019

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் கருவிகள் கண்டெடுப்பு



கிருஷ்ணகிரி, மே 24- பர்கூர் அருகே 50 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய கற்கால மனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வ ரன் மற்றும் அவருடைய ஆய்வு மாணவர்கள் மஞ்சுநாத் மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்கள் முனைவர் பட்ட ஆய் வின் ஒரு பகுதியாக பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளி அருகே உள்ள ஏர்கெட் என்ற சிறிய மலையின் மேல் பகுதியிலும், மலையைச் சுற் றியுள்ள நிலப்பகுதிகளிலும் மீள் ஆய்வு செய்தனர்.

இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதா வது:- கிருஷ்ணகிரி மாவட்டத் தின் தொல்லியல் வரலாற் றினை முனைவர் பட்ட ஆய்வுக்காக நானும், எனது மாணவர்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தொல்லியல் கள ஆய்வு செய்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பாலேப்பள் ளியின் வடக்கு புறத்தில் உள்ள ஏர்கெட் என்ற மலைப் பகுதியிலும், அதனை சுற்றி யுள்ள நிலப்பகுதியிலும் கள ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது அப்பகுதியில் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப் பட்ட காலத்தை சேர்ந்த மேல்நிலை பழைய கற்காலம் அதாவது 50 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட கல் ஆயு தங்களை சேகரித்தோம். இங்கு தற்போது கிடைத்துள்ள கைக் கோடாரிகள், வட்டக் கருவிகள், கிழிப்பான்கள், சிறிய கைக்கோடாரிகள், கோடாரிகள், சுரண்டிகள் மற்றும் முற்றுப்பெறாத கல் ஆயுதங்கள் அதிக அளவில் சேகரித்துள்ளோம்.

இதுபோன்ற கல் ஆயுதங் கள் சுமார் 60 முதல் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்காங்கே பரவி காணப்படுகிறது. இதனை வைத்து இப்பகுதி மேல்நிலை பழைய கற்கால மனிதனின் கல் ஆயுதம் செய்யும் இட மாக இருந்திருக்கிறது என் பதை திட்டவட்டமாக கூற முடிகிறது. மேலும் இதுபோன்ற கல் ஆயுதங்கள் பர்கூர், குண் டலகுட்டா மற்றும் கப்பல் வாடி போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்கு கிடைத்துள்ள மேல்நிலை பழைய கற்கால கல் ஆயுதங் கள் அனைத்தும் குவாட்ஸ் வகை கற்களை கொண்ட கரடு முரடான உருவ அமைப்பை உடைய தாக காணப்படுகிறது. இவ் வாறு வரலாற்று பேராசிரியர் கூறினார்.

- விடுதலை நாளேடு 24. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...