திருப்புவனம்,ஆக.16, கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழ டியில் அய்ந்தாம் கட்ட அகழாய்வு ரூ.47 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் நீண்ட கட்டுமானம் கொண்ட கோட்டைச்சுவர், 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப் பட்டது. இந்த இடத்தை சுற்றியே கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கட்டிட சுவர் கிடைத்திருப்பதால் இப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்திருப்பது உறுதியாகி உள்ளது. வேறு பொருட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப் பில் அகழாய்வு பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் வாய் அகன்றும், உட்புறம் குழி போன்ற அமைப்புடன் கூடிய பழங்கால மண் கிண் ணம் போன்ற பாத்திரம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. இதை சுடுமண் பாத் திரம் என்றும் கூறுகின்றனர். சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கிண்ணம் உட்புறம் கருப்பு, வெளிப்புறம் சிவப்பு வண்ணத்தில் உள் ளது. இது பண்டை காலத்தில் உணவு சாப்பிட பயன்படுத்தப் பட்ட மண் கிண்ணமாக இருக்கலாம் என கருதப் படுகிறது. நீண்ட சுவர், சுடுமண் பாத்திரம் போன்ற பொருட் களை தேடித்தான் கடந்த சில நாட்களாக தமிழக தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் மண் கிண்ணம் கிடைத்திருப்பது தொல்லி யல் ஆய்வாளர்களை உற்சா கப்படுத்தியுள்ளது.
- விடுதலை நாளேடு, 16. 8. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக