மதுரை, அக்.23 கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை, அய்ந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை, மத்திய தொல் லியல் துறையும், அடுத்த, இரண்டு கட்ட அகழாய்வுகளை,தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண் டன. அய்ந்தாம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த வாரத்தில் முடிந்தன. அதனால், அகழாய்வுக் குழிகளை, தார்ப்பாய்களால் மூடி, மண் கொட்டும் பணிகள் நடந்தன.
அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52 செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதி யுடன் கூடிய, 60 செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப் பட்டது.
அது, இரண்டு குழாய் களால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன. குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண் ணீரை வழங்கும் வகையில் அமைக் கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன. இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள் இடப்பட் டுள்ளன.
இந்த குழாய்களின் கீழ்ப்பகுதி யிலும், அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது.
அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி பொருத்தப்பட்டிருந்தது. வடி கட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப் பகுதி, இரண் டடுக்கு பானைக்குள் செல்கிறது.
இவ்வாறு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், வெவ் வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும், வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும். இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப் பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி காணப்பட்டது.
இது, தண்ணீரை எளிதாக வடிய வைக்கும் திறந்தவெளி அமைப்பாக இருக்கலாம்.தமிழக அகழாய்வு களில், இதுவரை கிடைக்காத வகையிலான, இந்த வடிகால் அமைப்பு களின் பயன்கள் குறித்து, அடுத்த கட்ட அகழாய்வுகளில் தான் தெரிய வரும். மேலும், அந்த பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்த போது, கூரை ஓடுகள் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றின் தொடர்ச்சியில், செங்கல் கட்டடப் பகுதி இருந்தது.அது, இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட, கட்டடப் பகுதி யின் தொடர்ச்சி.
அதன் தொடர்ச்சி யை, அடுத்த கட்ட அகழாய்வில் தான் கண்டறிய முடியும்.
'கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய் வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ள, இந்த சுடுமண் குழாய்கள் மற்றும் கட்டடப் பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.'சங்க காலத்தில், வைகை நதிக்கரையில் வாழ்ந்த தமிழர்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த, பல்வேறு தகவல்கள் வெளிப் படும்' என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது, தமிழக வரலாற்றின், புதிய திருப்பங்களுக்கு மிகப்பெரிய சான்றுகளாக இருக்கும் என்பதால், அடுத்தகட்ட அகழாய்வக்காக, வர லாற்று ஆய்வாளர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.
மதுரை தமிழ் சங்கத்தில்கீழடி தொல்பொருட்கள்
கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த, தமிழக தொல்லியல் துறை முடிவு செய் துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், அய்ந்தாம் கட்ட அகழாய்வுப் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது; அக ழாய்வுக் குழிகள் மூடப்பட்டு விட் டன.
ஆறாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம், தமிழக அரசு கோரியுள்ளது.
இந்நிலையில், கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, அங்கேயே காட்சிப்படுத்த வேண் டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
அதையேற்ற தமிழக தொல்லியல் துறை, கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை, பலரும் பார்க்கும் வகையில், மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
பார்வையாளர்களின் வருகை யை பொறுத்து, கண்காட்சி நடத்தும் நாட்களை முடிவு செய்ய, அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.
- விடுதலை நாளேடு 23 10 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக