வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கூரை ஓடுகள் கண்டுபிடிப்பு

 

புதுக்கோட்டைஆக. 2- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானத்தின் மேற்கூரைக்கு பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொற்பனைக் கோட்டையில்தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் கடந்த 3 நாட்களாக அக ழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்அகழாய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களில் மண்ணிலிருந்து பழங்கால பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டு வருகின்றன.

தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் .மணிகண்டன்தொல்லியல் ஆர்வலர்கள் ஆனந்தன்இளங்கோ.மணிகண்டன் உள்ளிட்டோர் பொற்பனைக்கோட்டை மேற்கு சுவரின் மீது 1.8.2021 அன்று மேலாய்வு பணியில் ஈடுபட்டனர்அப்போதுகட்டுமானத்தின் மேற்கூரைக்காக பயன்படுத்தப் பட்ட உடைந்த நிலையிலான ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து .மணிகண்டன் கூறியதுகோட்டையின் மதில் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் தங்குவதற்காக 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை யான ஓடுகளால் வேயப்பட்ட அரண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேற்கூரையின் மீது ஓடுகளை அடுத்தடுத்து பொருத்து வதற்கு ஏற்ப ஒவ்வொரு ஓட்டிலும் காடிகள் அமைக்கப் பட்டுள்ளனசங்க காலத்திலேயே இவ்வாறு நேர்த்தியாக வடிவமைத்து இருப்பது வியக்கும் வகையில் உள்ளது.

மேலும்சில ஓடுகள் துளையிடப்பட்டு உள்ளதால்இப்பகுதியில் இருந்த உருக்கு ஆலையில் இருந்து கம்பிகள் தயாரித்து துளையில் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறதுஇதுபோன்ற ஓடுகள் இந்த மாவட்டத்தில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லைஇது மாதிரியான ஓடுகள் இங்கு ஏராளமாக புதைந்துள்ளன. 3 அடி ஆழத்துக்கு அகழாய்வு செய்த பிறகே கட்டுமானங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்றார்.

இந்நிலையில்அகழாய்வு பணியை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சென்று பார்வையிட்டார்.

அண்ணா பல்கலைதுணைவேந்தர் பதவிக்கு 160 பேர் விண்ணப்பம்

சென்னைஆக.2 அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, 160 பேர் விண்ணப்பித்து உள்ளனர்அவர்களின் பட்டியலை வெளியிடாமல், 9ஆம் தேதி நேர்காணல் நடத் தப்பட உள்ளது.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைதுணைவேந்தராககருநாடக மாநி லத்தை சேர்ந்தபேராசிரியர் சூரப்பா பதவி வகித்தார்அவரின் பதவிக்காலம்ஏப்ரல் 11இல் முடிந்ததுஇதையடுத்துபுதிய துணைவேந்தரை தேர்வு செய்யவதற்கான அறிவிப்பு வெளியானது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைதுணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில்ஓய்வு பெற்ற அய்..எஸ்., அதிகாரி ஷீலாராணி சுங்கத் மற்றும் சென்னை பல்கலைமுன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் இடம் பெற்ற தேடல் குழு அமைக்கப்பட்டதுஇந்த குழுவின் சார்பில்துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டனமொத்தம், 160 பேர் விண்ணப்பித்துள்ளனர்அவர்களில், 10 பேரை தேர்வு செய்துஆளுநரிடம் அளிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதுஇதற்கான நேர்காணல், 9ஆம் தேதி நடக்க உள்ளது.

அண்ணா பல்கலைக்குஇந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே துணைவேந்தராக தேர்வு செய்யப் பட வேண்டும் என்பதில்தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

- விடுதலை நாளேடு, 2.8.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

  Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...