• Viduthalai
ஜெயங்கொண்டம், ஜூலை 26 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கழிப்பறைக்காகத் தோண்டிய குழியில் பழைமையான கருப்புநிற மண்குடுவை கண்டெடுக் கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்ட நிலை யைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னழகு. இவர் தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்டு வதற்காகக் குழி தோண் டியுள்ளார். அப்போது
2 அடி ஆழத்தில் பழை மையான மன்னர்கள் காலத்து கருப்பு நிற மண்குடுவை இருந்தது. இது அரை அடி உயரம் இருந்தது.
இதுகுறித்து பொன் னழகு உறவினர் திருநாவுக்கரசு வருவாய்த் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அங்கு வந்த வட்டாட்சியர் திருநாவுக் கரசு, கிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணம் மண் குடுவையைக் கைப் பற்றி சிங்கம்புணரி வட் டாட்சியர் அலுவலகத் திற்கு எடுத்துச் சென் றனர்.
இதுகுறித்து வட் டாட்சியர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘’பழைமை யான குடுவையாக இருப் பதால் தொல்லியல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய் தால் மட்டுமே குடுவை யின் காலம் போன்றவை தெரியவரும்‘’ என்றார்.
குடுவை கிடைத்துள்ள பகுதியில் மேலும் தொல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அப் பகுதியை அகழாய்வு நடத்த வேண்டுமெனத் தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக