புதன், 11 ஆகஸ்ட், 2021

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வளைந்த நிலையில் சங்ககால பழைமையான இரும்புக் கம்பி!

 

சென்னைஆக.5 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை யில் நேற்று (4.8.2021) மேற்கொள்ளப்பட்ட 6-ஆவது நாள் அகழாய் வின்போது இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளது.

சங்ககாலப் பழைமை வாய்ந்ததமிழ்நாட்டில் எஞ்சியுள்ள ஒரே கோட் டையான பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு திறந்தநிலைப் பல் கலைக் கழகத் தொல்லி யல் துறை பேராசிரியர் .இனியன் தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6-ஆவது நாளாக நேற்று (4.8.2021) அகழாய் வுப் பணி நடைபெற்றது.

அப்போது, 10 செ.மீநீளமுள்ளதுருப்பிடித்த நிலையில் இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளதுஅதன் ஒரு பகுதி வளைந்த நிலையில் இருந்தது.

அகழாய்வின்போதுஏராளமான கருப்புசிவப்பு பானை ஓடுகளும்சிறிய அளவிலும்துகள் களாகவும் இரும்பு உருக் குக் கழிவுகள் கிடைத்து வந்த நிலையில்நேற்று (4.8.2021) இரும்புக் கம்பி கிடைத்திருப்பது ஆய் வுக்கு கூடுதல் வலு சேர்க் கும் விதமாக இருப்பதாகத் தொல்லியல் ஆய்வா ளர்கள் தெரிவித்தனர்.

அகழாய்வு நடை பெற்று வரும் இடத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் மு.பூவதிமருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன்இருக்கை மருத் துவ அலுவலர் இந்தி ராணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்

அப்போதுவேப்பங் குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராஜாங்கம்தொல்லியல் ஆய்வுக் கழகப் பொறுப்பாளர் எம்.ராஜாங்கம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்அப்போதுபொற்பனைக் கோட்டையின் சங்ககால வரலாறு குறித்துப் பேரா சிரியர் இனியன் விளக் கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

  Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...