புதன், 28 ஜூலை, 2021

கொற்கை அகழாய்வுப் பணி சங்கு வளையல்கள், மோதிரங்கள் கண்டெடுப்பு

 

தூத்துக்குடி, ஜூலை 28 கொற்கை பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழிற் கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தூத்துக்குடி மாவட் டம் சிறீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்ச நல்லூர் மற்றும் ஏரல் அருகே உள்ள சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழ் நாடு அரசு சார்பில் அக ழாய்வுப் பணிகள் தொடங் கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஏரல் அருகே உள்ள கொற்கையிலும் அகழாய்வுப் பணிகள் நடத்தப்படுகின்றன.

கரோனா பரவல் அதி கரித்ததின் காரணமாக ஆதிச்சநல்லூர், சிவ களை, கொற்கை ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் முதல் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்று பரவல் படிப்படி யாக குறைந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அங்கு தொல்லியல் துறை யினர் பல்வேறு இடங் களிலும் பள்ளங்களை தோண்டி, அகழாய்வுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆதிச்சநல்லூர், சிவ களையில் இரு கட்டங் களாக நடைபெற்ற அக ழாய்வில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. கொற்கையில் பழங்கால செங்கல் கட்டுமான அமைப்புகள், சங்கால் செய்யப்பட்ட வளையல் கள், மோதிரங்கள் உள் ளிட்ட ஏராளமான பழங் காலப் பொருட்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

கொற்கை மற்றும் மாரமங்கலம் பகுதிகளில் 17 குழிகள் அமைக்கப் பட்டு அகழாய்வுப் பணி கள் நடைபெறுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட சங்கு வளையல்கள் மிகவும் அருமையாக வடி வமைக்கப் பட்டுள்ளன. கொற்கையில் சங்காலான 2 மோதிரங்களும், மார மங்கலத்தில் 4 மோதிரங் களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 

மேலும் சுடுமண் மணிகள், பச்சை, ஊதா, மஞ்சள் நிற கண்ணாடி மணிகள், கருப்பு நிற கண்ணாடி வளையல்கள் ஆகியவை கண்டறியப் பட்டுள்ளன. 

இதன் அடிப்படை யில் இந்த பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழிற் கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1 கருத்து:

  1. If could be} an outstanding characteristic or great user expertise for the desktop 3D printer customers (STL, guaranteed 3D Levoit Humidifiers printable, and so forth.) we are going to characteristic it. With their neighborhood curating every uploaded file, all 3D scanned historic and art objects are 3D printable without further enhancing. Designers and makers can stage up their profiles by earning numerous badges. Publishing models, sharing makes, generating likes, and different activities reward members with Prusameters – factors, that can be be} exchanged for real products, including filament.

    பதிலளிநீக்கு

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

  Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...