செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கொந்தகை அகழாய்வு: முதுமக்கள் தாழிக்குள் இரு சிறிய பானைகள்


திருப்புவனம்,ஆக.16- சிவகங்கை மாவட் டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடி, கொந்தகை, அகரத்தில் மண் பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவுத் தொழிலில் பயன்படும் தக்கிளி, கற்கோடரி, சிறிய செப்பு மோதிரம் உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கொந்தகையில் ஒரு முதுமக்கள் தாழியில் இறுதிச் சடங்குக்கு பயன்படுத்திய கூம்பு வடிவ பானை, சாதாரண பானை என 2 பானைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த முதுமக்கள் தாழியின் அடியில் மனிதஎலும்புகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதுவரை கொந்தகையில் 25 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு 13 தாழிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

  1. Tic-Tac-toe (Tac-toe) - Titanium White Dominus
    Tic-toe is one of the heaviest and most commonly used durum wood rinners. It titanium hammer has a diameter columbia titanium jacket that is approximately 3" long, titanium exhaust tips is approximately 2" long, is used in titanium touring many titanium ore forms.

    பதிலளிநீக்கு

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...