செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நகர நாகரீகத்தின் முக்கியக் குறியீடு: பொற்பனைக் கோட்டையில் சங்க கால செங்கல் கட்டுமான கால்வாய் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது


புதுக்கோட்டை, ஆக.14  தமிழ னின் தொன்மையான வர லாற்றை பறை சாற்றும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் சங்ககாலத்து கட்டுமானம் கிடைத் துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே மகிழ்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டிலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையான பொற் பனைக் கோட்டையில் பல்வேறு தொல்லியல் தட யங்கள் கிடைத்து வந்தன.2005 ஆம்  ஆண்டு குடவாயில் பாலசுப்பிர மணியம் மேற்கொண்ட மேற் பரப்பு ஆய்வின் மூலமாக சங்ககால செங்கல் மற்றும் பானை ஓடுகள் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தினார்.அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர்  சு. ராஜவேலு மற்றும் தமிழ் பல்கலைக்கழக அந்நாளைய மாணவர்கள் தங்கதுரை, பாண்டியன் ஆகி யோரால் கி.பி இரண் டாம் நூற் றாண்டை சேர்ந்த தமிழிக் கல் வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின்ஆ.மணி கண்டன், கரு.ராசேந்திரன்  உள் ளிட்ட குழுவினர் பொற்பனைக் கோட்டை பகுதியில் தொடர்ச்சி யாக மேலாய்வு செய்ததைத் தொடர்ந்து இரும்பு உருக்கு தொழிற்சாலை, இரும்பு உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள், உருக்குக் கலன்கள் உள்ளிட் டவை அடையாளம் காணப் பட்டன.இதனைத் தொடர்ந்து கோட்டையின் மேற்பரப்பில் இருக்கும் கட்டுமானங்களில் கொத் தளங்கள் உள்ளிட்டவை இருப்பதை யும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  ஆய்வுக் கழகத்தினர் கண்டுபிடித்த நிலையில்,   அகழ்வாய்வு தொடங்கிய பிறகு  சுடுமண் கூரை ஓடுகள், மணிகள், இரும்புக்கருவிகள் இருப்பதை கண்டறிந்து அகழ் வாய்வு இயக்குநர் பேரா. இனியனிடம் புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினரால் ஒப்ப டைக்கப்பட்டது.

இந்நிலையில் பொற்பனைக் கோட்டை அகழ்வாய்வு கடந்த 13 நாட்களாக தமிழ்நாடு பல் கலைக்கழக பேராசிரியர் இனியன் தலைமையிலான அகழ்வாய்வு குழுவினர் மூலம் நடந்தது. இதில் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட செங்கல் கட்டு மான நீர்த்தட கால்வாய் அமைப்பு அகழ்வாய்வு குழியில் வெளிப் பட்டு இருப்பது வெளிக்கொணரப் பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இது வரை நடந் துள்ள அகழ்வாய்வு களில் வாழ்விடம் சார்ந்த ஒரே கட்டுமானமாக பொற் பனைக் கோட்டை இருப்பதை இந்த கட்டுமான அமைப்பு உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி நகர நாகரிகத்திற்கான முக்கிய குறியீடாக தொல்லியல் துறை யினரால் பார்க்கப்படும் கால் வாய் அமைப்பு கிடைத்திருப்பது, பொற் பனைக் கோட்டையின் மீது சிறப்பு கவனத்தை திருப்பி யுள்ளது.

கீழடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் மட்டுமே இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்டிருக் கும் நிலையில் கோட்டை மற்றும் அதுசார்ந்த வாழ்விடம் குறித்த எவ்வித ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக தஞ்சாவூர் வல்லம் பகுதியில் இருந்த சங்க காலக் கோட்டை முழுவதுமாக சிதைந்து விட்ட நிலையில் சங்ககால பாடல்களில் கூறப் பட்ட அனைத்து அவயங்களும் கொண்ட ஒரே கோட்டையாக பொற்பனைக்கோட்டை இருப்பது இந்த அகழ்வாய்வின் முதல் கட்டத்திலேயே வெளிப் பட்டிருக்கிறது.தற்போது அகழ் வாய்வு செய்யப்படும் இடத் திற்கு மேற்குப் புறத்தில் அமைந் திருக்கும் அரண்மனை மேட்டுப் பகுதியில் மிகமுக்கியமான கட்டுமானங்கள் இருக்கும் வாய்ப்புள்ளது.

தமிழர்களின் நிர்வாக அமைப்பைவெளிப் படுத்தும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் இருந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தும் ஒரு இடமாக பொற்பனைக் கோட்டை அமைந்துள்ளது.தொடர் ஆய்வுகள் மூலம்முக்கிய கட்டு மானங்கள் பழங்கால பொருட்கள் ஆயுதங்கள் இன் னும் பிற முக்கிய தொல் பொருட்கள் கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...