செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் குதிர் கண்டுபிடிப்பு

 

தூத்துக்குடி, செப். 19- தூத்துக் குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்று வரும் அக ழாய்வுப் பணியில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பழங்காலக் குதிர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொற்கையில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு வாய்ந்த துறைமுகம் இருந்துள் ளது. பாண்டிய மன்னர் களின் ஆளுகைக்கு உட் பட்ட பகுதியான இங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி யும், இங்கிருந்து ஏற்று மதியும் நடந்துள்ளது.

1966ஆ-ம் ஆண்டு முதல் 1969ஆ-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் நாகசாமி குழுவினர் இங்கு அகழாய் வுப் பணிகளை மேற் கொண்டனர்.

இந்நிலையில், சுமார் 52 ஆண்டுகளுக்கு பின் னர் தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை சார் பில் கொற்கையில் அக ழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு உள்ளிட்ட

100-க்கும் மேற்பட்ட பழங் கால கட்டுமானங்கள் மற் றும் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது சுமார் 5 அடி உயரமுள்ள குதிர் கண்டுபிடிக்கப் பட்டுள் ளது. இதை அலுவலர்கள் கயிறு கட்டி மேலே எடுத் தனர். நெல் உள்ளிட்ட தானியங்களை சேமித்து வைக்க இக்குதிர் பயன் படுத்தப்பட்டதா என தொல்லியல் அலுவலர் கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எழுத்தா ளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ‘‘ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகியவை உலக நாகரீகத்தின் தொட்டில் என்பதற்கு சான்றாக தொடர்ந்து பழங்காலப் பொருட்கள் கிடைத்து வரு கின்றன. கொற்கையில் துறைமுகம் தொடர்பான பெரிய ஆலை இயங்கி வந்திருக் கலாம்’’ என்றார்.

இளையான்குடி அருகே 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழி, கீறல் குறியீடுகள் கண்டெடுப்பு

 

இளையான்குடி, செப். 21- சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியு டன் கூடிய முதுமக்கள் தாழி கள், கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப் பட்டன. இப்பகுதியை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல் லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான முனைவர் ந.ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

முனைவென்றி என்பது கொடு மணலுக்கு இணையான ஊர். இங்குள்ள வயல்வெளி, கொழஞ்சித் திடல், ஆவடியாத்தாள் கண் மாய் பகுதிகளில் 100 ஏக்கரில் பெருங்கற்கால தொல்சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.

இங்கு மூடியுடன் கூடிய முது மக்கள் தாழிகள், கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், கீறல் குறி யீடுகள், செங்கல் வட்டு சில்கள்,

சிறிய கலயங்கள், கற் கருவிகள், மனித எலும்புகள் காணப்படுகின் றன. இந்த தொல்பொருட்களை ஆய்வு செய்ததில், அவை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி, சிவகளை அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் பல இங்கும் காணப்படுகின்றன.

இப்பகுதியை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வுசெய்தால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும். இதன் மூலம் தமிழ னின் பெருமையை உலகறியச் செய் யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், திருச் சுழி அருகே உள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமார் 400 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் செ.ரமேஷ், ராமநாத புரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுருவுக்குத் தக வல் தெரிவித்தார்.

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...